“கந்தபுராணச்சுருக்கம்” புராண படனம்
ஸ்ரீமத் சம்பந்த சரணாலய சுவாமிகள் பாடியருளிய “கந்தபுராணச்சுருக்கம்” புராண படனம் கச்சியப்ப சிவாச்சார்ய சுவாமிகள் சுமார் பதினாறாயிரம் பாடல்களால் பாடியருளிய கந்தபுராணம் மிகப்பிரபலமானது.இந்நூல் யாழ்ப்பாணத்தின் அநேகமான ஊர்களில் எல்லாம் முழுமையாக படனம் செய்யப்பட்டு வந்தது. இன்றும் ஆங்காங்கே அது நடந்து வருகிறது.இந்த கந்தபுராணத்தில் உள்ள சூரபத்மன் வதைப்படலத்தை கந்தசஷ்டி காலத்தில் படனம் செய்வதும் பல இடங்களிலும் உள்ள மரபு. (நன்றி மயூரகிரி சர்மா )
–
இதே பதினாறாயிரம் பாடல் கொண்ட கச்சியப்ப சிவாச்சார்யாரின் கந்த புராணத்தை 1048 பாடல்களால் ஸ்ரீமத் சம்பந்த சரணாலய சுவாமிகள் என்ற சைவசித்தாந்த அறிஞர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே சுருக்கி பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத செய்தி..
–
இந்த நூலிலுள்ள யுத்த காண்டம், தேவகாண்டம் ஆகிய இரு காண்டங்களும் நீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி காலத்தில் படனம் செய்யப்பட்டு வருகிறது…
–
அதிக வர்ணனைகளின்றி காலத்திற்கேற்ற நடையில் தமிழ்ச்சுவை பொங்குவதாக இந்நூல் காணப்படுகிறது.
–
இவ்வாறான கந்தபுராண சுருக்கத்திலுள்ள பாடல்களுக்கு காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரவர்கள் பொழிப்புரை எழுதியுள்ளார்.
–
நாமும் இந்த கந்தன் கதையை கற்றும் கேட்டும் மகிழலாமே…
0 Comments