newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளையில் பெயர்ப்பலகை திறப்பு விழா[:]

[:ta]

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் கரந்தன் சந்தியை நோக்கி அமைக்கப்பட்ட பெயர்பலகை திறப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை 30.05.2018 காலை 7.30 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை அமைப்பதற்கு சுவிஸ் நாட்டில் வதியும் பாடசாலையின் பழைய மாணவன் திரு.சுந்தரேஸ்வரன் ஜெயந்தன் அவர்கள் ஒரு இலட்சம் ரூபாவினை பாடசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கியிருந்தார். எமது இணையத்தின் முன்மொழிவிற்கு செவி சாய்த்து திரு.ஜெயந்தன் அவர்கள் முன்வந்தமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக. வடிவம் தொடர்பாகவும் பாடசாலை நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கியிருந்தோம்.அதற்கமையவே சிறப்பாக பெயர்பலகை சீமெந்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 [:]

0 Comments