10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கனடா வாழ் நீர்வேலி மக்களின் கடற்கரை ஒன்றுகூடல்

imagesநீர்வேலி  நலன்புரி  சங்கம்- கனடா எதிர்வரும் July 27 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  அன்று  கடற்கரை  கொண்டாட்டத்தை அங்கத்தவர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க ஒழுங்கு செய்துள்ளார்கள்.  Scarborough ல் இருந்து ஏறத்தாள 50 Km தொலைவில் உள்ள Darlington Beach: 1600 Darlington Park Road, Bowmanville, On. L1E 2T9. இனை தேர்ந்தெடுத்துள்ளனர். அங்கு  சென்றுவருவதற்கு  பேரூந்து வண்டிகள்  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது. பேரூந்து வண்டிகள் அதிகாலை 8.00 A.M. Sun City Super Market Sun City Super Market: 2761 Markham Rd, Scarborough, ON. M1X 1M4.Markham Rd & Nashden ல் உள்ள வாகன தரிப்பு இடத்தில் இருந்து புறப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
Beach2014

அங்கு எமது நிர்வாகத்தினரின் திட்டப்படி காலையில் தேநீரும் கடலையும் பாணும் பரிமாறப்படும். பின்னர் BBQ ல் கோழிக்கால்கள் Hotdogs, Burgers, சோளம் போன்றவைகள் grill செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேரத்தில் அவரவர்கள் தமக்கு விரும்பிய விளையாட்டுக்களை விளையாடவும் முடியும். நீராட விரும்பியவர்கள் நீராடலாம். அத்துடன் ஒரு ஆட்டு இறைச்சி கறியும் மரவள்ளிக்கிழங்கு அவிப்பதற்கும் ரொட்டி சுடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மாலை வேளையில் பழங்கள் பரிமாறப்படும்.மேற் கொண்டு அங்கத்தவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களை நிர்வாகத்தினர் எதிர்பாக்கின்றார்கள். இந்த பயணத்திற்கு செலவுகளின் அடிப்படையில் குடும்பத்திற்கு குறைந்த அளவில் $40.00 நன்கொடையாக பெற யோசித்துள்ளோம்.இந்த திட்டங்களை நீர்வேலி நிர்வாக சபையினரும் நலன்விரும்பிகளும் ஒரு தொண்டு அடிப்படையிலேயே முயற்சிக்கிறார்கள். இதனால் சங்கத்திடம் எந்த ஒரு காப்புறுதிகளும் இது வரையில் ஒதுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு இதில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும் அவதானமாகவும் நடமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமையவும் நடந்து கொள்ள வேண்டுமென மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.இந் நாள் அன்று காலநிலைப் பாதுகாப்பிற்காக 200 போர் தங்கக்கூடிய கொட்டகை போடுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள் கடற்கரை மணலில் உட்கார முடியாதவர்கள் மடக்கு நாற்காலிகளை எடுத்து வரலாம். மேற் கூறப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டியவர்கள் மாத்திரை எடுப்பவர்கள் தமக்கு உகந்த சிறு உணவை எடுத்து வருவது உகந்தது.

உங்கள் ஆதரவிற்கு நன்றி.

ப. ஜெகன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்.

தொடப்புகளுக்கு:
ஜெகன்: 416-999-8411
சசி: 416-271-6038
சிவா. P: 416-807-7482. –

 

0 Comments

Leave A Reply