10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை -இல்லமெய்வல்லுநர் போட்டி

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 03.02.2016 புதன்கிழமை பி.ப 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெறும் இவ்விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.வரதராஜமூர்த்தி அவர்களும் உடற்பயிற்சி ஆசிரிய ஆலோசகர் திரு.ந.ஸ்ரீமுருகதாஸ்காந்தன் அவர்களும் ஓய்வு பெற்ற இ.போ.ச.பரிசோதகர் திரு.அ.நடராஜா அவர்களும் அபான்ஸ் நிறுவன கணக்காளர் செல்வி சந்திரன் ஐஸ்வர்யா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். மேற்படி விளையாட்டு விழாவிற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவித்துள்ளனர்.

0 Comments

Leave A Reply