10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]கரந்தன்–ஊரெழு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்[:]

[:ta]நீண்டகாலமாக முழுமையாக திருத்தப்படாதிருந்த கரந்தன்-ஊரெழு வீதியின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இவ்வீதி ஊரெழு கிழக்கிலிருந்து நீர்வேலி கரந்தன் சந்தி வரையான சுமார் 3 கிலோமீற்றர் நீளமான வீதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் முழுமையாக புனரமைப்பு செய்துமாறு கோரி பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்துவந்ததுடன் பத்திரிகைகளின் செய்திகள் வெளியானது.

இதில் சுமார் 150 மீற்றர் நீளமான பகுதி மாத்திரமே 2016 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட போதும் எஞ்சிய பகுதியைப் புனரமைக்க நிதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம் 200 மீற்றர் மட்டும் புனரமைப்பு செய்யப்பட்டது மீதி பகுதி நிதி ஒதுக்கிடப்பட்டு அடுத்த வருடம் (2018 இல்) இவ்வீதியின் மீதி பகுதி முழுமையாக புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறன நிலையில் தற்போது இவ் வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது வீதியினை புனரமைப்பதற்கு தேவையான கருங்கற்கள் கொண்டுவரப்பட்டு வீதியில் போடப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

[:]

0 Comments

Leave A Reply