10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடாவில் வாழையடி வாழை-2015 நிகழ்வு

55555நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் வருடா வருடம் நடாத்திவரும் வாழையடி வாழை நிகழ்வு இந்தவருடமும் கனடாவில் கொண்டாடப்படவுள்ளது.17 ஆவது வாழையடி வாழை நிகழ்வாக அமையும் மேற்படி நிகழ்வானது எதிர்வரும் 23 ம் திகதி தை மாதம் 2016 மாலை 5 மணிக்கு JC’s Banquet Hall ,Ellesmere rd ,ON,M1H2V5  எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. ஓவ்வொரு வருடமும் நீர்வேலியில் பிறந்து வாழ்ந்து ஊருக்காக பல சேவைகளை செய்து அமரத்துவம் அடைந்த பெரியார்களை கௌரவப்படுத்தும் வகையில் வாழையடி வாழை நிகழ்வின் அரங்கத்திற்கு அவர்களுடைய பெயர்களை இட்டு வருகின்றனர்.அந்தவகையில் நடைபெறவுள்ள வாழையடி வாழை 2015 நிகழ்விற்கு மறைந்த அதிபர் E.K.சண்முகநாதன் அவர்களை கௌரவப்படுத்துகின்றனர். கனடாவில் வதியும் நீர்வேலி உறவுகள் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவித்துள்ளனர்.

BannerVV2015

0 Comments

Leave A Reply