10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

கைதடி நீர்வேலி வீதியில் பாலம் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

65கைதடி- நீர்வேலி வீதியில் பாலம் அமைக்கும் கோரிக்கையை கைதடி பிரதேச பொது அமைப்புக்கள் பாரம்பரிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ளார்கள்.கைதடி வடக்கிலிருந்து நீர்வேலி வடக்கு வரை செல்லும் இவ்வீதி 2006 ஆம் ஆண்டில் உலக உணவுத் திட்டத்தின் மூலமும், சாவகச்சேரி பிரதேச சபையின் நிதி மூலமும் புதிதாக மண் வீதியாக நிர்மாணிக்கப்பட்டது.மழை காலத்தில் இவ்வீதியில் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியில் 100 மீற்றர் தூரம் வரையில் வீதி முற்றாக அழிந்து அப்பகுதி 2008 ஆம் ஆண்டில் கைதடி மக்களால் புனரமைக்கப்பட்டு நீரோட்டமுள்ள பகுதியில் 3 பாரிய சீமெந்து கட்டுகள் கட்டப்பட்டு பழைய மின்சாரத் தூண்கள் அடுக்கப்பட்டு பாலம் போன்று அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. (நன்றி -நீர்வேலி வடக்கு செய்தியாளர். நீருஜன் செல்வநாயகம்.) ” மேலதிக செய்தியை பார்வையிட

அந்த பால அமைப்பிலேயே மின்சாரத் தூண்களை எடுத்து விட்டு பாலம் கட்டி்தருமாறு தற்போது அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..அத்துடன் நீர்வேலி பிரதேசத்தல் நீரோட்டமுள்ள இடத்திலும் புதிய பாலமொன்றை அமைப்புமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வீதி நன்கு சிரமைக்கப்படுமாயின் வலிகாமம் கிழக்கு தென்மராட்சி பிரதேசத்திற்கிடையில் புதிய மாற்றுப் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு விடும். இவ்விரு பிரதேசங்களும் துரித வளர்ச்சி அடைந்து விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments

Leave A Reply