10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ள வலிகாமம் கிழக்கு வீதிகள்

காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ள வலிகாமம் கிழக்கு வீதிகள் .

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் ஐ றோட் திட்டத்தின் கீழ் பின்வரும் வீதிகள் விரைவில் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இதற்கான ஆரம்ப பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பிற்குட்பட்ட நீர்வேலி வடக்கு கிராம அலுவலர் பிரிவு ஜே-269, நீர்வேலி மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஜே-270, அச்செழு கிராம அலுவலர் பிரிவு ஜே-279 ஆகியவற்றின் ஊடாகச் செல்வும் 3.86 கிலோமீற்றர் நீளம்கொண்ட நீர்வேலி குறுக்குறோட் – புன்னாலைக் கட்டுவன் வீதி, உரும்பிராய் கிழக்கு ஜே-266 கிராம அலுவலர் பிரிவு, ஊரெழு ஜே-267 கிராம அலுவலர் பிரிவு, நீர்வேலி தெற்கு ஜே -268 கிராம அலுவலர் பிரிவு , நீர்வேலி மேற்கு ஜே-270 கிராம அலுவலர் பிரிவுகளுக்கூடாகச் செல்லும் கலைவாணி சனசமூக நிலையம், கரந்தன் வீதி ஆகியவற்றினூடான 4.34 கிலோமீற்றர் நீளமான ஊரெழு- நீர்வேலி வீதி என்பனவும் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.📍மேலும் வலி.கிழக்கு பிரதேச சபையின் பராமரிப்பிற்குட்பட்ட
கோணாவலை வீதி 2.47 கிலோமீற்றர் , புத்தூர் மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள ஜே-273 , சிவன் வீதி 1.1 கிலோமீற்றர்,கோப்பாய் மத்தி ஜே-261 கிராம அலுவலர் பிரிவு, ஜே-265 உரும்பிராய் தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.12 கி.மீற்றர் நீளமான ஐயன்காடு மயானவீதி, அச்செழு மேற்கு ஜே-287 கிராமஅலுவலர் பிரிவுககுட்பட்ட 41 கிலோமீற்றர் நீளமான இராசவீதி தோப்பு வீதி,, பத்தமேனி ஜே -281 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.15 கிலோமீற்றர் நீளமான பாரதிவீதி, கோப்பாய் தெற்கு ஜே-260 கிராம அலுவலர் பிரிவு, கோப்பாய் மத்தி (ஜே-261) கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 0.53 கி.மீற்றர் நீளமான இராசவீதி கண்ணன் ஒழுங்கை, சிறுப்பிட்டி கிழக்கு , ஜே-271 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 96 கிலோமீற்றர் நீளமான செல்லப்பிள்ளையார் வீதி , உரும்பிராய் தெற்கு 265 கிராம அலுவலர் பிரிவு, உரும்பிராய் கிழக்கு ஜே-266 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட
உரும்பிராய் கிழக்கு பலாலி வீதியிலிருந்து கரந்தன், நீர்வேலி சிவன் வீதி , செல்லப்பா வீதி 0.85 கிலோமீற்றர் நீளம், புத்தூர் வடக்கு ஜே-274, ஆவரங்கால் மேற்கு ஜே-277 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 1.65 கிலோமீற்றர் நீளமான வீதி வான்கைவீதி, நீர்வேலி வடக்கு ஜே-269 கிராம அலுவலகர் பிரிவில் மோதிரகேணி வீதி மற்றும் அதனோடு இணைந்த நீர்வேலி வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு செல்லும் 1.55 கிலோமீற்றர் நீளமான வீதிகளும் விரைவில் காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. தற்போது ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.—–
இதேவேளை நேற்று (17) வெள்ளிக்கிழமை நீர்வேலி கந்தசுவாமி கோவில் தொடக்கம் கரந்தன் சந்தி ஊடாக ஊரெழு வரையிலான வீதி மற்றும் நீர்வேலி சந்தி முதல் அச்செழு வரையான வீதியினை காப்பெற் வீதியாக்கும் பணிகள் தொடர்பாக பொறியியலாளர் குழுவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

0 Comments

Leave A Reply