கனடாவில் உள்ள நீர்வேலி நலன்புரிச் சங்கத்தினரின் ”வசந்தகால ஒன்று கூடல் 2014” நிகழ்வும் விளையாட்டுப்போட்டியும்
கனடாவில் உள்ள நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடாத்தப்படும் ”வசந்தகால ஒன்று கூடல் 2014” எனும் நிகழ்வும் அதனோடு இணைந்து ஆண்டுப்பொதுக்கூட்டம் மற்றும் விளையாட்டுப்போட்டி என்பன எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கனடாவில் உள்ள மேர்னிங் சைட் பார்க்கில் அதன் 8 மற்றும் 9 பிரிவுகளில் (மேனிங்சைட் -எல்ஸ்மேர்) நடைபெறவுள்ளது.மனதைக்கவரும் விளையாட்டுக்களும் விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.மேற்படி விளையாட்டுக்களிலும் விருந்துபசாரங்களிலும் கலந்துகொண்டு ஆனந்தம் அடையுமாறு அன்புடன் எமது நீர்வேலி உறவுகளை அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
0 Comments