10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடாவில் 15 ஆவது ஆண்டு வாழையடி வாழை 2013

12நீர்வேலி  நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் வருடா வருடம் கொண்டாடி  வரும்  வாழையடி வாழை  எனும்  ஒன்றுகூடல் நிகழ்வு   இந்தவருடமும்  மிகச் சிறப்பாக  கொண்டாடப்படவுள்ளது. எதிர்வரும் 11.01.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு St.Peter Paul Banquet Hall ,231 Milner Ave.Scarborough,ON,M1s 5E3 (Marham & Milner ) எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்விற்கு கனடாவில் வதியும் நீர்வேலி மக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.இது எமது நீர்வேலியின் மகிமையையும் பண்பாட்டினையும் கலாச்சாரத்தினையும் கட்டிக்காக்கும் விழா என்பதுடன் இதனை அங்குவாழும் அடுத்த இளஞ்சந்ததியினரும் அறியும் வகையில் நிகழ்த்தப்படுகிறது.இங்கு கலைநிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உறவுகள் சந்திப்பு விருந்துண்ணல்  போன்ற மனதுகவரும் நிகழ்வுகளை நிர்வாகத்தினர் ஏற்பாடுசெய்துள்ளதால்   கனடா வாழ் நீர்வேலி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

BannerVV2013

0 Comments

Leave A Reply