கத்திக்கும் கதலி வாழைப்பழத்திற்கும் பெயர் பெற்ற நீர்வேலி பரதத்திலும் புகழ் பெற்று விட்டதா? நல்லூரில் நீர்வைப் பிள்ளைகளின் நடனம் கண்டவர்கள் அதிசயிப்பு
கடந்த 15.03.2015 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடத்திய திருவள்ளுவர் விழாவின்போது சிறப்பு நிகழ்வாக நீர்வேலி பொன்சக்தி கலாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் நீர்வையூர் க.சத்தியப்பிரியாவின் நெறியாள்கையில் நீர்வை மாணவியர் வழங்கிய நடன நிகழ்வை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோர் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். நீர்வேலி என்றால் கத்தி, கம்மாலை, கதலி வாழைப்பழம் என்றுதான் நாங்கள் பார்த்திருந்தோம் இப்போ பரதத்திலும் முன்னுக்கு வந்துவிட்டீர்களா எனக் கல்வியாளர் ஒருவர் பாராட்டிக் குறிப்பிட்டார். நிகழ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நடன விற்பன்னர்கள் கலை ஆர்வர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடன நிகழ்வை நெறியாள்கை செய்த சத்தியப்பிரியா கஜேந்திரன் அவரது ஆரம்பக் குருவாகிய சுகந்தினி ஸ்ரீமுரளிதரனால் பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டார். (புகைப்படங்கள் உள்ளே..)
0 Comments