10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கரந்தன் இராமுப்பிள்ளை -முன்மாதிரிப்பாடசாலையாக தெரிவு

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் முன்மாதிரிப்பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இரண்டு பெரிய பாடசாலைகளும் இரண்டு ஆரம்பப்பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டு அரசால் பலமில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அந்தவகையில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியும் அச்சுவேலி மத்தி கல்லூரியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆரம்பப்பாடசாலைகளில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமும் அச்சுவேலி ஆரம்பப்பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எமது ஊரில் கரந்தன் இராமுப்பிள்ளை முன்மாதிரிப்பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட காரணத்தினால் அதன் வளர்ச்சிப்பாதையில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி இடம்பெறவுள்ளது.

IMG_2767

0 Comments

Leave A Reply