10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஒருபக்கம் பார்க்கிறார்………..ஒரு அனுபவப்பகிர்வு

‘ஒருபக்கம் பார்க்கிறார்’ ஒரு குடைக்குள் பல, சிறு விடயங்களை சொல்ல நான் கொடுத்த பெயர்.
பார்வை -1
நான் சிறுவனாக இருக்கையில், எனது பெறோர் சபிண்டி கிரியைகளுக்கு போட்டு வரும் பொழுது ‘கல்வெட்டு’ பத்திரிகைகள் கொண்டுவருவார்கள். அந்த வயதில் அதன் முதல் பக்கத்தில் இருக்கும் ரிசு கடதாசியை தவிர எமக்கு பிரயோசனமாக எதுவும் இருப்பதில்லை. இறந்தவரின் படம், அவரின் வம்ச விருட்சம், தேவாரம் என்று எல்லா கல்வெட்டுகளிலும் ஒரே புராணம்தான் இருக்கும். எத்தனை தடவை தான் ஒரே தேவாரத்தை படிப்பது? நில்லுங்கள், ரிசு கடதாசியின் பிரியோசம் என்னவென்று யோசிக் கிறீர்களா? அது சுற்றாடல் கல்வி புத்தகத்தில் வரும் இலங்கைப் படத்தை அச்சுப்பதித்து வரைவதற்கு மிக உதவியாக இருக்கும். தேவாரத்தையும், புராணங்களையும், இறந்தவரையும் நான் உதாசீனம் செய்வதாக நீங்கள் விளங்கிக் கொள்ள கூடாது! அளவுக்கு மிஞ்சினால்…..?

இதில் பொதுவான விடயம் என்னவென்றால் இந்தக் கல்வெட்டுகளில் அநேகமானவை எனது அப்பபாவினால் எழுதப்பட்டவை. என் முன்னாலேயே ‘வாத்தியார் நல்லா எழுதி இருக்கிறார்’ என்று அவரின் திறனை பலர் பாராட்டியதுண்டு . இறந்தவரின் உறவினர் சொல்லும்படி தானே அப்பப்பாவும் எழுதலாம், ஆனாலும் அப்பப்பாவின் எழுத்துகள் ஓரிரு நாட்களில் அப்பள பொரியல்களுக்கு கீழ் மறைந்து போவதை எண்ணி சில நேரங்களில் கவலைபடுவதுண்டு. அப்பப்பாவுக்கு பதிலாக இந்த கல்வெட்டுகளை ‘அம்புலிமாமா’ புத்தகம் எழுதுபவர் எழுதினால் எப்படி இருக்கும்? கொஞ்சம் சிறுவர்கள் ரசிக்க கூடியதாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு . இந்த கல்வெட்டுப் பத்திரிகை போன்ற பத்திரிகைகள் மூலமாக ஏன் சில நல்ல விடயங்களை எம் சமூகத்துக்கு சொல்லக்கூடாது? காலத்தால் அழியாத விடயங்களை சொன்னால் எம் அன்பான, எம்மைவிட்டுப் பிரிந்த, உறவினர்களின் நினைவுப் புத்தகங்கள் கிழிந்து குப்பைக்குள் போகாமல் பாதுகாக்க முடியும் அல்லவா?

பார்வை -2

கா. போ. தர உயர்தர (A/L) பரீட்சை பெறு பேறுகள் வந்துவிடால் மாணவர்களின் சந்தோசத்துக்கும், துக்கத்துக்கும் அளவில்லை! பல்கலைகழக தேர்வு பெற்றவர்கள் மிகமகிழ்சியாகவும், தெரிவுப் புள்ளிகளை பெறாதவர்கள் மிகுந்த துக்கத்துடனும் இருபது வழக்கம். நல்ல பெறு பேறு பெற்றவர்களுக்கு பாராட்டுகள் பல எமது சமூகத்தினால் கிடைபதுண்டு – தவறில்லை! ஆனால், பல்கலைகழகத்துக்கு தேர்வு பெறாத மாணவர்களை, குறிப்பாக ஓரிரு புள்ளி குறைவால் தேர்வு பெறாதவர்களை எமது சமூகம் உற்சாகமூட்ட தவறி விடுகிறது. சில நேரங்களில் இம்மாணவர்கள் வீட்டாரின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி மனம் உடைந்து போகிறார்கள். இப்படியான மனக்குளைச்சலும், சமூகத்தின் பாராமுகமும் இவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக உள்ளது. இவர்களை பாடசாலைகளும் , பெற்றோரும் உற்சாகபடுத்தி அவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும். பல்கலைகழகம் தான் வாழ்கையின் தொடக்கமும் முடிவும் அல்ல! அது எம் வாழ்க்கை பயணத்தில் ஒரு தரிப்பு மாத்திரமே, அதில் இறங்காதவர்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் கிடையாது. பயணத்தை வெற்றிகரமாக தொடரலாம் ! ஏன் சரித்திரத்தை எடுதுப்பார்த்தால் பல்கலைக்கழகம் செள்ளதவர்களில் பலர் மிகஉன்னத வெற்றியை அடைந்திருக்கிறார்கள். உலகம் மிகப்பெரியது, முயற்சியுடன் உங்களுக்குபிடித்த சரியான துறையை தேர்ந்த்தெடுத்தால் நிற்சயமாக எல்லோரும் வெற்றி பெறலாம்! பிள்ளைகள் தமக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து வெற்றிபெற பெற்றோரின் வழிகாட்டல் மிக இன்றியமையாதது. பிள்ளைகளுக்கு தகுந்த நேரங்களில் அறிவுரைகளை கூறுவதற்கு பெற்றோர் தமது கல்வி, சமூக அறிவை வளர்த்து கொள்வது அவசியமாகும். இப்படி பெற்றோர்கள் தம் அறிவை வளர்த்துக்கொள்ளாத இடங்களில் பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை, சில நேரங்களில் பெற்றோர் சொல்லும் எதையும் அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றிருந்து , பின் ‘அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்’ என்றாகி…..இப்போது ‘அன்னையும் பிதாவும் இருந்தால் என்ன இறந்தால் என்ன’ என்றாகி விட்டது!

ஒரு சிறு கதை, ஒரு பையன், வீட்டில் ஒரு மைனா வளர்த்து வந்தான். அதன் மேல் அவனுக்கு கொள்ளைப்பிரியம். ஒரு நாள் அவன் பாடசாலை சென்றிருந்தநேரம் அந்தமைனா இறந்துவிட்டது. மதிய போசனத்துக்கு வீட்டுக்கு வந்த பையனிடம் இந்த செய்தியை அவனது தாயார் மிகுந்த பயத்துடனும், தயக்கதுடனும் தெரிவித்தாள். என்ன ஆச்சரியம், அந்தப் பையன் எந்தப் பதிலும் கூறாமல் உணவை அருந்திவிட்டு மீண்டும் பாடசாலை சென்றுவிட்டான். மாலை நேரம் மீண்டும் பாடசாலையால் வந்த மாணவன் தன் தாயிடம் ‘எங்கே மைனா?’ என்று கேட்டான். அவனது தாயாருக்கோ ஆச்சரியம், ‘அப்போதையில்லே மைனா செத்துப்போச்சு என்று சொன்னனான், நீ ஒன்றும் சொல்லாமல் போட்டு இப்பவந்து கேக்கிறாய்’ என்றாள், அதற்கு அந்த பையன் சொன்னான் ‘ நான் நினைச்சன் நைனா தான் செத்துப்போனாராக்கும் என்று!’ இப்படிதான் இப்போது உலகம் மாறிக்கொன்டிருகிறது , மைனாவுக்கு கொடுக்கும் மரியாதை கூட இப்போது நைனாவுக்கு கிடைபதில்லை!

இப்போதெல்லாம் ஐபோனை (iPhone) இருபத்திநாலு மணி நேரமும் அணைபதிலேயே நேரம் சரியாக இருக்கிறது ஐயாவையும் , அம்மாவையும் அணைத்து அன்பாக பேச எங்கே நேரம் கிடைகிறது?

இந்த இடத்தில iPhone ஐ உருவாக்கியவரை பற்றி சில வார்த்தைகள். ……உலகில் மூன்று ஆப்பிள்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தின , அவை;

One that seduced Eve, One that awakened Newton and One that Steve Jobs built.

iPhone, ஆப்பிள் (Apple) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு. ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs) துரதிஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் , ஆனால் அவர் உலகுக்கு விட்டு சென்ற iPhone, iPad போன்ற பல தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் அன்றாட தேவைகளுக்கும், தொழில்ரீதியான தேவைகளுக்கும் மிக உதவியாக உள்ளன.

இப்படியான உயர்ந்த மனிதர்களை எட்டித்தொட முடியாவிட்டாலும் ஒருகணம் எண்ணியாவது பார்ப்பது எமது கடமையாகும். இவர் போன்றவரின் முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவரும் எமது சமுதாயத்துக்கு உந்துகோலாக அமைய வேண்டும் என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிட்டுளேன்.

பார்வை -3

ஆப்பிளில் இதுவரை குந்தியிருந்த என் மனக்குரங்கு சிறிது நேரம் நீர்வேலி அரசகேசரியார் நிழலில் தங்க நினைக்கிறது………….

உலகின் முதலாவது டி.வி (T.V) நீர்வேலியில் தான் உருவெடுத்தது என்று நான் சொன்னால் என்னை பார்த்து உங்களுக்கு ஒரு ஏளனச்சிரிப்புத்தான் வரும், ஆனால் அதுதான் உண்மை! நான் சொல்வது டிவி வாத்தியார் என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கபடும் மதிப்புக்குரிய, திருவாளர் தம்பிபிள்ளை வேலுப்பிள்ளை அவர்களை. எமது டிவி வாத்தியார் எமக்காக 22.01.1925 இல் பிறந்தார். ( இதே வருடம் மார்ச் மாதம், ஸ்காட்டிஷ் பொறியியலாளர் ஜான் லோகி பேயர்ட் (John Logie Baird) முதல் தடவையாக வேலை செய்யக்கூடிய ஒரு தொலைகாடிச்சியை இலண்டனில் பொதுமக்களுக்கு காட்டினார்.) வாத்தியாரை பற்றி சில வார்த்தைகள்……..டிவி வாத்தியார் எனது தகப்பனாரை பார்க்க இடைக்கிடை வருவார். அப்படி ஒருநாள் வந்த பொழுது முற்றத்தில் விளையாடிகொண்டிருந்த என்னை பார்த்து விட்டு ‘ மகன் என்ன படிக்கிறான்’ என்று எனது அப்பாவை கேட்டார். அப்பாவும் ‘இந்த முறை ஐந்தாம்வகுப்பு ஸ்காலர்ஷிப் எக்ஸாம் எடுக்கிறான் வாத்தியார்’ என்று பதில் கூறினார். அதற்கு வாத்தியார் ‘இப்படி விளையாடினால் எப்படி பாஸ்பண்ண போறான், நீர் அவனை சீ.சீ.(தமிழ் கலவன் பாடசாலை) பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவையும், நான் மேலதிக்க வகுப்புகள் எடுக்கிறனான்’ என்றார். அப்போது நான் அத்தியாரில் படித்து கொண்டிருதேன். வேறு பள்ளிக்கூட பிள்ளை என்று பிரிவு பார்க்காது எல்லோரும் முன்னேறவேண்டும் என்ற அவர் பரந்த, முற்போக்கான மனப்பான்மைக்கு இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இவர் தன் பிள்ளை, பிறர் பிள்ளை என்று பார்ப்பது கிடையாது, உண்மையை சொன்னால் தன் பிள்ளைகளை வருத்தி பலநேரங்களில் பிறர் முன்னேற வளிவகுத்துள்ளார். இவரின் முற்போக்கு சிந்தனைகளை அந்த நேரத்தில் சிலரால் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதது வருத்தத்துக்குரிய விடயம். திரு த.ந.பஞ்சாட்சரம் ஆசிரியர் அவர்கள் இவரை ஒரு ‘திறந்த புத்தகம்’ என்று கூறியிருப்பது சாலப்பொருத்தமாகும்.

முற்போக்கு சிந்தனையாளரை பற்றி பேசும் பொழுது நீர்வேலியில் வாழ்ந்துமறைந்த அம்மையார் திருமதி வேதவல்லி கந்தையா அவர்களை மறந்துவிட முடியாது. இவர்களை அறியாதவர் இல்லை, இவர் களை அறியாதவர், எந்த நேரமும் இவரின் கால்கள் எம் கிராம வளர்சிக்காக நடந்த வண்ணமே இருக்கும். மழை, வெயில் என்று பாராது கிராமம் முழுக்க சென்று பெண்களின் சமூக வளர்சிக்காக பாடு பட்டவர். இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் மாதர் சங்கத்தை நிறுவி அதை திறம் பட இயக்கியவர். இவரது பேரப்பிள்ளைகளுடன் இருந்த நட்பினால் இவர் வீட்டில் நான் பல நாட்களை களித்ததுண்டு , ஆனால் இவரை அங்கே பார்த்தது மிகக்குறைவு! பல வருடங்களுக்கு முன்பே இவர் காலம் கடந்த முற்போக்கு சிந்தனைகளை கொண்டிருந்தது மட்டுமின்றி அதை நடைமுறைபடுத்தியும் காட்டியவர். அந்தக்காலத்தில் இவர் மாலை நேரங்களில் வீடு வீடாக சென்று பெண்களை வலுக்கட்டாயமாக மாதர் சங்க கூட்டங்களுக்கு கூட்டிசெல்வது வழக்கம் , அப்படி இவரால் அடையாளம் காணப்பட்டவர்களில் எனது அப்ம்மாவும் ஒருவர்! வேதவல்லி டீச்சர் வெகு தூரத்தில் வரும் பொழுதே எனது அம்மா வீட்டுக்குள் ஒழித்து விடுவார். அம்மா வீட்டில் இல்லை என்று பொய் சொல்வது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருக்கும் எனது வேலை! நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்து டீச்சர் சொல்லுவார் ‘டேய் , கொம்மாவை உடனடியாய் மாதர் சங்கத்துக்கு வரசொல்லு’ என்று. அம்மாவும் வேறு வழியின்றி அங்கு செல்வார். காலப்போக்கில் டீச்சர் வருவதற்கு முன்பே அம்மா அங்கு சென்று விடுவார். இப்போது டீச்சர் எம்மோடு இல்லை ஆனால் அந்த மாதர் சங்கத்தையும் அதனால் அடைந்தத பலனையும் என் அம்மாவினால் வாழ்கையில் மறக்க முடியாது! அந்த நேரத்தில் இவரின் சிந்தனைகள் எம்மில் பலருக்கு புரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் அதன் பயன்களை இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிரூக்கிரோம். இவரைபோல முற்போக்கு சிந்தனையாளர் பலர் இன்றும் எம் சமூகத்தில் எம்முடன் வாழ்ந்த்துகொடிருகிறார்கள் – இவர்களின் சிந்தனைகளையும் வழிநடத்தலையும் நாம் புறக்கணிதுவிடாமல், முழுமையாக புரிந்து செயல்படுவது அவசியமாகும்.

பார்வை – 4

இனி வாழ்வகப் பக்கம் நோக்கி என் அகத்தால் ஒரு பார்வை……
மறைந்த அன்னலட்சுமி அன்னை அவர்களை பற்றியும் வாழ்வகம் பற்றியும் சில வருடங்களுக்கு முன் இவ்விதழில் எழுதியிருக்கிறேன். பார்வையின்மை என்பது ஒரு குறைபாடு அல்ல, ஊனக்கண் தெரியாவிட்டால் என்ன உள்ளக்கண்ணால் உலகை பார்கலாமே, எக்குறையுமின்றி இவ்வுலகில் வாழலாமே என்று நிரூபித்துகாடியவர்! தன் வாழ்க்கையையே இப்பாரிய பணிக்காக அர்ப்பணித்தவர். இவரின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திப்பது மட்டுமின்றி எம்மாலான உதவிகளை வாழ்வகம் போன்ற நிலையங்களுக்கு வழங்க வேண்டும். உடல் உறுப்புகள் இயங்காதவர்களையும், இழந்தவர்களையும் இழக்கமாக பார்க்கும் எம் ஒருபக்க பார்வையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களை நாம் இயங்க வைக்க வேண்டும் இல்லையெனில் சுமந்து செல்ல வேண்டும்.இவர்களின் மனம் புண்படாத வகையில் நாம் செயல்ப்படவேண்டும்.

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே, அன்பு ஒன்னு தான் அனாதையா…….
கண்களில்லா மனிதருக்கு கால்களென நாம் நடந்தால் நம் பூமியில் அனாதையார்?

Capture

 

 

 

 

 

 

 

 

 

 

அன்புடன்

கனகசபேசன் அகிலன்

5 Comments

 1. I am sorry there are several spelling mistakes, please kindly ignore them. Thanks

 2. Thibakaran says: - reply

  Hi akilan

  Your writing is absolutely stunning, I am totally impressed of your way of writing.
  Good keep it up.

  M.Thibakaran

 3. T. Sathees says: - reply

  Amazing writing style Ahilan, I enjoyed it!

 4. T. Sathees says: - reply

  I still remember T V Veluppillai master. He even taught us Yoga that time.

 5. Many thanks for all your comments, my only intention is to share my experience and views with all readers, especially with younger generation who are not old enough to know about all the special people that lived in Neervely and their(and our)life style at that time. The books such as ‘Pukal Poorththa Neervely’ has done a great job in documenting all the historical information and facts that would have been lost otherwise, however, not many youngsters this generation,unfortunately, have the patience to read all the pages! Books like this can be used as good reference. May I kindly request that all readers of this website please share your experience by posting your stories here, no matter how boring it is to you, it would be interesting to other readers! This is one way we can all transfer our knowledge to next generation.

  Many thanks again.

Leave A Reply