10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடா – நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் வாழையடிவாழையின் போது கௌரவிக்கப்படும் பெரியார்கள்

lகனடா – நீர்வேலி  நலன்புரிச்சங்கத்தினரால்  வருடந்தோறும்  வாழையடிவாழை கொண்டாடாடப்பட்டு  வருகின்றமை  யாவரும்  அறிந்தவிடயம்.  அந்நிகழ்வு நடைபெறுகின்ற  போது  அந்நிகழ்வு  நடைபெறுகின்ற  மேடைக்கு  எமது  ஊரில் வாழ்ந்த  எமது  ஊருக்காக  அரும்பாடுபட்ட  பெரியார்களின்  பெயர்களை  வைத்து கொண்டாடுகின்றனர்.  இது  போற்றுதற்குரிய  விடயமாகும்.  எமது இளைய சந்ததியினர்  இப்பெரியார்களைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. நலன்புரிச் சங்கத்தினரின்  இந்த முயற்சியினால்  கனடாவில் வதிகின்ற  இளையசமூகத்தினர் அறிந்துகொள்வதற்கு  வாய்ப்பாக அமைகிறது.  ஒவ்வொரு  வருடமும் ஒவ்வொரு பெரியாரை வாழையடி வாழை நிகழ்வின் போதும் நினைவு கூர முடிவு செய்து   2011 ம்  ஆண்டில் இருந்து  இரண்டு பெரியார்கள்   நினைவு  கூரப்பட்டு இருக்கின்றார்கள். அந்தவரிசையில் 2011 ம் ஆண்டு முதலில் யாவருக்கும் அறிந்த நாமத்தினையுடைய அத்தியார் அருணாசலம் அவர்கள் நினைவு கூரப்பட்டார்.அதற்கு அத்தியார் அருணாசலம் அரங்கம் என பெயர் சூட்டியிருந்தனர்

3

2அது போல 2012 ம் ஆண்டு பெரிய உபாத்தியாயர் திரு.செல்லப்பா நடராசா அவர்களை நினைவு கூரும் முகமாக ”பெரிய உபாத்தியாயர் செல்லப்பா நடராசா அரங்கம் என நினைவு கூர்ந்திருந்தனர்.1
வருகின்ற தை மாதம் நடைபெறவுள்ள வாழையடி வாழை 2013 இன் போது திரு.S.K.கந்தையா மாஸ்ரர் அவர்களை நினைவு கூரும்முகாக ”கந்தையா மாஸ்ரர் அரங்கம் ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.VV2013
கனடா – நீர்வேலி நலன்புரிச்சங்கத்தின் இந்ந நல்லாக்கத்தினைப் போற்றுவாமாக.

0 Comments

Leave A Reply