இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் சரஸ்வதிசிலை திறப்புவிழா
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சரஸ்வதிசிலையின் திறப்புவிழா எதிர்வரும் 30.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 க்கு நடைபெறவுள்ளது.பழையமாணவரும் கனடாவில் வதிபவருமான நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த நடராசா குகேந்திரன் (றசன்) இச்சிலையினை ஆக்குவதற்கான செலவினை( 02 இலட்சம் ரூபா) வழங்கியிருந்தார்.இவரின் பெற்றோர்களால் திறந்துவைக்கப்படவுள்ள இந்நிகழ்வில் பழையமாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments