10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]குப்பைகளை பாதையில் வீசும் நீர்வை மக்கள்…[:]

[:ta]

நீர்வேலி மக்களின் வீடுகளில் சேர்கின்ற  குப்பைகளை நீர்வேலி சீயாக்காடு  இந்து மயானத்திற்கு செல்லும் வழியில் கவனமின்றி  மக்கள்  கொட்டி வருகின்றனர். ஆனால் வடக்கு மாகாண சபையின் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குப்பைகளை வேறுபடுத்தி மீள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் நிலையம் ஒன்று நீர்வேலி சீயாக்காடு  இந்து மயானத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. அந்த நிலையத்திற்கு செல்லும் வீதி அண்மையில் பாலம் அமைத்து   தார் இட்டு நன்றாக செப்பனிடப்பட்டுள்ளது.  குப்பைகளை மீள் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் நிலையம் முற்று முழுதாக இந்த ஆண்டு செயற்பட ஆரம்பிக்கும் என பிரதேச சபை தெரிவிக்கின்றது. அதற்கு முன்னர் வீதிகளில் குப்பைகளை கொட்டாமல் மேற்படி நிலையத்தின் உட்புறமாக உங்கள் வீட்டுக்குப்பைகளை கொட்டுமாறு வேண்டப்படுகின்றனர்.

 


[:]

0 Comments

Leave A Reply