10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை -புலமைபரிசிலில் சாதனை..

 நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை மாணவர்கள்      ஆவணி மாதம்  நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் உயர்புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளனர். 175 புள்ளிகளைப்பெற்று செல்வி கு.கலையரசி என்ற மாணவி   சாதனை படைத்துள்ளார். மொத்தமாக 47 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். அவர்களில் 12 மாணவர்கள் 152 புள்ளிக்கு (கட்டவுட்) மேல் எடுத்துள்ளனர். ஏனைய மாணவர்களில் 34 பேர் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். ஒரேஒரு மாணவர் மட்டும் 69 புள்ளிகளைப் பெற்றிருந்தார். புதிய அதிபர் திருமதி வாகீசன்   அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் அர்ப்பணிப்பான முயற்சியினால் கரந்தன் இராமுப்பிள்ளை  மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அனைவருக்கும் இணையத்தின் பாராட்டுக்கள் உரித்தாகுக.

0 Comments