10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கனடா சங்கத்தினரின் 20 ஆவது வசந்தகால ஒன்றுகூடல்[:]

[:ta]

   நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினர் வருடந்தோறும் ஆவணி மாதம் வசந்தகால ஒன்றுகூடல் நிகழ்வும் விளையாட்டுப் போட்டியும் நிகழ்வினை கனடாவில் உள்ள மேர்னிங் சைட் புங்காவில் நடாத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டும் 18.08.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அதேயிடத்தில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் தலைவர் திரு.பா.ஜெகன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. கனடாவில் வாழும் நீர்வேலி உறவுகள் அனைவரையும் தவறாது இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து அனைவருடனும் இணைந்து சுகம் பகிர்ந்து உணவருந்தி மகிழ்வடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் சிறுவர்கள் பெரியவர்கள் வயது வந்தவர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் விளையாட்டுப் போட்டிகளும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வசித்த அமரர் இராஜேஸ்வரன் அவர்களுடைய பெயர் விளையாட்டுத்திடலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply