10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடா – நீர்வேலி நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்படும் வசந்தகால ஒன்றுகூடல் – 2013

11111கனடா – நீர்வேலி நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்படும் வசந்தகால ஒன்றுகூடல் 2013, ஆண்டுப்பொதுக்கூட்டம், விளையாட்டுப் போட்டியும்  (Neervely Get Together and Sports Event in Canada on Sunday July 14,2013) ஞயிற்றுக்கிழமை  ஜூலை 14,2013   மோனிங்சயிட்  பூங்காவில் நடைபெறவுள்ளது.கனடா – நீர்வேலி நலன்புரி சங்கம் கனடாவில் வதியும் நீர்வேலி மக்களை ஒன்றிணைத்து எமது நீர்வேலியின் புகழை பரப்புவதிலும் நீர்வேலி மக்களுக்கிடையில் உறவுப்பாலம் அமைவதற்காகவும்  அயராது உழைத்து வருகிறது.இதற்காக வருடா வருடம் வாழையடி வாழை எனும் மிகப்பெரிய ஒன்றுகூடலை நடாத்திவருகிறது.அதைப்போலவே வசந்தகால ஒன்றுகூடல் எனும் நிகழ்வினையும் எதிர்வரும் ஆடி மாதம் 14 ம் திகதி நடாத்தவுள்ளது.

”கனடாவில் வதியும்  நீர்வேலி மக்கள் அனைவரும் வருகைதந்து நீங்கள் சிறுவயதில் சேர்ந்து விளையாடிய, பாடசாலை, கிராமத்து, அயல்கிராமத்து, நண்பர்கள், நீங்கள் படித்த ஆசிரியர்கள், வைத்தியர்கள், என்னும் பலரை சந்தித்து உணவு உண்டு மகிழ ஓர் அரிய சந்தர்ப்பம்.அனைவரும் வருக” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nnnnnnnnnnnnnnnnnnnnn

0 Comments

Leave A Reply