10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு -நன்றி நவில்தல்

13925285_2080648685493836_736974405582617811_n“நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினராகிய எங்களால்  அண்மையில்  அமரர் பரமேஸ்வரி பாலசிங்கம் பூங்காவில் கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது. ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற உதவிய அன்புள்ளங்களுக்கும் அனுசரனை வழங்கிய வர்த்தக பெருமக்களுக்கும் நிகழ்வினை சிறப்பித்து வருகை தந்த அன்புள்ளங்களுக்கும் உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. மேற்படி நிகழ்வில் புதிய தலைவராக திரு.ப.ஜெகன் அவர்களும் செயலாளராக திரு.க.சசிக்குமார் அவர்களும் பொருளாளராக பா.பிரபாகரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய நிர்வாகசபை விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் ” என நிர்வாகசபை  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply