10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளைக்கு இன்னொரு கணனி[:]

[:ta]

எண்பதாயிரம் ரூபா பெறுமதியான கணனி ஒன்றினை 1996 ஆம் ஆண்டு கரந்தன் இராமுப்பிள்ளையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பழைய மாணவர்கள் 4 பேர் இணைந்து வாங்கி அன்பளிப்புச் செய்துள்ளனர்.தயாளன் தயாசுகாலன் 40 000,துரைசிங்கம் குகப்பிரியா 20 000,பொன்னுத்துரை கஜதீபன் 15000,பொன்னம்பலம் நிசாந்தன் 5000 .ஆகிய பழைய மாணவர்களே இந்த மேசைக்கணனியினை அன்பளிப்புச் செய்துள்ளனர்.இது கரந்தன் இராமுப்பிள்ளைக்கு கிடைத்த 5 ஆவது கணனியாகும்.முதலாவது கணனியினை நேர்வேயில் வதியும் திரு புண்ணியமூர்த்தி புதிய மேசைக்கணனி ஒன்றினையும் இலண்டனில் வதியும் திருவாசகம் அவர்கள்  பழைய கணனிகள் மூன்றினையும் ஏற்கனவே வழங்கியிருந்தனர்.தற்போது கணனியகத்தில் 5 கணனிகள் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் காணப்படுகின்றது. கணனிகளை வழங்கிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.

 [:]

0 Comments

Leave A Reply