எழுத்தாளர் கோப்பாய் சிவத்தைப் பாராட்டும் விழாவும் அவர் எழுதிய மாந்தர் மாண்பு என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும்
அண்மையில் கலாபூஷணம் விருது பெற்ற எழுத்தாளர் கோப்பாய் சிவத்தைப் பாராட்டும் விழாவும் அவர் எழுதிய மாந்தர் மாண்பு என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும் 15.03.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது. வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஆசியுரைகளை நீர்வை ஆலயங்களின் பிரதம குருமார்களான ஆ.சந்திரசேகரக்குருக்கள், கு.தியாகராஜக்குருக்கள், சா.சோமதேவக்குருக்கள் ஆகியோர் ஆற்றினர்.
நூலின் வெளியீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பியும் மதிப்பீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் வழங்கினர். நிகழ்வின் வரவேற்புரையை புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி ஆசிரியர் கணேசானந்தன் வழங்கினார். வாழ்த்துரைகளை கோப்பாய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அருள்ராஜ், நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.பரராஜசிங்கம் ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் மூத்த சிவாச்சாரியார்களான கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள், மட்டுவில் சி.சிதம்பரநாதக்குருக்கள், இணுவில் தா.மகாதேவக்குருக்கள் உள்ளிட்ட பல சிவாச்சாரியப் பெருமக்களும் மூத்த ஆங்கில ஆசிரியர் த.ந.பஞ்சாட்சரம் உள்ளிட்ட ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர். (புகைப்படங்கள் உள்ளே..)
0 Comments