10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சதாபிஷேக வைபவம் (அமுதவிழா)

4r.-(78)நீர்வேலிக் கிராமத்தில் புகழ்பூத்த வாய்காற்றரவை விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆ. சந்திரசேகரக் குருக்கள் அவர்களின் மைத்துனரும் ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரும் ஆகிய பிரம்மஸ்ரீ சு. இரங்கசாமி ஐயர் ஸ்ரீமதி பராசக்தி தம்பதியரின் சதாபிஷேக வைபவம் 17.04.2014 இல் நீர்வேலி குறுக்கு வீதி காமாட்சி அம்மன் கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. எண்பது வயது நிறைவுபெறும் ஒருவர் தமது மனைவியுடன் கொண்டாடும் விழாவே சதாபிஷேகம் ஆகும். இதனை அமுத விழா எனவும் கூறுவர். விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம் முதலியவற்றுடன் பிரமம் முதலிய தெய்வங்களையும் விசேடமாக வழிபட்டு வேத மந்திர ஜபங்களுடனும் ஹோமங்களுடனும் நடைபெறும் இந்த விழா ஒரு சாந்தி வழிபாடாகும். எண்பது வயது நிறைந்த ஒருவர் ஆயிரம் பிறைகண்டவர் எனப் புகழப்படுகிறார். இவ் விழாவில் அவரது உற்றார் உறவினர்கள் யாவரும் கலந்துகொண்டு அவரது ஆசிகளைப் பெற்று விருந்தாடி மகிழ்கின்றனர்.

4r.-(1)4r.-(5)4r.-(18)4r.-(20)4r.-(24)4r.-(25)4r.-(27)4r.-(30)4r.-(41)4r.-(43)4r.-(51)4r.-(54)4r.-(55)4r.-(55)4r.-(56)4r.-(57)4r.-(59)4r.-(60)4r.-(68)4r.-(73)4r.-(74)4r.-(75)4r.-(77)4r.-(78)4r.-(79)4r.-(95)4r.-(126)4r.-(129)4r.-(136)4r.-(146)4r.-(132)4r.-(132)4r.-(135)4r.-(136)4r.-(146)4r.-(152)4r.-(153)4r.-(154)4r.-(156)4r.-(157)4r.-(168)4r.-(169)4r.-(172)4r.-(47)

1 Comment

  1. ஸ்ரீ சிவானந்த சர்மா அவர்களுக்கு எழுதியது .மிக அருமை உங்கள் மாமனார் அவர்களின் நிகழ்ச்சி படங்கள் பார்த்தோம் .சந்தோசம் அவர்களிடம் சொல்லவும் நன்றி