newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

எம் ஊர்செழிக்க தேரேறிவரும் விநாயகனே …..தேர்த்திருவிழா சிறப்புப்பக்கம்

13082012pokishamLஅருள் வளம் நிறைந்த புண்ணியபூமி நீர்வேலி.இத்திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அரசகேசரிப்பிள்ளையாரின் பெருமைகளை அறியாதவர்கள் இல்லை.தமிழ் வேந்தர்கால வரலாற்றோடு தொடர்புபட்ட இக்கோவிலின் சிறப்பு தனித்துவமானது.காலத்துக்கு காலம் இக்கோவிலை அடியவர்கள் புனருத்தானம் செய்து பேணிவருவது பாராட்டுக்குரியது.நீர்வையம்பதியில் சைவஆசாரசீலர்களும் புலமைமிக்கபுலவர்களும் பண்டிதர்களும் கலைத்துவம் மிக்க விஷ்வகுல கலைஞர்களும் வாழ்ந்தவரவது பெருமைக்குரிய விடயமாகும்.மங்கலத்தின் அடையாளமாகிய வாழைமரம் இந்த  ஊரின் மேன்மைக்கச்சிறப்புச்செய்கிறது.ஞானமுதல்வனாக விளங்கும் அரசகேசரிப்பிள்ளையார் தேரேறி வரும் இத்திருநாளில் அடியவர்கள் அனைவருக்கும் நல்லருள் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேன்.

                                                                                                     நன்றி

                                                                                            –சொல்வேந்தர் திரு.ஆறுதிருமுருகன் அவர்கள்

……………………………………………………………………………………………………………………..

laliதேர்ச் சிற்பக்கலைக்கு முன்னோடியான தேர்………………

வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரின் இரதோற்சவம் இவ்வாண்டு செப்ரெம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெறுகின்றது. இவ்வாண்டு இரதோற்சவ நாளில் ஆலயத்தின் பெருமைகளையும் விநாயகரின் சிறப்புக்களையும் எடுத்தியம்பும் வகையில் அமைந்த ‘அரசகேசரியான் அமுதம்’ என்ற நூல் வெளிவருவதும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

எமது ஊரின் சிறப்புக்கு மாத்திரமல்ல யாழ்ப்பாணத் தமிழருடைய வரலாற்றுப் பெருமைக்கும் காரணமாக விளங்குவது. ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் கோவில் ஆகும். யாழ்ப்பாண அரசர்களுடைய செல்வாக்கிலேயே இங்கு இரட்டை மூலஸ்தானங் கொண்ட கோவில்கள் நிறுவப்பட்டன. அவ்வகையில் எமது ஆலயம் விநாயகருக்கான கருவறையையும் சிவானாருக்கான கருவறையையும் கொண்டு விளங்குகின்றது.

விநாயகப் பெருமான் அரசகேசரிப் பிள்ளையார் (ராஜசிம்ம கணபதி) என்ற மூர்த்திக்குரிய சிறப்புப் பெயருடன் விளங்குகின்றார். சிவனார் பாலாம்பிகை சமேத வைத்தீசுவரப் பெருமானாக விளங்குகின்றார். இங்குள்ள தல விருட்சம் பவள மல்லிகை ஆகும். திருக்குளம் திருநாவுக்கரசு நாயனாரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான கூபதீர்த்தமும் இங்கு உண்டு. இங்குள்ள தேர் ஈழத்துத் திருக்கோவில்களின் தேர்ச்சிற்பக்கலை பற்றி ஆய்வு செய்வோரால் விதந்து போற்றப்படும் சிறப்பிற்குரியது.

தேர் என்றால் திருவாரூர் தேரையே உலகினர் சுட்டுவர். அத்திருவாரூர் தேரை வடிவமைத்தவரது சந்ததி வாரிசு ஒருவரே எங்கள் ஆலயத் தேரை 1967 இல் அப்போதைய பணப்பெறுமதி 50000 ரூபாவுக்கு வடிவமைத்தார். இத்தேரில் அரசகேசரி ஆலயத்தை அமைப்பதற்காகக் கனவு கண்ட காட்சி ஆலயத்தை அமைத்து குடமுழுக்குச் செய்த காட்சி என்பன சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. முருகனுடைய தேர் 1992 இல் அமைக்கப்பட்டதாகும்.

காண்பதற்கரிய தேரோட்டைத்தைக் கண்டு களிப்புறுவோர் பாக்கியசாலிகள். உலக மக்கள் யாவரும் இதைக் கண்ணுற்று பெரும்பேறடைய புதிய நீர்வேலி இணையத்தினர் வழிசமைத்துள்ளனர். இவர்களின் ஆர்வ மேலெழுகை இச்சிறப்பு மலராகவும் முகிழ்க்கின்றது.

விநாயகப் பெருமான் திருவருள் அனைவருக்கும் உரித்துடையதாகுக.

செந்தமிழ்ச் சொல்லருவி
ச.லலீசன் (நீர்வைக்கிழார்)

 

…………………………………………………………………………………………………………………………………………..

1இன்று அரசகேசரிப்பிள்ளையாரின் தேர்த்திருவிழா. பக்தர்களெல்லாம் ஒன்றுகூடி பக்திப்பரவசமாக ஆண்டவனை அழகான தேரில் ஏற்றி வீதி  வலம் வந்து வணங்கி அருள்பெறும் நாள்.சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை மகிழ்வாக கொண்டாடும் நாள்.இந்த நன்நாளில் எமது மக்கள் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

                                                                                            நன்றி

திரு.திருவாசகம்

தலைவர்

நீர்வேலி நலன்புரிச்சங்கம்-இலண்டன்

…………………………………………………………………………………………………………………………………………….

2இன்று எமது ஊரில் மிக முக்கியமான நாளொன்றாகும்.எல்லோரும் பக்திபூர்வமாக அரசகேசரியானை வணங்கி பகைமறந்து ஒற்றுமையுடன் வடம்பிடித்து தேரிழுக்கும் நன்நாள்.எமக்கெல்லாச் செல்வங்களையும் புகழையும் அள்ளிவழங்குகின்ற எம்பெருமான் அனைவரக்கும் நல்வாழ்வு நற்பேறு கிடைக்கவேண்டும் என்று இந்நன்நாளில் இறைவனை வேண்டுகிறேன்                                                                                     நன்றி.

திரு.ஜீவா கோபாலசிங்கம்-கனடா

……………………………………………………………………………………………………………………………………..

1372782_203020839874666_944850414_n

 

 

0 Comments