10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை

விருச்சிகம் ;விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு 11ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு வருகிறார்..இதுவரை குரு 10ல் இருந்து தொழிலை ஆட்டம் காண வைத்தார் ..ஜென்ம சனியும் உடன் சேர்ந்து படுத்தியது.இப்போது ஆற்றில் அடித்து செல்வோருக்கு பிடிக்க ஒரு மரக்கிளை போல குருபலம் வந்து அமைந்திருக்கிறது ..லாபத்தில் வரும் குரு ,உங்கள் பிரச்சினைகளை பெருமளவில் குறைப்பார்…மருத்துவ செலவுகள் குறையும் நோய் தீரும்.நன்பர்களால் ,மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்,

புகழ்,செல்வாக்கு அதிகரிக்கும் உறவுகள்,நண்பர்கள் பகை விலகும்.சந்தோசமான செய்தி தேடி வரும்.நீண்ட நாள் ஆசைகள் நிரைவேறும்.ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினை கட்டுக்குள் வரும்.இளைய சகோதர வகையில் நல்ல செய்தி கிடைக்கும்.மாமனார் வழி ஆதாயம் கிடைக்கும்.வீட்டை புதுப்பிப்பீர்கள் சிலர் இடம்,வீடு வாங்குவார்கள்.ராசிக்கு 5ஆம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தைகளால் உண்டான கவலைகள் நீங்கும் சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினை தீரும்..ராசிக்கு 7ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் கூட்டு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு;மூலம்,பூராடம்,உத்திராடம் சார்ந்த உங்களுக்கு ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு வருகிறார் ராசிக்கு 10ல் குரு வந்தால் தொழில் சார்ந்த மன உளைச்சல்கள் அதிகரிக்கும் காலம் …சிலர் இடமாறுதல்கள் அடைவர். சிலர் வேறு பணிக்கு செல்ல முயற்சிப்பர்.வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்..வேலைப்பளு அதிகரிக்கும் காலம் என்பதால் ,ஏழரை சனிருப்பதால் கூடுதல் அலைச்சலும் இருக்கும்..

குரு ராசிக்கு தனஸ்தானத்தை பார்ப்பதால் வருமானத்துக்கு பங்கம் வராது…பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும் அதே அளவில் செலவுகளும் இருக்கும்…ராசிக்கு நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் வீடு,வாகனம் சார்ந்த செலவுகள் உண்டாகும் சிலர் புதுப்பிப்பார்கள். சிலர் வாங்குவார்கள் அதன் மூலம் எதிர்பாராத செலவுகள் நெருக்கடியை தந்தாலும் தாயார் வழி ஆதரவு இருப்பதால் சமாளிக்கலாம்..உடல்நிலையில் பாதிப்பு இருந்தாலும் 4ல் குரு பார்வை இருப்பதால் சுகம் உண்டாகும்..உறவினர்களுடன் விருந்து ,சுப நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்..

கடன் நெருக்கடி இருப்போருக்கு குரு ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் நெருக்கடி குறையும்…கடன் சுமை குறையும்..புதிதாக கடன் வாங்க வேண்டாம்…ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள் .நிறைவேற்ற இயலாது.கூட்டாளிகளால் லாபம் உண்டு தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்..

குலதெய்வம் கோயிலில் 16 விதமான அபிசேகம் செய்து வழிபட்டு வரவும்..

மகரம்;உத்திராடம்,திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்யஸ்தானத்துக்கு குரு வருகிறார்….இதுவரை ராசிக்கு எட்டில் அமர்ந்து பல எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வந்த குரு ராசிக்கு பாக்யத்தில் அமர்ந்து இன்பம் தரப்போகிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பார்கள் ..காரணம் ,பலரும் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும் ஒன்பதுல குரு இருப்பவர் மட்டும் தப்பி விடுவர் என்பதுதான் அந்தளவு சிறப்பு பெற்றது. ஒன்பதாம் இடத்து குரு.பல பிரச்சினைகள் ,நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்…

ராசிக்கு குருபலம் வந்துவிட்டதால் பண பலமும் வந்து விடும்..செல்வாக்கு,புகழ் கூடும்…பகையாகிப்போன உறவுகள்,நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்…பணம் பல வழிகளிலும் வந்து சேரும். நோய் தீரும், கடன் சுமை குறையும். தொழிலில் சுறுசுறுப்பு உண்டாகும்….பணி புரியும் இடத்தில் பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்..

குரு ராசியை பார்ப்பதால் மன இறுக்கம் நீங்கி உற்சாகமாக செயல்படுவீர்கள்.குரு ராசிக்கு 3ஆம் வீட்டை பார்ப்பதால் தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கும்..இளைய சகோதரரால் ஆதரவு கிடைக்கும்..வீடு,நிலம் வாங்குவீர்கள்..

ராசிக்கு 5ஆம் இடத்தை பார்ப்பதால் முன்னோர் வழி சொத்து பிரச்சினை தீரும் குலதெய்வ ஆசி உண்டாகும்…தடைகள் எல்லாம் நீங்கி எதிலும் வெற்றி பெறுவீர்கள்…திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நல்லபடியாக முடியும்..

ராசிக்கு 8ல் ராகு இருப்பதால் விஷப்பூச்சிகளால் கண்டம் உண்டாகாமல் இருக்க,புற்றுக்கண் கோயில் வழிபாடு அமாவாசை தோறும் செய்து வருவது நல்ல பலனை அளிக்கும்..

கும்பம் ;அவிட்டம்,சதயம்,பூரட்டாதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு மறைகிறார்.ராசிக்கு குரு மறைவது நல்ல பலன் தர வாய்ப்பில்லை…சில குழப்பங்களை தந்து விட்டே செல்வார்.அஷ்டமத்தில் குரு வர அவதிகள் நிரைய வந்து சேரும் என்ற முது மொழிக்கு ஏற்ப,காரிய தடைகள் நிறைய உண்டாகும்., புதிதாக எதையும் முயற்சிக்க வேண்டாம்..முதலீடுகள் ஆகாது…

நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது தொழில் காரணமாக குடும்பத்தை அடிக்கடி பிரிய நேரும்..பண நெருக்கடி அதிகரிக்கும் காலமாக இருக்கிறது தண்ட செலவுகள் அடிக்கடி வந்து பயமுறுத்தும்..வாகனங்களில் செல்கையில் அதிக எச்சரிக்கை ,மித வேகம் தேவை.

.ராசிக்கு 12ஆம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்…விரய செலவுகள் கட்டுப்படும்..ராசிக்கு 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ,வீடு சார்ந்த சுப செலவுகள் உண்டாகும்..ராசிக்கு 2ஆம் விட்டை பார்ப்பதால் பண வரவு நன்ராக இருக்கும்…செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும்.. பயம்,கவலை,தாழ்வு மனப்பான்மை வேண்டாம்…வியாழன் தோறும் விரதம் இருந்து அருகில் உள்ள கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..

மீனம் ;பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஏழாம் ராசிக்கு குரு வருகிறார் இது குரு பலம் .இதுவரை பண சிக்கல்,தொழில் சிக்கல் என அவதிப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறக்கிரது.திருமணம் தடையாகி கொண்டிருந்தவர்களுக்கு அருமையான குரு பலம் பிறக்கிறது..தொழில் அபிவிருத்தி ஆகும்..புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும் பல வழிகளிலும் லாபம் வந்து சேரும் கடன்கள் முற்றிலும் அடையும்.கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் தங்கம் சேரும்.கல்வியில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.பதவி உயர்வும்,சம்பள உயர்வும் கிடைக்கும்.சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவர்,

ராசிக்கு 11 ஆம் இடம் லாபத்தை குரு பார்ப்பதால் பங்கு வர்த்தகம்,நகைதொழில்,கல்வி துறை,வங்கி துறையில் இருப்போருக்கு நல்ல லாபம், முன்னேற்றம் உண்டு.சேமிப்பு அதிகரிக்கும்.மூத்த சகோதரரால் ஆதாயம் கிடைக்கும்.தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்.பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.

ராசிக்கு 3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தைரியம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .ஆரோக்கியம் உண்டாகும்..ராசியை குரு பார்ப்பதால் உற்சாகம் கூடும்.வேகம்,விவேகத்துடன் செயல்படுவீர்கள்…அஷ்டம சனியும் முடிஞ்சு ,குருபலமும் இருப்பதால் இனி தடையேதும் இல்லை…

0 Comments

Leave A Reply