கடந்தவாரம் மகாசென் புயலால் வாழைப்பழங்களின் விலை வீழ்ச்சி
கடந்தவாரம் (13.05.2013)அடித்த மகாசென் புயலால் வாழைமரங்கள் முறிவடைந்து அழிவடைந்ததினால் நீர்வேலிச்சந்தையில் வாழைப்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. முப்பது ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கதலி வாழைப்பழங்கள் 10 தொடக்கம் 20 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.நீர்வேலியின் கரந்தன் கோப்பாய் பகுதியில் அதிகமான வாழைகள் முறிவடைந்தன.இதனால் விவசாயிகள் அதிக நட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வீசிய புயலால் வாழையைவிட பயன்தரு மரங்கள் பலவும் அழிவடைந்தன.
0 Comments