10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய கோரிக்கைகள்……[:]

[:ta]

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் தேவைகள் தொடர்பாக பாடசாலையின் அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களால் கோரிக்கைகள் சில முன்வைக்கப்பட்டுள்ளன. எமது இணையத்தின் ஊடாக பழைய மாணவர்களை மூலம் கணனி பெற்றுத்தருமாறு வேண்டுகோளினை விடுத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில் இருந்து தரம் 6 மற்றும் தரம் 7 தரம் 8 ஆகிய வகுப்புக்களிற்கு பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கம் கணனி பாடத்தினை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் பாடசாலையில் இருந்த ஒரு சில கணனிகள் யாவும்  செயலிழந்து தற்போது முற்றாக கணனியற்ற நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் சேவையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இராமுப்பிள்ளை  பழைய மாணவர்களே நலன்விரும்பிகளே அதிபரின் தேவைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மேலதிக தகவல்களுக்காக  நேரடியாகவே பாடசாலை அதிபரிடம் தொடர்பு கொள்ளலாம். 077 5314258

 
அத்தியார் இந்துக்கல்லூரியின் கணனித்தேவை எமது இணையத்தின் ஊடாக எமது நீர்வேலி உறவுகளால் வழங்கப்பட்டு தற்போது சிறப்பாக கணனிக்கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. சீ.சீ.த.க பாடசாலையின் கணனித்தேவையும் இணையத்தின் செயற்பாட்டினால் நிறைவடைந்துள்ளது. எனவே கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் கணனித்தேவையும் நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்.[:]

0 Comments

Leave A Reply