10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]கற்றோராலும் மற்றோராலும் போற்றப்பட்ட கவிஞர் இ. முருகையன்[:]

[:ta]

கற்றோராலும் மற்றோராலும் போற்றப்பட்ட கவிஞர் இ. முருகையன் அவர்கள் நீர்வேலியை வாழ்விடமாக கொண்டவர். நீர்வேலியில் வாழ்ந்த காலத்தில் எமது  ஊரிற்காக ஊரின் வளர்ச்சியில் அவர் செய்த நல்ல காரியங்கள் ஏராளம். அவரை நினைவு கூர்வதில் நாம் மகிழ்வடைகின்றோம்.

ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.

கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை பெரும் கவனத்திற்குரியது.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் கொண்டவை. சமூகப் பயனுடையவை.

கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப்படைப்பாளி.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள கல்வயல் என்னும் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப் பிள்ளை என்பவருக்கும் செல்லம்மாவுக்கும் பிறந்தவர் .

இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார். இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், 1961 ம் ஆண்டு இலண்டனில் கலைமானிப் படத்தையும் 1981ல் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் முதுகலைமானி பட்டத்தையும் பெற்றார் .ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் ஆவர் .

1956ல் சாகவச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றினார் ,கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித்திணைக்கழத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக, கல்வித் திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை இடைவரவு விரிவுரையாளராக பணியாற்றினார்.

தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவராகவும் அப்பேரவையினால் வெளியிடப்பட்ட தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தார்.இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007ல் இவருக்கு வழங்கப் பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருடைய இலக்கிய பணியை பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

இவர் எழுதிய கவிதை நூல்கள் :

ஒருவரம் (1964)
நெடும் பகால் (காவியம் 1967)
ஆதிபகவன் (1978)
அது அவர்கள் நீண்ட கவிதை (1986)
மட்டும் கயிறு அறுக்கும் (1990)
நாங்கள் மனிதர்கள் (1992)
ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும் (2001)

பா நாடக நூல்கள் :

வந்து சேர்ந்தன தரிசனம் (1965)
கோபுரவாசல் (1969)
வெறியாட்டு (1989)
மேற்பூச்சு (1995)
சங்கடங்கள் (2000)
உண்மை (மொழிபெயர்ப்பு 2002)

திறனாய்வு நூல்கள் :

ஒருசில விதிசெய்வோம்
இன்றைய உலகில் இலக்கியம்
கவிதை நயம் ( பேராசிரியர் க கைலாசபதியுடன் இணைந்து )

கட்டுரை நூல்கள் :
இளநயம்
மொழி பெயர்ப்பு நுட்பம்

உரைநடச் சித்திரம்
திருவெம்பவையர்

எழுதிய மேடை நாடகங்கள்
நித்திலக் கோபுரம்’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘வந்து சேர்ந்தன’, ‘தரிசனம்’, ‘கோபுரவாசல்’, ‘கடூழியம்’, ‘செங்கோல்’, ‘கலைக்கடல்’, ‘கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம்’, ‘சுமசும மகாதேவா’, ‘அப்பரும் சுப்பரும்’, ‘கந்தப்ப மூர்த்தியர்’, ‘வழமை’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘இடைத்திரை’, ‘குனிந்த தலை’, ‘வெறியாட்டு’, ‘பொய்க்கால்’, ‘குற்றம் குற்றமே’, ‘தந்தையின் கூற்றுவன்’, ‘இரு துயரங்கள்’, ‘கலிலியோ’, ‘உயிர்த்த மனிதர் கூத்து’, ‘எல்லாம் சரி வரும்’.

[:]

0 Comments

Leave A Reply