10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மூளைககாரத் தமிழர்…

14680724_1829083177322166_2352869140399770877_nகோபம் என்பது பலசாம்ராஜ்யங்களை தகர்த்திருக்கலாம். ஆனால் ஒரு கோபம் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதென்றால் அது மகதத்தின் அதிர்ஷ்டம் தான்.மகதத்தின் சக்கரவர்த்தி தன நந்தரின் அரசவையில் கறுத்த நிறம் கொண்ட, பற்கள் உடைந்த, கால் வளைந்த பிராமணர் ஒருவர் அவரின் அவலட்சணமான தோற்றத்தால் மட்டுமே உட்கார்ந்த ஆசனத்திலிருந்து எழுப்பப்பட்டார். அரசவையின் பணிப்பெண் முதல் அரசன் வரையிலும் அவமானப்படுத்தப்பட்டு அரசவையிலிருந்து துரத்தப்பட்டார்.

அந்த மாபெரும் சபை நடுவில் தன் சுயமரியாதை அசிங்கப்படுத்தப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாத அவர் தன் தலைமுடியை அவிழ்த்து “தன நந்தா உனை இந்த அரசு சிம்மாசனத்திலிருந்து இறக்கி உன் நந்தவம்சத்தை முடிவிற்கு கொண்டுவரும் வரையில் சிகை முடியேன்” என சபதமிட்டார் கௌடில்யர் எனப்பட்ட விஷ்ணுகுப்த சாணக்கியர்.( Thanks –Kandiah Nadanapatham )

சாங்கியா என்ற பிராமணருக்கும் சாங்கியவதிக்கும் மகனாக பிறந்தார் சாணக்கியர். அவர் பிறந்த போதே அனைத்து பற்களும் முழுமையாக வளர்ந்திருந்தது. அதைக்கண்டு யோகிகள் இவர் அரசாளப்பிறந்தவர் என்றனர். பிராமணர் அரசாள்வது தகாது என்பதால் அவரின் தந்தை குழந்தையின் அனைத்து பற்களையும் உடைத்தார். எனினும் இவன் ஒரு அரசை நடத்தும் சக்திமிகுந்த இடத்திலிருப்பான் என ஆரூடம் சொன்னார்கள் யோகிகள்.

அதன்படியே பிற்காலத்தில் நடந்தது. தன நந்தரின் அவையிலிருந்து அதீத கோபத்தில் வெளியேறிய அதிபுத்திசாலியை கைது செய்து சிறையில் அடைத்தான் மன்னன். காற்றைப்போல சிறையிலிருந்து தப்பி வனாந்திரங்களில் அலைந்து தனக்கு தெரிந்த ரசவித்தையால் ஒரு ராஜ்ஜியம் பிடிக்க தேவையான அளவுக்கு 80 மில்லியன் தங்க நாணயங்களை தயாரித்தார்.

அதை ஒரு இடத்தில் பதுக்கிவிட்டு மகதத்தின் சிம்மாசனத்துக்கு தகுதியான நபரைத்தேடி போனபோது ஒரு வனத்தில் மயில் வளர்ப்பவர்களால் வளர்க்கப்பட்ட சந்திரகுப்தனைக் கண்டறிந்தார். 7 வருடங்கள் அவருக்கு கடின பயிற்சியளித்து அரசனுக்குரிய முழுத்தகுதியாக்கினார். பின்னர் தன்னிடமிருந்த பொற்காசுகளை அளித்து மாபெரும் படையை உருவாக்கினார்.

ஒரு சுபமுகூர்த்தத்தில் நேரடியாக பாடலிபுத்திரத்தை அப்படை தாக்கியது. வலிமைவாய்ந்த மகதத்தின் படைகளிடம் மண்ணைக்கவ்வியது சந்திரகுப்தன் படை. தப்பிவரும் வழியில் கிராமத்தில் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் ஒரு தாய் ரொட்டியின் நடுவில் கைவைத்து சூடுவாங்கிய மகனிடம் நீயும் அந்த சந்திர குப்தன்போல புத்தியில்லாமல் நடக்கிறாயே…ஓரத்திலிருந்தல்லவா நடுவிற்கு வரவேண்டும் என சொன்னது கேட்டு தெளிந்த சாணக்கியர் மீண்டும் படை திரட்டி வெளிப்புற நகரங்களைக்கைப்பற்றி இறுதியில் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றி மௌரிய சாம்ராஜ்யத்தின் வேரை ஊன்றினார்.

மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் இரும்புக்கரம் அலெக்சாந்தரின் படைகள் பிடித்துவைத்திருந்த இந்திய நகரங்கள் பலவற்றையும் கைப்பற்றி விரிந்தது.

சந்திரகுப்த மௌரியருக்கு எதிரிகள் உணவில் விஷம் வைத்தால் அதை அழிக்க இன்னொரு விஷத்தை முன்னெச்சரிக்கையாக உணவில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக அளித்து வந்தார் ஆரியவைத்தியத்தில் சிறந்த சாணக்கியர். இதையறியாத மன்னர் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு அளிக்க ராணி உடனே மரணத்தை தழுவினாள். அவள் வயிற்றில் இருந்த மௌரிய வம்சத்தைக்காக்க இறந்த ராணியின் உடலில் இருந்த சிசுவை வெளியே எடுத்து ஒன்பது நாட்கள் இறந்த ஆட்டின் புதிது புதிதான உட ல்களில் மாற்றிக்கொண்டே உள்ளே வைத்து காத்து அக்குழந்தையின் உயிரை மீட்டார் அவர்தான் பிற்காலத்தில் மாமன்னர் அசோகரின் தந்தை பிந்துசாரர்.

வாளைச்சுழற்றி எதிரிகளின் தலையை பந்தாடிய மன்னர்களும் மனது அடங்கி வானப்பிரஸ்தம் போவது போல சந்திரகுப்த மவுரியர் சமணத்தை தழுவி கர்நாடக சரவணபெலகுலாவில் தவமியற்றப்போக வயதான சாணக்கியர் மீது பொறாமைகொண்ட சுபந்து என்ற அமைச்சர் மன்னன் பிந்துசாரரிடம் அவர் தாயின் மரணத்துக்கு சாணக்கியர் தான் காரணம் என கொளுத்திப்போட வெறுப்புற்ற அரசன் சாணக்கியரைக் கைது செய்ய சுபந்துவையே படையுடன் அனுப்பினார்.

சாணக்கியரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தின் ஆயிரம் பூட்டுக்களையும் உடைத்து உள்ளே விலைமதிப்பில்லாத பொக்கிஷம் இருக்கும் என நினைத்து திறந்தபோது அதிலிருந்த வந்த மனம்மயக்கும் நறுமணத்தை முகர்ந்து விடுகிறார். அப்புறம்தான் அருகில் எழுதியிருந்த ஓலையை படிக்கிறார். இந்த மணத்தை நுகர்பவர் கண்டிப்பாக துறவறம் மேற்கொள்ள வேண்டும் இல்லையேல் உயிர்போவது நிச்சயம் என்று எழுதியதை நம்பாமல் தன்னோடு வந்த வீரனை நுகரச்சொல்லி அவனுக்கு அரசபோக உணவினை அளிக்க அவன் அப்போதே சுருண்டுவிழுந்து இறந்து போகவே வேறு வழியில்லாமல் சுபந்து துறவறம் மேற்கொள்கிறார். இப்படி தான் இல்லாத போதும் எதிரிக்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தார் அந்த மாமேதை.

அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி அக்குவேறு ஆணிவேராக அலசும் ஒரு நூலையும் சாணக்கிய நீதி என்ற நீதி சாஸ்திரமும் இன்னும் மேலை நாட்டு அறிஞர்களால் வியந்து போற்றப்படும் இந்திய மார்க்கியவல்லி கௌடில்யரின் சாதனை நூல்கள்.

இறுதிகாலத்தில் ஒரு சமணத்துறவியாக வாழ்ந்து தான் வாழ்ந்த கணக்கை முடித்த சாணக்கியர் ஆராயப்பட்ட அத்தனை நூல்களிலும் சொல்லப்பட்டது போல திராவிடம் எனும் தென்னாட்டிலிருந்து போய் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மூளைககாரத் தமிழர்.

0 Comments

Leave A Reply