10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]குருந்தடி வீதி திருத்தப்படுகின்றது…[:]

[:ta]

நீர்வேலியின் பல பகுதியிலும் வீதிகள் திருத்தப்பட்டு வருகிறது. நீர்வேலி தெற்கு குருந்தடி வீதியானது முருகையன் கோவிலுக்கு பின் புறமாக உள்ள வீதியானது பல ஆண்டுகளாக திருத்தப்படாமல் காணப்ப்பட்டது. தற்போது குருந்தடி வீதி முழுமையாக திருத்தப்பட்டு வருகிறது. நீர்வேலி கந்தசுவாமி கோவில் மேற்கு வீதியையும் குருந்தடி வீதியையும் இணைக்கும் இணைப்பு வீதி தார் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது. அத்துடன் வரதன் கடைக்கு முன்னால் செல்லும் வீதியானது மேற்குத்திக்கு வைரவர் கோவில் பின்புறமாக ஆரம்பித்து புதர்மட வீதியில் முடிவடையும் வரை செப்பனிடப்பட்டுள்ளது. அரசகேசரிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் தச்சர்மட வீதியும் புனரமைக்கப்பட்டு வருகிறது. நீர்வேலியில் மேற்படி வீதிகளுடன் 90 வீதமான வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளது. அனைத்து வீதிகளும் தார் வீதிகளாக மாறவுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply