10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஓடிற்றர் சின்னத்தம்பி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவுநாள்[:]

[:ta]

 நீர்வேலி கரந்தன் வீதியினையைச் சேர்ந்த திரு.வே.சின்னத்தம்பி அவர்களும் அவருடைய புதல்வி செல்வி.சி.சிவதர்சினி அவர்களும் அவர்களுடைய நெருங்கிய உறவினரான செல்வி க.புஸ்பராணி அவர்களும் 22.05.1994 அன்று கரந்தன் வீதியில் புக்காரா விமானத்தாக்குதலில்  பலியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நீர்வேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் தலைவராகவும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பரிபாலன சபை தலைவராகவும் ஊரில் பொது அமைப்புக்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வந்தார். அக்காலத்தில் திரு.வே.சின்னத்தம்பி அவர்கள் ஓடிற்றர் சின்னத்தம்பி என ஊரில் எல்லோராலும் அழைக்கப்படுவார். அவருடைய புதல்வி சிவதர்சினி அவர்கள் வேம்படி மகளீர் கல்லூரியில் உயர்தரம் கற்றவர். கா.பொ.த சாதாரண தரத்தில் உயர்பெறுபெற்றவர். 22.05.1994 அன்று வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் காலை வேளை வேலைசெய்து கொண்டிருந்த வேளை புக்கார என்கின்ற போர் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த மூவரும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அன்றைய நாளில் நீர்வேலி மக்களையே  சோகத்தில் அழ்த்தியிருந்தது. 22.05.2019 இன்றைய நாளில் ஓடிற்றர் சின்னத்தம்பி – சிவதர்சினி – மற்றும் புஸ்பராணி ஆகியோரினை நினைவு கூர்ந்து அவர்கள் மூவருடைய அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

(புஸ்பராணி அவர்களுடைய புகைப்படம் கிடைக்கவில்லை)

[:]

2 Comments

  1. Our deepest sympathies– RIP

Leave A Reply