10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடாவில் நிகழ்ந்த விபத்தில் நீர்வேலி இளைஞன் பலி

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்ட நீர்வேலியைச் சேர்ந்த திரு. சதீஸ் லோகநாதன் அவர்கள் நேற்றிரவு 11:30 மணியளவில் பிக்கறிங் வாகனவிபத்தில் அகால மரணமடைந்தார். அன்னார் நண்பர்களிடையே பெரும் மதிப்பையும் உறவினையும் பேணுபவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் அன்னாரின் மறைவினை தாங்கொணாத நண்பர்கள் துயரத்துடன் தெரிவித்துள்ளனர். காலஞ்சென்ற திரு. சதிஸ் அவர்கள் ஓட்டிய வாகனம் HONDA ACCORD என்று தெரிய வருகிறது.விசாரணைகள் தொடர்ந்து DURHAM பொலிஸார் செய்து வருகின்றனர். இவ்விபத்தில் கொல்லப்பட்ட மற்றைய தமிழர் பல்கலைக்கழக 21 வயதுடைய மாணவர் எனவும் அறியப்படுகிறது.

0 Comments

Leave A Reply