newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார்.

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3 ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார்.
 
இக்காலங்களில் இவரி 3 முறை வக்ரம் ஆகிபின் நிவர்த்தியாகிறார். மேலும் அவர் தனுசுராசிலிருந்து விருச்சிகராசிக்குப் பின்னோக்கிப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் தனுஷ்ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
 
1. 06.04.2017 பங்குனி 24ம் தேதி வியாழக்கிழமை வக்ரமாகி 25.08.2017 ஆவணி 9 வெள்ளிஅன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார்.
அதன் பின்

 
2. 18.04.2018 சித்திரை 6ம்தேதி புதன்கிழமை அன்று வக்ரம்ஆகி 06.09.2018 ஆவணி 21 வியாழன் அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். அதன்பின்
 
3. 30.04.2019 சித்திரை 17 செவ்வாய்க்கிழமை அன்று வக்ரம் ஆகி 18.09.2019 புரட்டாசி அன்று 142 நாட்கள் அவர் வக்ரகதியில் சஞ்சாரம் செய்வார். இதற்கிடையில் 21.06.2017 அன்று தனுசு ராசியிலிருந்து விருச்சிகராசிக்குப் பெயர்ச்சியாகி பின்மறுபடியும் 26.10.2017 அன்று விருச்சிகராசியிலிருந்து தனுசுராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
 
ஆக சனிபகவானின் இக்கால சஞ்சாரம் மொத்த நாட்கள் 1094 ஆகும். இதில்சுமார் 36 மாதங்கள் அதாவது 426 நாட்கள் வக்ரம் ஆகிபலன்அளிக்க உள்ளார். இடையில் பின்னோக்கி விருச்சிக ராசிவந்து மறுபடியும் தனுசுராசியில் பலன் அளிக்க உள்ளார்.
 
சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை நாம் 4 கட்டங்களாகப் பார்க்க இருக்கிறோம்.
பொதுப்பலன்கள் :
 
1. சனிபகவான் தனுசுராசியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஏற்படும் அனைவருக்குமான பொதுப்பலன்கள்.
 
2. சனிபகவான் தனுசுராசியில் உள்ள மூலம், பூராடம், உத்தராடம் மற்றும் விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம்செய்யும்காலங்களில் அதாவது (வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் நடக்கும்) பொதுப்பலன்கள்
 
3. அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள் (உதாரணமாக ஒருவர் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் என்றாலும் சிம்மராசியில் உள்ள மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் இதில் அடங்கும்) .
 
4. சனிபகவானின் பார்வை 3, 7, 10ம் இடங்கள்ஆகும். இவர் ஒவ்வொருவர் ராசிக்காரர்களுக்கும் அவர்பார்வை படும் இடங்களில் ஏற்படும்பலன்கள்.
 
என 4 வகையான பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.
 
இத்துடன் இக்காலங்களில் 2 முறை குருப்பெயர்ச்சியும் 2 முறை ராகு – கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அவைகளையும் கருத்தில்கொண்டு என்ன பலன்கள் நடைபெறும் என்பதை இப்புத்தகத்தில் மிகவிரிவாகவும் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இங்கு அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள நடப்பு தசாபுத்தி காலங்களில் நடைபெறும் பலன்களே முக்கியமானது ஆகும். அத்துடன் சனிப்பெயர்ச்சி என்பது கோச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பொதுப் பலன்கள் ஆகும். இவ்விரண்டும் கலந்தே ஒரு மனிதரது வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேஷ ராசி பலன்கள்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் இராசி அறியாவதவர்கள் பலன் அறிய:
 
சு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக்க் கொண்டவர்களும் சித்திரை மாத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்.
 
வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான மேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள்.
 
உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும் முதன்மையானவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்
 
உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே சமயம் அதிகமான கோபமும், படபடப்பும் யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும் விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். ஆக சூரியன் உச்சம் பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசு அதிகாரம், செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம். அதனால் நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.
 
இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். சனி பகவானுடன் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.
 
இப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை உண்டுபண்ணுவார். மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம் இடத்திலும், குருபகவான் – 6ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.
 
சனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி போற்றுவர். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள்.
 
பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை நல்லவிதமாக அமையும்.
 
அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள் ஏற்படும். வீடு, இடம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
 
தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும் ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில், சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.
 
விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று பொறுமையுடன் இருத்தல் வேண்டும். உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் விருந்து கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம் ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு புத்ர தோஷத்தை உருவாக்குவார். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.
வேலை தேடுபவர்களுக்கும், இது காறும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். சந்தர்ப்பங்களும் சேர்த்து வரும். நல்ல வேலையாட்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.
 
சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க சந்தர்ப்பங்களும் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.
 
பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும். வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.
 
வேலை அல்லது உத்யோகம் (Job)
 
உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்க்கும் காலங்களில் எதிர்பாராத வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும், வேலையில் உள்ளவர்களுக்கு உத்யோக உயர்வும், ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். அதே சமயம் ராகு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலமாதலால் அவசரப்பட்டு வேலையை விட்டு விடுதல் கூடாது. அதனால் அடிக்கடி வேலையில் லீவு போட வேண்டி வரும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருந்து வரும். சக ஊழியர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். 11ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்வது வேலையில் திருப்தி ஏற்படுத்தும்.
 
தொழில் (Business) வியாபாரம் (Trade)
 
புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். மேலும் உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். மருத்துவம், விஞ்ஞானம், இரசாயனம் சார்ந்த தொழில்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், கட்டுமானத்துறைகள் சற்று ஏற்றமுடன் இருந்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். உணவு, உடை, ஆபரணத்தொழில்கள், சற்று லாபம் குறைந்து காணப்படும். சுற்றுலா, கப்பல், நீர், மீன்பிடித்தொழில்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். தொருவோர வியாபாரம் சாலை வியாபாரம் சற்று சுமாராக இருந்து வரும். ஆன்மீகம், பத்திரிக்கை, தொலைக்காட்சித்துறை லாபகரமாக இருக்கும்.
 
அழகு சாதனங்கள், அழகு சாதனப்பொருட்கள், திரைப்பட விநியோகம் மற்றும் திரையரங்கம் சற்று லாபம் குறைந்து காணப்படும். பங்குச் சந்தை சற்று ஏற்றமாக இருந்து வரும்.
 
விவசாயம்
 
பணப்பயிர்களான தேயிலை, முந்திரி, ஏலம் லாபகரமாக இருக்கும். கனி வகைகளான வாழை கொய்யா, மா, பலா வகைகள் நல்ல விளைச்சல் ஏற்பட்டாலும் லாபம் சற்று குறைந்தே காணப்படும். ஒரு சிலர் தங்களது நிலத்தை குத்தகைக்கு விட வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் ஓரளவு லாபம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் கூடி வரும்.
 
அரசியல்
 
இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி புதிய பதவிகள் பொறுப்புகள் வந்து சேரும். மக்களிடையே ஆதரவு பெருகும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும் அதை தெய்வ அனுகூலத்தால் வெற்றி கொள்ள வாய்ப்பு அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும்.
 
கலை
 
கலைத்துறை சற்று ஏற்றமுடன் விளங்கும், நடனம், நாட்டியம், ஓவியம், இசை சிறப்பாக இருந்து வரும். சினிமா ஓரளவு வருமானத்தை தரும். எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்கள், கதை வசனகர்த்தாக்கள், பாடலாசியர்கள் பெயர் புகழ் பெறுவர். சின்னத்திரை சற்று சுமாராக இருந்து வரும். புதிய ஒப்பந்தங்கள் ஒரு சிலருக்கு அமையும். எதிர்பார்த்த புகழும் பணமும் ஒரு சிலருக்கு வந்து சேரும். ஜோதிடம் சிறந்து விளங்கும்.
 
மாணவர்கள்
 
படிப்பில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி உயர்கல்வி பயில வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல அமைப்பு கூடி வரும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கல்வி கடன் எளிதில் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பு அமையும். 5ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டி வரும். மேலும் குரு பகவான் இக்காலங்களில் 6-7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தேவையற்ற பிரச்சனைகளையும் படிப்பில் ஏற்படும் தடங்கல்களையும் குறிப்பிடுவதால் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
 
பெண்கள்
 
9ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஓரளவு தெய்வ அனுகூலம் ஏற்படும். அதே சமயம் குரு பகவான் 6-மற்றும் 7-ம் பாவங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் நடைபெற சந்தர்ப்பங்கள் அமையும். மேலும் இதுவரை நடவாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். மேலும் குழந்தை பாக்யத்தில் ஆரம்ப காலங்களில் தடை ஏற்பட்டு ராகு பெயர்ச்சிக்கு பின் நல்லபடியாக குழந்தை பிறக்க சந்தர்ப்பம் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். ராகு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் குழந்தைகளால் மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும்.
 
கணவன் மனைவி உறவு சுமாராக இருந்து வரும். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் கிட்டும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும். சனி 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்ல் வாய்ப்புகள் வந்து சேரும். 9ம் இடம் நீண்ட தூரப் பயணத்தையும் ஆலய தரிசனத்தையும் குறிக்கும். அதே சமயம் 9ம் இடம் என்பது இரண்டாவது திருமணத்தை குறிப்பதால் ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற சந்தர்ப்பம் அமையும். உயர்கல்வி பயில வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் அமையும்.
 
கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபடும். 5ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் காதல் வயப்படும் சூழ்நிலையும், காதல் கனிந்து திருமணம் நடைபெறவும் வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வருதல் வேண்டும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும்.
உடல் ஆரோக்யம்
 
உடலில் அடிவயிறு, கால் இடுப்பு, கண் போன்ற உறுப்புகளின் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடலில் சளித் தொல்லைகள் ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம். அடிவயிற்றில் பிரச்சனைகள் கால், மற்றும் கால் பாதங்களில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். கணையம், கல்லீரல், கண் போன்ற உடல் உறுப்புகளை நன்கு கவனித்தல் நலம்.
 
2. சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்திராடம்)
 
மூலம்
 
சனிபகவானின் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வெளியூர், வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கள் சீராக இருந்து வரும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். அரசாங்கத்தால் கொளரவிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அமையும். மேலும் ஒரு சிலருக்கு அரசியலில் உயர் பதவியில் அமர வாய்ப்பு அமையும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும். அவையும் நன்மையாகவே இருந்து வரும். தெய்வ அனு கூலம் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று கவனத்துடன் இருத்தல் வேண்டும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். எடுத்த காரியங்கள் நடை பெறுவதில் உள்ள தடைகள் நிவர்த்தியாகி காரியங்கள் இனிதே நடைபெறும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம் வாங்க வாய்ப்புகளும் அல்லது வீடு கட்ட வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும்.
 
பூராடம்
 
சனிபகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை கிடக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி உடையதாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும்.எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பரபரப்புடன் செயல்பட வைக்கும். தாயாரால் நன்மை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தாய்மாமன்களின் அன்பும் ஒத்தாசையும் கிட்டும். நண்பர்களினால் எதிர்பாராத நன்மை ஏற்படும் உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சந்தர்ப்பமும். சூழ்நிலையும் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரித்து காணப்படும் நேரான பாதையில் சென்று நம்மை வழி நடத்த வாய்ப்புகள் அமையும். அதே சமயம் பெண்களால் தேவையற்ற பிரச்சனைகள். அசிங்கம் அவமானங்கள் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விலகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். அவர்களால் நன்மை மிகுந்து காணப்படும்.
 
உத்தராடம்
 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இக்காலங்களில் ஓரளவு ஏற்றமான காலம் என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் சிறிது காலம் வேலை இலலமல் இருந்து விட்டு பின் வேறு வேலையில் அமர வாய்ப்பு அமையும். மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அதிகரிக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும் மற்றும் விருந்து, கேளிக்கைகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். கஷ்டங்கள் இல்லாமல் உல்லாசமாக இருக்க சனிபகவான் உங்களை தயார்படுத்துவார். பாஸ்போர்ட், விசா இல்லாதவர்களுக்கு வந்து சேரும். விட்டதை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுதல் வேண்டும். கலைகளில் ஆர்வம் அதிகரிப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.
 
கேட்டை
 
சனிபகவான் வக்ரம் ஆகி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட கூடாது. எதிலும் முன் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. தேவையில்லாமல் பேசுதல் கூடாது. எதிலும் நின்று நிதானித்து பேசுதல் வேண்டும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வருகையால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தான தருமங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் தள்ளி போகும் தெய்வ காரியங்களில் தடை ஏற்படும்.
 
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இராது. முதலாளி தொழிலாளி உறவு சுமுகமாக இராது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் சிரமப்பட வேண்டி வரும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் சுமூகமாக இராது. மேலும் தகப்பனாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
 
முன்னோர்களுடைய பணங்கள் வருவதில் தடையேற்படும் அல்லது தவணை முறையில் அந்தப் பலன்கள் வந்து சேரும். கடன்கள் பெருகி வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை அமையும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். தேவையற்ற வகையில் நம்மை பற்றிய வீண் வந்தந்திகள் உலவும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வந்து சேரும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
 
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிப் பெயர்ச்சியானது ஓரளவு நல்ல பலன்களை அளிக்கும். உங்களது ராசிக்கு 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் கேது பகவான் ஆரம்பத்தில் 11ம் இடத்திலும், அதன் பின் உங்கள் ராசிக்கு 10ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் உங்களுடைய கௌரவம் அந்தஸ்த்து புகழ் அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்லபடியாக முடியும்.
 
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த இக்கட்டுகள் இடைஞ்சல்கள் குறைய ஆரம்பிக்கும். கூட்டுக் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி ஏற்படும். அத்துடன் பொருளாதார நிலையும் நன்கு அமையும். கொடுக்கல் வாங்கலில் இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். கொடுத்த பணம், பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் நேரத்திற்கு உணவருந்த வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு சுப காரியங்கள், சுப நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பான காலமாகும்.
 
புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். வீடு, இடம், வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் ஒரு சிலருக்கு தானகவே வந்து சேரும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கோபதாபங்கள் குறையும்.
 
வேலை கிடைக்க வாய்ப்பும், வேலையில் எதிர்பாரத முன்னேற்றமும் ஏற்படும் சக ஊழியர்களின் அன்பும் நட்பும் அதிகரிக்கும். வேலை நிமிர்த்தமாக பிரிந்து வாழும் தம்பதியினர்களுக்கு ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்புகள் ஏற்படும், குழந்தை பாக்யம் எதிர்பார்த்தபடி அமையும்.
 
அதே சமயம் குரு 8ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் அதனால் நோய்வாய்படுவதும் அதனால் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளும், இக்காலங்களில் கடன்களால் தொல்லைகளும் ஏற்பட்டு விலகும். தந்தையரால் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு ஏற்படும்.
 
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இச்சனி பெயர்ச்சியால் நற்பலன்கள் ஏற்படும் என்றுதான் கூற வேண்டும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். பேச்சில் சாமர்த்தியமும், பொருளாதார ஏற்றமும் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட வைக்கும் அதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி அடைய வழி வகுக்கும்.
 
உடலாலும் மனதாலும் பட்ட வேதனைகளும் விலகி ஓரளவு மகிழ்ச்சியும் சந்தோசமும் அதிகரிக்கும் ஒரளவு உழைப்புக்கேற்ற ஊதியமும். அதற்கேற்ப சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வரவேண்டிய பண வரவு மற்றும் பொருள் வரவுகள் வந்து சேரும். பத்திரங்கள், நகைகள், அடகு போனப் பொருட்கள் கைக்கு வந்து சேரும். உயர்கல்வி பயில எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். மேலும் தாயாரின் அன்பும் அவர்களது ஒத்துழைப்பும் கிட்டும். இதுவரை ஒட்டாமல் பிரிந்து போன உடன் பிறப்புகள் தாமாகவே வந்து சேர்வர். வீடு வாங்குவதற்கான அமைப்பும் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும்.
 
அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். மேலும் விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபட அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு வேலையில் முன்னேற்றமும் ஏற்படும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அவசரபட்டு விட்டு விடக் கூடாது. வேலையில் திருப்தியற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். அவசரப்பட்டு வேலையை விடவோ, வேறு வேலைக்கு முயற்ச்சிக்கவோ கூடாது.
 
காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் அமையும். ஒரு சிலருக்கு இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபாகரியங்கள் இனிதே நடைபெறும். ஒரு சிலருக்கு வாரிசுகள் உருவாக வாய்ப்பும், சந்தர்ப்பங்களும் அமையும் வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கடன்களும் கட்டுக்கு அடங்காமல் கூடிக் கொண்டே இருக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவது கூடாது. கல்விக்கான கடன்கள் எளிதில் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் நண்பர்களால் எதிர்பாராத மனவருத்தங்களும் ஏற்படும்.
 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சியில் சில நல்ல நற்பலன்கள் ஏற்பட கூடும். உங்களது ராசியின் 5ம் அதிபதி சூரியன், சனி உங்களது ராசிக்கு 9ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் ஏற்படும். இதுவரை கிட்டாமல் போன குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்ந்து இதுவரை இருந்து வந்த வாட்டமும் சோர்வும் நீங்கி புத்துணர்வுடன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.
 
குடும்பத்தில் புதுவரவுகள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் வம்பு வழக்குகள் மட்டுபடும் எதிரிகள் வசமாவர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்யம் ஏற்படும் குழந்தைகளால் நற்பலன்கள் ஏற்படும். புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் திறமையும் கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய் ஏற்பட்டாலும் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் அமையும்.
 
சுய தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் லாபகரமாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது எனவே முதலீட்டில் அதிக கவனம் தேவை.
 
வேலையாட்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகராகவும் சந்தோசமாகவும் அமையும். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும் சூழ்நிலையில் கடன்களும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. மனைவியின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். மற்றவர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும்.
 
எதிர்பாராத பட்டம் பரிசுகள் பெற வாய்ப்புகள் இருக்கும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. அதனால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியமும் அங்கீகாரமும் கிட்டும் அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் நன்மைகளும் கூடும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும் உயரதிகரிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும்.
 
சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான தனுசு ராசியிலிருந்து 3ம் பார்வையாக 11ம் இடமான கும்ப ராசியையும் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுன ராசியையும் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடமான கன்னி ராசியை பார்வையிடுவார்.
சனிபகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
எடுக்கும் முயற்சிகள் சற்று கால தாமதமாகும் இறுதியில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும் எதிர்பார்க்கும் செய்திகள் சற்று காலதாமதானாலும் நல்லபடியாகவே வந்து சேரும். 3ம் இடம் முயற்சி ஸ்தானம் என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தைரியம் ஆரம்பத்தில் குறைந்து காணப்பட்டாலும் இறுதியில் வெற்றியடைய வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பாராத ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வீடு மாற்றம் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை தேர்வுகள் எழுதும் பொழுது ஞாபக சக்தியை அதிகரித்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் எதிர்பாரத ஆதாயம் ஏற்படும். வீடு வண்டி வாகனங்களை மாற்ற வேண்டியது வரும். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவிய வண்ணம் இருக்கும்.
 
சனிபகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
உங்கள் ராசிக்கு 6ம் இடமான கன்னி ராசியை பார்ப்பது மிகவும் நன்மையாகும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்த உங்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் அங்கீகாரமும் உத்யோக உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் வாய்க்கும். கொடுத்த பணம், பொருள், பத்திரங்கள் கைக்கு வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். இதுவரை தள்ளிப்போன லோன் விஷயங்கள் இனிதே நடந்தேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வழக்குகள் சாதகமாக அமையும் கல்விக் கடன் எளிதாகக் கிடைக்கும். உண்மையான பணியாளர்கள் அமைவார்கள். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். தாய் மாமனின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்களை வெற்றி கொள்வீர்கள். அதே சமயம் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். அடிவயிறு, நரம்பு வாயு சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். கடன்களும் அதிகரிக்கும் வருமானமும் அதிகரிக்கும்.
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் 11ம் இடமான லாபஸ்தானத்தை அதாவது சனிபகவான் தன் வீட்டையே பார்ப்பது மிகவும் விசேஷமாகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் விடிவு காலம் பிறந்தாச்சு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் 11ம் வீடு என்பது உங்களுடைய விருப்பம், எண்ணம், ஆசை (அபிலாஷை) பூரித்தியாகும் இடமாகும். வேலையில் முன்னேற்றமும் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். தெய்வீக விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் அடிக்கடி ஆலய தரிசனம். தெய்வ தரிசனம் கிட்டும் மாகன்களின் தரிசனம். சித்தர்களின் தரிசனமும் கிட்டும் குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு சுபகாரியம் இனிதே நடந்தேறும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களால் எதிர்பாரத உறவுகள் வந்து சேரும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். மருமகன்களால் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பும், தொழில்களில் லாபம் ஈட்டவும் சந்தர்ப்பம் அமையும். விளையாட்டுத் துறையில் பரிசுகள் பெற சந்தர்ப்பமும், கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், அமையும், மனதில் அதிக அளவில் தைரியம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.
ரிஷப ராசி பலன்கள்
கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்
 
இ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.
 
வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன் எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.
 
மற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார். அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன் தான் என்றே கூற முடியும்.
 
இதுவரை 7ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.
 
உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.
 
தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.
 
பயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி கிட்டும்.
 
தாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும் ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும் அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
 
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும். குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு கண்காணித்து வருதல் வேண்டும்.
 
வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக் கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின் எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில் அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.
 
சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.
 
வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும் விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.
 
அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.
 
வேலை அல்லது உத்யோகம் (Job)
 
உங்கள் ராசிநாதனான சுக்ரனே உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக வருவதால் வேலையில் இதுகாறும் இருந்து வந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஆயின் கிடைத்த வேலையில் முதலில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். உங்கள் ராசிக்கு 9,10 ம் அதிபதியான சனிபகவான் உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமர்வதால் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஒரு சிலருக்கு விருப்ப ஓய்வு பெறவும் வாய்ப்பு அமையும் இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும். சக ஊழியர்களின் அன்புன் ஆதரவும் கிட்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது.
 
தொழில் (Business) வியாபாராம் (Trade)
 
தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். உற்பத்தி சார்ந்த தொழிலில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்தல் நலம். சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, துறைகள் ஓரளவு லாபகரமாக இருந்து வரும். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, கிளப், சீட்டு இவைகளில் அதிக்க் கவனம் தேவை. தகவல் தொடர்பு எலக்ட்ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ், துறைகளில் லாபம் குறைந்து கொண்டே வரும். நிதி, நீதி, வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு, பிளாஸ்டிக், சிமெண்ட், கனிமவளங்கள் துறை நல்ல லாபகரமாக அமையும். உணவு, உடை, ஆடை, ஆபரணத்தொழில்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். கப்பல், நீர், மீன்பிடித்தொழில்கள் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, விஞ்ஞானம், மருத்துவம், இரசாயனம் சுமாராக இருந்துவரும். . பத்திரிக்கை, தொலைக்காட்சி, சினிமா, திரையரங்கம் லாபகரமாக இருக்கும். பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள் போன்ற துறைகள் சற்று வளர்ச்சி குன்றியே காணப்படும். சாலையோர வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி நன்கு அமையும். அழகு சாதனங்கள், திரைப்பட விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும்.
 
விவசாயம்
 
விவசாயம் சற்று சுமாராக இருந்து வரும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழுது பயிர் செய்து அறுவடை செய்தாலும் லாபம் குறைந்தே காணப்படும். கனி வகைகளான வாழை, கொய்யா, மா, பலா, போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும். தேயிலை முந்திரி ஏலம் போன்ற பணப்பயிர்களில் லாபம் குறைந்து காணப்படும். நெல், கோதுமை, பயிறு, வகைகள் சற்று சாதகமாக இருந்து வரும். காய்கறிகளில் லாபம் குறைந்து காணப்படும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் ஓரளவு லாபம் குறையும். கடன்கள் அதிக அளவு வாங்க வேண்டியது வரும். அதனால் அதிக அளவு, வட்டியும் கட்ட வேண்டி வரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
 
அரசியல்
 
நண்பர்கள், கூட்டாளிகள், சகாக்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக எண்ணி ஏமாந்து விடுதல் கூடாது. யார் எப்பொழுது எப்படி மாறுவர் என்று கூற முடியாது. எனவே எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பேசுதல் கூடாது. வருமானத்தில் குறைவு இல்லையென்றாலும் அரசியல் எதிர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. யாரையும் நம்பி உண்மையை உரைத்தல் கூடாது. தொண்டர்களின் உண்மையான அன்பையும் ஆதரவையும் பெற தீவிரமாக பாடுபட வேண்டியிருக்கும். அரசாங்கத்தால் எதிர்பாரத துன்பங்கள் துயரங்கள் வந்து சேரும்.
 
கலை
 
உங்களது ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாவதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். போட்டி, பொறாமை இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி வரும். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டபட்டு பின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் கூடும். அதற்கேற்ப செலவினங்களும் கூடும் முழுத்திறமையும் வெளிப்படுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடனம், நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் சிறந்து விளங்கும். சினிமா சின்னத்திரை போட்டி மிகுந்து காணப்படும். எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஏற்றம் பெறுவர்.
 
மாணவர்கள்
 
விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போராட வேண்டி வரும். கல்வியில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. படிப்பில் கவனம் தேவை. படிப்பிற்காக வெளிநாடு செல்ல போராட வேண்டியது வரும். கல்விக் கடன் கிடைப்பதில் பெரிய போராட்டமே நடைபெறும். போட்டி தேர்வில் அதிக கவனம் தேவை. விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். அதனால் பரிசுகளும், வெற்றிகளும் பெற கடுமையாக போராட வேண்டியது வரும்.
 
பெண்கள்
 
உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. அடிக்கடி அலைச்சல்களும் அதனால் உடல் சோர்வுகளும் அசதியும் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சுபகாரியங்களில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று சுமாரகவே இருந்து வரும். கணவரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
 
வேலையில்லாமல் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். வேலையில் உத்யோக உயர்வு அமையும். நல்ல ஊதிய உயர்வுக்காக கடுமையாக போராட வேண்டி வரும். 2வது திருமணம் ஒரு சிலருக்கு அமையும். விவகாரத்து போன்ற விஷயங்கள் இழுபறியாகவே இருந்து வரும். உயரதிகாரிகள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருந்து வரும். சக ஊழியர்கள் அன்பும் ஆதரவும் கிட்டும். குழந்தைகளால் ஒரு சிலருக்கு நன்மையும் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற மன வருத்தம் அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் விலகும். அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடலில் அடிவயிறு, கால், முழங்கால், பாதம் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேமல், சிரங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
 
சனிபகவான் வகரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம் :
 
சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அடிகக்டி ஆலயம் மற்றும் தெய்வ தரிசனம் மேற்கொள்ளல் வேண்டும். வேலையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் பின் வேலை நிரந்தரமாகும். பொருளாதாரம் ஒரு பக்கம் சீராக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடன் வாங்கி வட்டி கட்ட நேரிடும். பிராயாணங்களில் கவனம் தேவை. பயணங்கள் அலுப்பாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருக்கும். அரசாங்க விஷயங்களில் சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்து வருதல் வேண்டும்.
 
உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உடன் பிறந்தர்களால் எதிர்பார்த்த நன்மைகளும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். இதுவரை நடவாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் சற்று சிரம்மத்திற்குள்ளாகி இனிதே நடந்தேறும். திருமணம் சற்று தாமதமாக நடந்தேறும் திருமணமாகி வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் ஒரு சிலருக்கு அமையும். சிலகாரியங்கள் ஆரம்பத்தில் சுபமாக தோன்றினாலும் பின் அதில் தடையேற்பட்டு தள்ளி போகும். தொழிலில் போட்டி பொறாமைகள் ஏற்படும். வேலையில் அதிக கவனம் தேவை.
 
ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் இடமாற்றம் அமையும். வழக்குகள் சற்று பயமுறுத்தினாலும் பெரிதாக பாதகம் ஒன்றும் வராது. விருந்து கேளிக்கைகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். தாயரின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். உடன் பணிபுரிவர்களால் நன்மை ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் அதன் மூலம் எதிர்பார்த்த உங்கள் ஆசைகள் பூர்த்தியாகும் சமயம் இதுவாகும்.
 
பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது
 
சனிபகவான் சுக்ரனுடைய நட்சத்திரமாக பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது வேலையில்லாதவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும். அதே சமயம் அந்த வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைகளும் வந்து சேரும். எதிர்பார்த்த உத்யோக உயர்வில் தடைகள் ஏற்பட்டு விலகும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயம் கடனும் அதிகரித்து காணப்படும். சமூகத்தில் ஒரு பக்கம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொறுப்புகளின் தன்மைகள் உங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படும். எந்த வேலையும் கால தாமதம் செய்யாமல் அன்றாடம் அந்தந்த வேலைகளை முடித்தல் வேண்டும். புதிய முயற்சிகளை தொடரும் முன் நன்கு ஆலோசித்து சிந்தித்து செயலப்டுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகமாகவும் இருக்க பழகி கொள்ளுங்கள் பேச்சில் அதிக கவனம் தேவை.
 
அடிக்கடி தெய்வ தரிசனங்களை காணுதல் வேண்டும். தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். சுய தொழில்கள் ஒரளவு லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் லாபம் அடைவர். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வழக்குகள் சுமாரக இருந்து வரும். வேலையில் திருப்தியற்ற தன்மையே நிலவும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும். இல்லையேல் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். தாய்மாமன்களால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டாலும். இறுதியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். தேவையில்லாமல் ஆடம்பரச் செலவுகள் செய்தல் கூடாது.
 
உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது
 
உப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எண்ணிய காரியங்கள் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி நிச்சயமாகும். எதற்கும் மலைத்து போய் இல்லாமல் போராட்டமே வாழ்க்கை என்று முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருந்து வரும். ஒரு சிலருக்கு சுபச் செலவுகள் அதிகரித்து காணப்படும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். உங்களை பற்றிய விமர்சனங்கள் இக்காலங்களில் குறையும். தேவையற்ற விஷயங்களில் முயற்சிப்பதை சற்று தள்ளி போடுதல் வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும், அவர்களுக்கு சுபகாரியங்களும் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் கை கூடுவதில் நிறைய தடைகல ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருந்து வரும். சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் இருந்து கொண்டிருக்கும்.
 
தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமுடன் இருத்தல் வேண்டும். வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் யோகமும் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் தேவையற்ற பேச்சு வார்த்தை கூடாது. பாஸ்போர்ட், விசா, வருவது சற்று காலதாமதமாகும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை.
 
கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது
 
சனிபகவான் வக்ரம் ஆகி கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். உங்களுடைய பொறுமையும். பொறுப்பு உணர்ச்சியும் சோதிக்கப்படுகின்ற காலம். எனவே சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். பொன், பொருள், மனை, வீடு, இடம், வண்டி வாகனங்கள் வாங்க சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வந்து சேரும். எந்த வேலையில் இறங்கினாலும் தாமதம், தடை ஏற்படத்தான் செய்யும். அவைகளை கடப்பது தான் புத்திசாலிதனம். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும்.
 
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசித்தல் வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். தந்தையினரால் நன்மை ஏற்படும். வெளிநாட்டு செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் அமையும். அதனால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இக்காலங்களில் எதிர்பார்த்த செய்திகள் தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவார்கள். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் சற்று தாமதமானாலும் தவணை முறையில் வந்து சேரும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி லாபகரமாக இருந்து வரும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். தாயருக்கு இதுவரை இருந்து வந்த நோய் நொடிகள் நீங்கும் அல்லது குறையும் உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்தபடி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும், பயணங்கள் சாதகமாக இருந்து வரும். உங்களை பற்றிய வீண் வந்தந்திகள் அதிக அளவில் பரவியபடி இருக்கும். காதல் விஷயங்களில் எதிர்பார்த்த மகிழ்ச்சி சற்று குறைந்து காணப்படும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் கிட்டும். சுய தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். கூட்டுத் தொழில்களில் ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருந்து வரும். பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலையில் கவனம் தேவை. வேலையின் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுப் பின் விலகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.
 
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
எதிர்பார்த்த காரியங்கள் ஓரளவு நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகத்துடனும் இருந்து வருதல் வேண்டும். எந்தவொரு காரியத்தையும் நாளை என்று தள்ளிப் போடாமல் அன்றே செய்தல் நலம். வாழ்வில் சுகபோகங்கள் நேரத்திற்கு கிடைக்காமல் போனாலும் சற்று காலாந்தாழ்ந்து கண்டிப்பாக நடந்தேறும். உங்களது உழைப்பை உபயோகமான வழிகளில் வெளியிடுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் எது வாழ்க்கைக்குத் தேவையோ அதில் மட்டும் தலையிட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம். தேவையில்லாமல் கடன் வாங்குவதோ கொடுப்பதோ கூடாது. சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கூடும். எல்லோரையும் அனுசரித்துப் பழகுதல் வேண்டும். அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வரும். அதனால் தேவையற்ற வருத்தங்களும் ஏற்படும். புதிய உறவுகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியம் நடந்தேறும், காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் கூடும். வேலையில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிணக்கம் மறைந்து சற்று உற்சாகம் ஏற்படும். ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் கிட்டும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கடன்கள் அதிகரித்து கொண்டே செல்லும். தாய், தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
 
மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன காரியங்கள் ஓரளவு நடைபெற வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சச்சரவுகள், தட்டுபாடுகள் கடுமையான போரட்டதிற்குப் பின் சுமூகமாக அமையும். செல்வம் செல்வாக்கு பாதிக்கப்பட்டாலும் இறுதியில் ஓரளவு நிலைமை சீராகும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து உழைப்பை உயர்த்துதல் வேண்டும். சோம்பல் உதறி சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். பணப்புழக்கம் ஓரளவு சுமாராக இருந்து வரும். கொடுத்த பணம், பொருள் தவணை முறையில் வந்து சேரும். தந்தையின் உடல் நலத்தில் ஆரோக்யம் ஏற்படும். உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும், புதிய உறுப்பினர்கள் குடும்பத்தில் வந்து சேர்வர். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.
 
புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு அமையும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். அதிக அளவில் தொழிலில் முதலீடு செய்ய வேண்டி வரும். முதலாளி, தொழிலாளி உறவு சுமூகமாக இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனை இருந்து வரும். சுய தொழிலில் ஒரளவு போட்டி இருந்தாலும் லாபம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்களில் சுவாரஸ்யங்கள் குறைந்து காணப்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குழந்தை பேறும் அமையும். உடலில் அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் வந்து சேரும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறைந்து மகிழ்ச்சி கூடி வரும் காலம்.
 
sani peyarchi 2017 சனி பகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரித்து 3ம் பார்வையாக 10ம் இடத்தையும் 7ம் பார்வையாக 2ம் இடத்தையும் 10ம் பார்வையாக 5ம் இடத்தையும் பார்வையிடும் காலங்களில் ஏற்படும் பொதுப் பலன்கள்.
 
3ம் பார்வை பலன்கள்
 
சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தையும் பார்ப்பது நன்மை, தீமை கலந்த பலன்கள் 10ம் இடம் என்பது ஒருவரது தொழில் ஸ்தானம். அந்த இடத்தைப் பார்ப்பதால் இதுவரை வேலையில்லாமல் அல்லது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை இருப்பவர்களுக்கு வேறு வேலை கிடைக்க வழிவகை செய்வர். அதே சமயம் வேலை ஸ்தானத்தைப் பார்ப்பதால் பார்க்கும் வேலையில் இடைஞ்சல்களையும் மனசஞ்சலங்களையும், திருப்தியற்ற வேலையை தருவர். ஷை இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற வய்ப்புள்ளது. 10ம் இடம் என்பது அரசு, புகழ் மற்றும் கௌரவம் அந்தஸ்து இவற்றை கொடுத்து அதில் ஒரு சிறு குறையையும் கொடுத்து புகழை குறையச் செய்வர்.
 
7ம் பார்வை பலன்கள்
 
7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பது ஒரு பக்கம் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும். 7ம் பார்வையாக உங்கள் 2ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்ப்பது குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பது உங்களுக்கு எதிர்பாரவிதமாக தனவரவு, பொருள் வரவு ஏற்பட வாய்ப்பு அமையும். முன்னோர் சொத்துகள் கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அல்லது பண வரவு அமைய வாய்ப்புகள் அமையும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசவோ விவாதிக்கவோ கூடாது. கொடுத்த பணம், நகை, பொருள்கள் வீடு வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை.
 
உழைப்பு கேற்ற ஊதியம், லாபமும் கிட்டும். கொடுக்கல் வாங்கல் சீராக இருந்து வரும். பணப் புழக்கம் சரளமாக இருந்து வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 
10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தை பார்ப்பதால் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் 5ம் இடம் சுபகாரியங்களையும் சுப நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுவதுவாகும். அதே சமயம் குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பாக்யம் அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். உல்லாச பயணங்களில் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகரமானப் பயணங்களாக அமையும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும் கொடுத்த பணங்களை திரும்பி வாங்குவது அவ்வளவு எளிதல்ல, பணம், பொருள்கள், கண் முன் பறி போக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் புது வரவுகள் ஏற்படும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும் நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். காதல் விஷயங்களில் ஆரம்பத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் இறுதியில் அது சுமுகமாகவே அமையும்.
மிதுன ராசி
மிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்
 
(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக கா, கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)
 
வான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும் அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால் உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள். பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.
 
இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.
 
சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம் வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர் குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.
 
எனென்றால் 8ம் இடம் என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.
 
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.
 
தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.
 
இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.
 
வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல் திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.
 
ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியாக செவ்வாய் வருவதால் அடிக்கடி வேலை மாற வேண்டியது வந்தாலும் வேலை மாறாமல் இருப்பது சிறப்பானது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பார்க்கும் வேலையில் உங்களுடைய பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். அடிக்கடி லீவு போட வேண்டிய சூழ்நிலை வரும். அதை தவிர்த்தல் வேண்டும். கிடைத்த வேலையில் திருப்திகரமாக செயல்பட்டு உங்களுடைய திறமையையும் உழைப்பையும் அதிகரித்தல் வேண்டும். எந்த வேலையும் காலதாமதபடுத்தாமல் உடனே செய்தல் வேண்டும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு வந்து சேரும்.
 
தொழில் (BUSINESS, வியாபாரம் (TRADE)
 
பார்க்கும் தொழிலில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டாலும் தொழில் ஒரளவு சுமாராக இருந்து வரும். புதிய தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இருக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். தொழில்களில் தேவைக்கேற்ப முதலீடு செய்வது போதுமானது. சிறு தொழில்களில் ஒரளவு லாபம் இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகளும் லாபகரமாக இருக்கும். சாலையோர வியாபாரம் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை.
 
ஏற்றுமதி இறக்குமதி சுமாராக இருந்து வரும். பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. கனரக தொழில் உற்பத்தி, விற்பனை, பழுதுபார்ப்பது லாபகரமாக இருந்து வரும். இரும்பு, எஃகு, சிமிண்ட், நிலக்கரி, பெட்ரோல், கிரானைட் போன்ற கனிமவளத் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொடர்பு துறைகளில் லாபம் குறைந்தும், ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறைகள் ஏற்றம் அதிகரித்தும் காணப்படும். உணவு உடை, ஆபரணத் தொழில்கள் லாபகரமாகவும், நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் சாதகமாக இருந்து வரும்.
 
நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாகவும், சுற்றுலா, அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி விற்பனை அதிகரித்தும் காணப்படும், பத்திரிக்கை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பு விற்பனை விநியோகம் சற்று லாபம் குறைந்து காணப்படும். மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் சாதகமாக இருந்து வரும். ஆடம்பரம் பொருட்கள், பிளாஸ்டிக், ரசாயன உற்பத்தி ஆரம்பத்தில் சற்று லாபம் குறைந்து விட்டாலும் பின்னாளில் நல்ல லாபகரமாக இருந்து வரும்.
 
விவசாயம்
 
ஆரம்பத்தில் விவசாயம் சற்று சுமாராக இருந்தாலும், பின்னாளில் ஓரளவு லாபகரமாக அமையும். பழவகைகள், காய்கறிகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். அதே சமயம் பூக்கள் லாபகரமாக இருக்கும். கடன் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு பணப்பயிர்களால் லாபம் ஏற்படும். கடலை, கம்பு, வாழை, தென்னை, மஞ்சள் ஆகியவற்றில் சற்று லாபம் கிட்டும். நெல், கோதுமை, ஏலம், மிளகு, கிராம்பு போன்றவற்றில் லாபம் அதிகரிக்கும்.
 
அரசியல்
 
அரசியல் வாழ்வில் அதிக கவனம் தேவை. மேலிடத்தில் தேவையில்லாத பிரச்சனைகள், தொண்டர்களிடம் நல்ல பெயர் எடுக்காமல் போய்விட வாய்ப்புகள் அதிகம். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். பணவரத்து அதிகமாக இருக்கும் அதே சமயம் வழக்குகளின் செயல்கள் பயமுறித்திக் கொண்டே இருக்கும். குரு விருச்சகத்திற்கு வரும் காலங்களில் வசதிகள் அதிகரித்தும் எண்ணங்கள் ஈடேறும். பாடுபட்டதற்கேற்ப பலன்களும் உண்டாகும்.
 
கலை
 
கவனமும், காலம் தவறாத உழைப்பும் உங்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தி தரும். இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம், சினிமா, சின்னதிரை, ஜோதிடம், சிற்ப துறைகள், நல்ல லாபகரமாக அமையும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படவும் அதனால் நன்மையும் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். உழைப்புக் கேற்ற வருமானங்கள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு விருதுகளும், பட்டங்களும் தேடி வரும்.
 
மாணவர்கள் :
 
உயர்கல்வி பயில வாய்ப்புகள் அமைந்தாலும் நிறைய தடைகளை தாண்ட வேண்டியது வரும். படிப்பில் அதிகக் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதில் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் அமைய போராட வேண்டி வரும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறு சுறுப்பாக இருத்தல் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக சென்று வருதல் வேண்டும்.
 
பெண்களுக்கு
 
உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது காதல் வயப்பட ஒரு சிலரைச் செய்யும். காதல் கனிந்து திருமணத்தில் முடிய கடுமையாக போராட வேண்டி வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து வருவீர்கள். நிறைய படிக்க, எழுத, புதிய விஷயங்களை கற்க அதிக நேரம் ஒதுக்க சந்தர்ப்பம் அமையும். விரும்பியதை கற்க சந்தர்ப்பம் அமையும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் மற்றும் குழந்தை பாக்யம் அமைய வாய்ப்பு அமையும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
 
குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். பயணத்தினால் நன்மையும் தீமையும். கலந்தே காணப்படும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் திருப்தியற்ற தன்மையே அமையும். சக ஊழியர்களினால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் வந்து சேரும். எல்லோரிடமும் எச்சரிக்கையாகப் பழகுதல் வேண்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்த்தல் நலம். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவி உலவிக் கொண்டிருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். இரண்டாவது திருமணம் நடைபெறுவதிலும் ஒரு சிலருக்கு தடை ஏற்பட்ட பின் விலகும். ஆடை, ஆபரணங்கள் விரும்பியபடி அமையும். பணப்புழக்கம் எப்பொழுதும் போல் தாராளமாக இருந்து வரும். மனதை எப்பொழுதும் ஆன்மீக விஷயங்களில் செலுத்துவது நன்மை பயக்கும். சளித் தொல்லைகள் இல்லாமல் உடம்பை பாதுகாத்தல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்.
 
உடல் ஆரோக்யம்
 
தலை, கண், அடிவயிறு, ஜீரண உறுப்புகள், கால் போன்ற பகுதிகளில் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடல் உள் உறுப்புகளில் தேவையற்ற உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்குரிய காலம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. யோகா, தியானம் போன்றவற்றில் மனதை செலுத்துதல் வேண்டும்.
 
சனி பகவான் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9ம் இடங்களில் சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன்கள் ஏற்படும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று கால தாமதமாக வந்து சேரும். எடுக்கும் முயற்சிகள் கடுமையான போராட்டத்திற்குப் பின் நடந்தேறும். பேச்சில் எச்சரிக்கை தேவை. பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இராது. கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் நடந்தேறும். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும் அலைச்சல்கள் கூடும். வேலையில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். தேவை இல்லாத விஷயங்களைப் பேசுவதோ எழுதுவதோ கூடாது. அடிக்கடி ஆலய தரிசனம் செய்து வருதல் வேண்டும். தெய்வ அனுகூலத்தை கூட்டுதல் வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்குதல் கூடாது. தாய், பாட்டி, உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலையில் அதிகக் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தைகளால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுய தொழில்கள், முதலீட்டில் கவனம் தேவை. தேவையற்ற தொழில் முதலீடு செய்தல் கூடாது.
 
பூராடம்
 
சனிபகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஓரளவு நிறைந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். விருந்து கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும்.
 
அடிக்கடி வேலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். வேலையில் லீவு போட வேண்டிய சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடக் கூடாது. கடன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இதரச் செலவுகள் சுப விரயங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். நீண்ட காலமாக இருந்த நோயின் தன்மை குறைந்து காணப்படும். பணம் பொருள் கண் முன்னாலே பறிபோனது போல் இருக்கும். பொருட்கள் திருடு போக வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும். உல்லாச சல்லாபங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். புதிய உறவுகள் தாமாகவே வந்தமையும். புதிய நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.
 
உத்தராடம்
 
உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் வெற்றிச் செய்தியாக வந்து சேரும். புகழ் அந்தஸ்து சிறப்பு அமையும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். போக்கு வரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. தாயரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். அதே சமயம் உங்களைப் பற்றிய தேவையில்லாத வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். சகோதர சகோதரிகளின் நட்பும் அன்பும் அதிகரிக்கும், நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். வேலையின் நிமித்தமாக இடம், மனை மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. கூடியவரை அமைதியாக இருந்து வருவதே சிறப்பானது.
 
கேட்டை
 
கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதே சமயத்தில் எதிர்பார்த்த பொருள்வரவு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படும். தாயரால் எதிர்பாராத உதவி கிட்டும். உடன் பிறந்தவர்களால் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும்.. எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டு கொண்டிருப்பீர்கள். உயர்கல்வி பயில சரியான சந்தப்பமிது. ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். குழந்தைகளை விட்டுபிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். விருந்து கேளிக்கைகளில் சற்று நாட்டம் குறைந்து காண்பாடும். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிகக்வனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் உடலை பேணிக் காத்தல் வேண்டும். விரதத்தை தவிர்த்தல் நலம், நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும். வேலையில் அதிக கவனம் தேவை. எப்பொழுதும் டென்ஷனாக இருக்க வேண்டியது வரும். மனைதையும் உடலையும் இக்காலங்களில் சற்று ரிலாஸாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
 
மிதுனம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லவராவார். இதுவரை ஏற்பட்டு வந்த தடங்கள் நிவர்த்தியாகி எதிர்பார்த்த பலன்கள் இனிதே நடந்தேறும். அதே சமயம் வலுவான போராட்டத்திற்கு பின் வெற்றி நிச்சயமாகும். முயற்சிகள் நற்பலன் கொடுக்கும். பெயர், புகழ், சம்பாத்தியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். சகோதர சகோதரர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்து வரும். வண்டி வாகனங்கள் வீடு வாங்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விடக் கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. பிரயாணங்களில் அதிக அளவு ஈடுபாடும் விருப்பமும் அதிகரிக்கும்.
 
 
 
 
 
 
 
மிதுனராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
எதிர்பார்த்த எதிர்பாரத செய்திகள் சாதகமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள், மன உலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்கள் நண்பர்களாவர். நண்பர்கள் எதிரிகளாவர். புது முயற்சியுடன், புது எழுச்சியுடன் செயல்படுவீர்கள் எடுத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகள் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிப் பெற செய்வீர்கள். தாயரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
 
உடன் பிறந்தவர்களால் நன்மையும் அதே சமயம் மன உளைச்சல்களும் ஏற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. வேலையில் மாற்றம் அமையும் புதிய தொழில்களால் ஒரு சிலருக்கு இடமாற்றம் உண்டு. பொருளாதாரம் வலுவாக இருக்கும். நிலம், வீடு இவற்றில் முதலீடு அதிகரிக்கும். சுய தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மையும் ஏற்படும். தந்தையால் எதிர்பாராத நற்பலன்கள் கூடும்.
 
மிதுனராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இந் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்பாராத தன வரவும், பொருள் வரவும் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்பும் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அமையும் உடன் பிறந்தவர்களால் நன்மையேற்படும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. விபத்துகள், ஆப்ரேஷன் செய்ய சந்தர்ப்பம் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும், கடன்கள் அதிகரித்து, வட்டி கட்ட வேண்டி வரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் மாற்றம் ஏற்படும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற பாடுபட வேண்டி வரும். வேலையில் முன்னேற்றமும் இடமாற்றமும் ஏற்படும் தந்தையார் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பாடு விலகும். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவ வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.
 
sani peyarchi 2017
 
சனியின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும். ஒரு சிலருக்கு வேலை காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். தந்தையரால் நன்மையும் அதே சமயம் அவரது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பேரன், பேத்தி, மருமகன், மருமகள் என புதிய உறவுகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு உயர்கல்வி தடையேற்பட்டு பின் கல்வி தொடரும். உயர்கல்வி பயில வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். இதுவரை வந்து சேராத பாஸ்போர்ட், விசா வந்து சேரும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் கிட்டும். மூத்தோர்களின் ஆசியும் அன்பும் கிட்டும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்பு அமையும் பார்ட்னர்கள் லாபம் அடைவர்.
 
சனியின் 7ம் பார்வை பலன்கள்
 
7ம் பார்வையாக சனி பகவான் மிதுன ராசியைப் பார்ப்பதால் புகழ் கீர்த்தி அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறிது தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி அமையும் தேவையற்ற விஷயங்களில் தலையிடவோ பேசவோ கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எதிர்பாராத உதவிகள் வந்து சேர்ந்தாலும் அதை சரியாக பயன்படுத்த காலதாமதம் ஆகும். காதல் விஷயங்களில் ஈடுபாடும் அதில் வெற்றியும் ஒரு சிலருக்கு அமையும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரவும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். அதே சமயம் எதிர்பாராத பணவரவும் பொருள் வரவும் ஏற்படும். மனைவி அல்லது முன்னோர்கள் சொத்துக்கள் இருந்தால் ஒரு சிலருக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்து வரும்.
 
சனியின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 4ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை வராத சொத்துக்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதில் ஆரம்பத்தில் இருந்து வந்த தடை நீங்கி நினைத்த காரியம் நடந்தேறும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வாய்ப்புகள் வந்து சேரும். விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க போராட வேண்டியது வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. நினைத்த நேரத்திற்கு உணவு அருந்தவோ, சாப்பிடவோ முடியாமல் போகும். உணவு கட்டுபாடு அவசியம். தொழிலில் நிச்சயமற்ற தன்மையும் காண்ப்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சற்று சுனக்கம் ஏற்பட்டாலும் லாபம் கிட்டும். விவசாயம் லாபகரமாக அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் அமையும்.
 
கடக ராசி பலன்கள்
(புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
 
(ஹி – ஹூ – ஹே – ஹோ – ட – டி – டு – டெ – டோ – கொ – கௌ – மெ – மை போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
 
வான மண்டலத்தில் 4வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார். நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும் அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள்.
 
புனர்பூசம் 4ம் பாதம் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தை உடைய உங்கள் கடகராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான வெற்றி, ருண, ரோக, சத்குரு எதிரி கடன் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இதுவரை போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் அருமையை உணர வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.
 
6ம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில் முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். இதுவரை அடிக்கடி வேலை மாறிய அல்லது பார்த்த வேலையை விட்டுவிடக் கூடிய சூழ்நிலையில் இருந்த நீங்கள் இனிமேல் உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச் செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு ஊதிய உயர்வும் ஏற்படும். வேலையில் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
 
உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும் சகாயமாகவும் வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். இதுவரை வராமல் இருந்த வந்த சொத்து பத்துக்கள், நகைகள், பணங்கள் இனி தானாக வந்து சேரும்.
 
சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர்கள் வருகை நன்மையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வந்து சேரும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை போன்றவைகள் அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.
 
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
 
வேலையாட்களால் நன்மை ஏற்படும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புது புதுப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
 
காதல் விஷயங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சாதகமாகவும் இருந்து வரும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து அல்லது எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி இவற்றில் அதிக எச்சரிக்கைகள் தேவை. விசா, பாஸ்போர்ட் இவைகள் எளிதாக வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்களது ராசிக்கு 6ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுள் விரும்பிய வேலை கிடைக்கவும், வேலையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம். உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படும். வேளை நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நன்கு கிட்டும். உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தடை பெற்று நின்ற பென்ஷன் பி.எப் கிராஜிவட்டி போன்ற விஷயங்கள் இனிதே நடந்தேறும். பார்க்கும் வேலையை விட்டுவிட கூடாது.
 
தொழில் (Business) வியாபாரம் (Trade)
 
சுயதொழில் விஷயத்தில் சற்று நிதானம் தேவை. முதலீட்டில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். கூட்டாளிகள் பிரிய நேரிடும், புதிய தொழில் தொடங்குவதிலும் தொழிலை மாற்றிச் செய்வதிலும் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் முதலீடுகளில் அதிக கவனம் தேவை. தகவல் தொடர்பு, எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் லாபகரமாக அமையும். இரும்பு எஃகு, சிமெண்ட், ரசாயனம், கனிமவளங்கள் லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சற்று சுமாராக இருந்து வரும். சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, போக்குவரத்து சற்று லாபம் குறைந்து காணப்படும். உணவு விடுதி, ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா, திரையரங்குகள் லாபகரமாக இருக்கும். கப்பல், நீர், மீன் பிடித் தொழில்கள் சற்று சுமாரகவும், மருத்துவம் விஞ்ஞானம், ரசாயனம் லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஏற்றம் பெற்று பள்ளிக் கல்லூரி, பல்கலை கழகங்கள் சற்று லாபம் குறைந்து இருக்கும்.
 
விவசாயம்
 
மண்ணிலே போட்டதற்கு கண்டிப்பக ஒரு பலன் பார்க்கும் காலம் இதுவாகும். நிலத்தை பராமரிப்பதும் பயிர் சாகுபடி சிரமங்கள் தந்தாலும் ஓரளவு லாபம் அதிகமாக இருந்து வரும். மகசூழும் நல்ல லாபமாக இருக்கும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் பயறு வகைகள் ஓரளவு எதிர்பர்த்த லாபம் கிட்டும். மேலும் நெல், கோதுமை, கரும்பு, வாழை மற்றும் பணப்பயிர்களால் ஓரளவு நன்மை ஏற்படும்.
 
அரசியல்
 
உங்களை பற்றிய தவறான விமர்சனங்கள் குறைந்து உங்களைப் பற்றிய உயர்வும் மதிப்பும் உயர்ந்து காணப்படும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். அரசால் லாபம் ஏற்படும். எதிரிகள் எப்பொழுதும் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். மக்களின் ஆதரவு கிட்டும். வழக்குகள் சாதகமாக இராது. தலைமையின் அன்புக்கு கட்டுப்படுவீர்கள் நல்ல பணப்புழக்கம் இருந்து வரும்.
 
கலை
 
கலைத்துறை ஏற்றமுடன் இருந்து வரும். இதுவரை வெளிவராமல் போன உங்கள் திறமையை வெளிபடுத்தும் சரியான காலம் ஆகும். ஓய்வின்றி எப்பொழுதும் வேலை இருக்கும் காலமாகும். இசை, ஓவியம், நடனம், நாட்டியம், நாடகம் ஆகியவை பரபரப்பாக இருந்து வரும். பரிசும் பாராட்டும் எதிர்பாராத வகையில் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும்.
 
மாணவர்கள்
 
எதிர்பார்த்த பள்ளி கல்லுரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். படிப்பில் சந்தேகம், சஞ்சலம் தடுமாற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு அமையும். விளையாட்டில் அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு விளையாட்டில் பரிசு பெற சந்தர்ப்பம் அமையும். தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். கல்வி கடன்கள் எளிதாகக் கிடைக்கும். கல்வியின் உயர்கல்வியின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு செல்லலாம்.
 
பெண்கள்
 
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு வெளியூர் செல்ல வாய்ப்பு கிட்டும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள்கள், ஆடை, ஆபரணங்கள் தானாகவே வந்து சேரும். அக்கம் பக்கத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் வந்து சேரும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். புத்ரபாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ரபாக்யம் ஏற்படும். வேலையாட்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடம்பில் சளித் தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடலின் மேல் தேமல், கட்டி, போன்ற நோய்கள் வராமல் கவனித்தல் நலம். கண் அடிவயிறு பிரச்சனைகள் வராமல் பார்ப்பது நலம். அத்துடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலமிது. எனவே உடலில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும்.
 
சனிபகவான் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள்
 
மூலம் :
 
சனிபகவான் மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கடக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு சற்று சுமாரான பலன்கள் ஏற்படும். இதுவரை முடியாமல் இழுபறியான காரியம் இனிதே நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதே சமயம் எதற்கும் போராடியே வெற்றி பெற வேண்டி வரும். அனாவசிய சிரமங்களும் சில சமயங்களில் அலைச்சல்களும் அதிகரிக்கும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. வழக்கு, எதிர்ப்பு, பிணி, பீடை, விரோதம் இவற்றிலிருந்து விடுபட்டாலும் மறுபடியும் மறுபடியும் ஏதாவது ஒரு பிரச்சனை தலையெடுத்த வண்ணம் இருக்கும். இருப்பினும் முயற்சியும் தெய்வபக்தியும் அதிகரித்தால் இவற்றிலிருந்து விடுபட வழி ஏற்படும். உடன் பணிபுரிந்தவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும்.
 
பூராடம்
 
சனிபகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் கடக ராசிக் காரர்களாகிய உங்களுக்கு புதிய முயற்சிகள் எடுக்கும் காரியங்களில் சற்று தாமதம் ஏற்பட்டு பின் சரியாகும். சுப காரியங்கள் இனிதே நடந்தேறும், சுபச் செலவுகள் அதிகரிக்கும் தாயாரின் உடல் ஆரோக்யம் நன்கு அமையும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய காலமாகும். சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கள், விவகாரங்கள் விலகி அவைகள் கைக்கு வந்து சேரும். சொந்தமாக இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்து சேரும். வேலையில் திருப்தியற்ற தன்மை இருந்து கொண்டே இருக்கும். மன உலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கால்நடை மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளால் லாபம் ஏற்படும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலையில் மாற்றமும் ஏற்படும் காலமாகும் பெற்றோர்களுக்கான கடமைகளை சரிவர செய்வீர்கள் எதிலும் உடனடியாகவும், உறுதிபடவும் முடிவெடுக்க தயங்குதல் மற்றும் சுனக்கம் கூடாது. பிள்ளைகளை விட்டுப் பிரிய நேரிடும் குழந்தைகளால் சுப விரயம் ஏற்படும் காலமாகும்.
 
உத்தராடம்
 
சனிபகவான் உத்தராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் ராசிக்கு சற்று நற்பலன்கள் அதிகரிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பேச்சில் அதிக லாபம் அடையலாம் பண வரவுகள் தாரளமாக இருந்து வரும். பண வரவுகள் தாரளமாக இருந்து வரும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். அக்கம் பக்கம் கௌரவம் அந்தஸ்து அதிகரிக்கும் இதுவரை வராமல் இருந்து வந்த பணம் பொருள் கைக்கு வந்து சேரும். எப்பொழும் சுறுசுறுப்புடன் இருக்கும் சூழ்நிலை அமையும் சகோதர சகோதரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களை விட்டு பிரிய நேரிடும். சுப நிகழ்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிட்டும். எதிர்பாராத தனவரவு அமையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை அமையும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமையும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும்.
 
கேட்டை
 
நட்சத்திரத்தில் சனி பகவான் தங்களுக்குரிய ராசியில் சஞ்சரிக்கும் காலங்கள் சற்று சுமாரான காலம் என்றே சொல்ல வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் அதிகரிக்கும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். நெருங்கிய உறுப்பினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமாகவும் அமையும். திருப்தியான மனநிலை இருந்து வரும். அதே சமயம் பணவரவு சீராக இருந்து வரும். தந்தையாரால் எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிட்டும். நட்பு வட்டாரங்களில். விரிசல்கள் ஏற்படும் விலகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும்.
 
புனர்பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
 
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த இக்கட்டுகள் குறைய ஆரம்பிக்கும். உழைப்பு கேற்ற ஊதியமும் வருமானமும் சீராக இருந்து வரும். இதுவரை பாடுபடுத்தி வந்த நோயின் தன்மை குறையும் அல்லல்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். அடிப்படையான வசதிகளுக்கு குறைவிருக்காது. படிப்பு, பயிற்சி முடித்த உடனே வேலை கிடைக்கும். வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சீராக இருந்து வரும் நேரத்திற்கு உணவு அருந்த முடியாமல் போகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி நிச்சயம் பரிசுகள் மற்றும் நன்மதிப்பு பெற வாய்ப்பு அமையும். நல்ல ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் வலுவாக இருக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் சில பேருக்கு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா எளிதில் வந்தடையும். கடன்கள் அதிகரிக்கும், அதே சமயம் நோயின் தனமையும் அதிகரித்து காணப்படும். எப்பொழுதும் சுறு சுறுப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பீர்கள்.
 
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இந் நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்த நிலை மாறி வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். சுய தொழில்கள் சற்று சுமாரகவே இருந்து வரும் பங்கு சந்தை ஏற்றமாக இருந்து வரும். உழைப்புகேற்ற ஊதியத்தை கொடுப்பதில் சனி சற்று தயக்கம் காட்டுவார். அதே சமயம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செய்திகள் சாதகமாக இருந்து வரும். கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி உறவில் விரிசல்கள் ஏற்பட்டு மனத்தாங்கல் ஏற்படும். அம்மாவின் தேவைகளை கவனிக்க முடியாமல் போய்விடும். நோயின் தன்மை கூடிக் கொண்டே இருக்கும். குறையாது அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களால் மன வருத்தங்கள் ஏற்படும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் மனைவிக்கு அடிக்கடி உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்படும்.
 
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும் அதனால் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று தாமதமாக வந்து சேரும் இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். முயற்சிகளில் சற்று தடுமாற்றம் ஏற்படும். போட்டிகள் எதிர்ப்புகள் தோன்றி மறையும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். சுய தொழில் சிறு தொழில்களில் அதிகக் கவனம் தேவை. வண்டி வாகனங்கள் ஓட்டி பழக சந்தர்ப்பம் அமையும். உள்ளத்தில் புதிய ஊக்கமும், உறுதியும் உண்டாகும். அதை செயல்படுத்துவதில் கடுமையாகப் போராட வேண்டி வரும். மேலும் பாஸ்போர்ட், விசா இவற்றில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்யத்தில் குறைவு ஏற்பட்டு தேவையற்ற வைத்தியச் செலவுகள் ஏற்படும். கடமைகளையும் காரியங்களையும் ஒழுங்காக செய்து வருதல் வேண்டும் குழந்தைகளால் நன்மை உண்டாகும். வேலையின் காரணமாக இடமாற்றங்கள் அமையும்.
 
 
சனியின் 3ம் பார்வை பலன்கள்
 
உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் லக்னத்திற்கு 8ம் இடத்தை பார்வை செய்வது நல்லதல்ல. 8ம் இடம் போக்குவரத்து வண்டி, வாகனங்களில் விபத்தை உண்டுபண்ணும் இடமாதலால் அதிக எச்சரிக்கை தேவை. ஆப்ரேஷன் மற்றும் அரசால் தண்டிக்கப்படுவதையும் குறிப்பிடுவதால் கவனம் தேவை. 8ம் இடம் என்பது அசிங்கம், அவமானம், வேதனை, துன்பம், துயரம் இவற்றை குறிப்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற விரயம், அலைச்சல்கள், அவமானங்களும் ஏற்படும். அதே சமயம் கணவன் அல்லது மனைவியின் பண வரவும், பொருள் வரவும் அதிகரிக்கும். முன்னோர்களது சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பும் எதிர்பாராத பணவரவும் பொருள்வரவும் அமையும். வழக்குகளால் தேவையற்ற பிரச்சனைகள் மன வருத்தங்கள் ஏற்படும். அரசாங்க பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
சனியின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பது சற்று சுமாரான பலன் தரும். தேவையற்ற விரயம், நஷ்டங்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடை நீங்கி வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்ப்பம் அமையும். முற்றிலும் புதிய சூழ்நிலைகளில் வாழும் நிலை ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற வைத்திய செலவுகள் ஏற்படும். பங்கு சந்தையில் முதலீடு கூடாது. அடிக்கடி பிரயாணங்களில் இருக்க நேரிடும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்படும். தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடகூடாது. புதிய தொழில் தொடங்குவதில் கவனம் தேவை. பார்ட்னர்கள் பிரிய நேரிடும்.
 
சனியின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடத்தை பார்ப்பது மிகவும் நற்பலன். 3ம் இடம் முயற்சி ஸ்தானம். ஆரம்பத்தில் முயற்சியில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். சகோதர சகோதரிகளால் சற்று பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களால் நற்பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்கள் கைகூடும் புதிய விஷயங்களை கற்க வாய்ப்பு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும் அவர்களால் நன்மை உண்டாகும். உங்களை காட்டிலும் இளையவர்களால் நன்மை ஏற்படும். விசா பாஸ்போர்ட்டில் இருந்த தடைகள் நீங்கும். நினைத்த நாடு செல்வதற்கு வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் கிட்டும். மதிப்பும் மரியாதையும் உயரும்.
சிம்ம ராசி பலன்கள்
(மகம், பூரம், உத்தரம் – 1ம் பாதம்
 
(மா – பி – மு – மே – மோ – மௌ – ட – டி – டே) போன்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள் ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு – இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
 
வான மண்டலத்தில் 5வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசி நாதன் ஆகிய சூரியபகவான் நவக்கிரகங்களில் முதலாவது கிரகமாகும். உலக உற்பத்திக்கும், உயிர்கள் வாழ்வதற்கும் சீராக தன்னுடய கதிர்களை வாரி வழங்கும் வல்லமை பெற்ற சூரியன் கிரகங்களில் நம்முடைய கண்களுக்கு தெரியும் முதல் கிரகமும் ஆகும், மற்றும் எல்ல கிரகங்களுக்கு தலைமையாக உள்ள சூரிய பகவான் ராசி நாதனாக பெற்ற சிம்ம ராசியில் மகம், பூரம் உத்திரம் என்ற 3 நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டது.
 
நவக்கிரகங்களில் முதன்மையானது சூரியன் ஆகும். அதுபோல் அரசாளும் யோகமும், எதிலும் முதன்மையாகவும் விளங்க விருப்பமுடையவர்கள். நீங்கள் பொன்னையும் பொருளையும் பெரிதாக மதிக்கும் இவ்வுலகில் புகழுக்காக இவ்வுலகில் எதையும் துணிந்து செயல்படுவீர்கள். நிர்வாகத் திறமை ஆட்சி அதிகாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு உரியவரான நீங்கள் எதையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்மைக்கும், நேர்மைக்கும் போராடி வெற்றி பெறுவீர்கள் இக் குணநலன்கள் உடைய உங்களுக்கு சனிபகவான் தனுசு ராசியிலிருந்து சஞ்சாரம் செய்து அளிக்ககூடிய பலன்களை பார்க்க இருக்கிறோம்.
 
உங்களது ராசிக்கு 5ம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வது இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடைபெற கூடிய வாய்ப்பாகும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பாகும். சனிபகவான் பாபக்கிரகம் என்பதால் உங்களது ராசியின் 5ம் இடமான புத்தி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது புத்தியின் தன்மைகேற்ப செயல்படுவீர்கள், சிலசமயம் நல்ல அறிவும் ஆற்றலுடன் சிந்திக்கும் குண்முடைய நீங்கள் சில சமயங்களில் மறதியும், கவனச் சிதறலும் உடையவராக இருப்பீர்கள்.
 
உடல் ஆரோக்யம் சீராகி மகிழ்ச்சியாக இருக்கும் காலம். தீர்க்க முடியாத பிணி மற்றும் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும் பேச்சில் சாமர்த்தியம் நன்மை உண்டாக்கும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்யம் காணப்படும்.
 
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு நிம்மதியற்ற சூழல் ஏற்படும். அதே சமயம் நன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது. விருந்து கேளிக்கைகளில் நாட்டம் குறையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விலகும். பூஜை, புனஸ்காரங்கள், கோவில், குளம், பக்தி பிரார்த்தனைகள் இவற்றில் அதிக ஈடுபாடு ஏற்படக் கூடிய காலமாக உள்ளது.
 
காதல் விஷயங்கள் உற்சாகமாக இருந்து வரும். காதல் கை கூடி திருமணத்தில் ஒரு சிலருக்கு முடியும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். வழக்குகள் ஜெயிப்பது போல் தோன்றினாலும் எதிரி வலுவாக இருக்க வாய்ப்புண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம்.
 
ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். விரதம் போன்ற விஷயங்களைக் கைவிட்டு உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் தேவையற்ற வருத்தங்கள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்யம் அமையும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்துவார். கிடைத்த வேலையில் நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்வார். பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடக் கூடாது. அடுத்த வேலை கிடைக்க கால தாமதம் ஆகும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் மன வருத்தம் கொள்ளச் செய்வார். உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமாக இருக்கும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. வேலயின் காரணமாக இடமாற்றம் ஒரு சிலருக்கு அமையும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளே லாபம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும். எனவே கவனம் தேவை. சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள் ஓரளவு லாபகரமாக அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றமாகவும் நல்ல லாபம் ஈட்டுவதாகவும் இருக்கும். கமிஷன் ஏஜென்ஸிஸ், புரோக்கரேஜ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, போக்குவரத்து, தகவல் தொடர்பு லாபகரமாக இருக்கும். ரேஸ், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் தேவையற்ற முதலீடு கூடாது. இரும்பு, எஃகு, சிமெண்ட், இரசாயனம் சற்று சுமாராக இருக்கும். உணவு, ஆடை, ஆபரணம், எரிபொருள், எண்ணெய், நிலக்கரி, பெட்ரோல், டீசல் இவைகளில் சற்று லாபம் குறைந்து காணப்படும். கனரகத் தொழில்களில் பெரிய அளவில் முதலீடு கூடாது. சினிமா, தொலைகாட்சி, பத்திரிக்கை, சுற்றுலா, திரையரங்குகள் லாபகரமாக இருக்கும். நிதி, நீதி,வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக அமையும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் லாபம் குறைந்தும் மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஏற்றமுடன் விளங்கும். பிளாஸ்டிக், மரம், உணவு பொருட்களில் லாபம் அதிகரித்து காணப்படும். கப்பல், நீர், மீன் உற்பத்தி தொழில்கள், உப்பு மருந்துப் பொருட்கள் லாபகரமாக இருந்து வரும்.
 
விவசாயம்
 
சாகுபடிகள் சாதகமாக இருக்கும். காய், பழம், பூ, போன்றவற்றில் லாபம் அதிகரித்தும் கரும்பு, நெல், கோதுமை, பருப்பு, பயறு வகைகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். விவசாயக் கடன்கள் அதிகரிக்கும். கடலை, தென்னை, வாழை மற்றும் பருவ விளைச்சல்களில் லாபம் குறைந்து காணப்படும். புதிய சொத்துக்கள் அல்லது நிலங்கள் வாங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குவதல் கூடாது.
 
அரசியல்
 
நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுத்தல் வேண்டும். சமூகத்தில் பெயர், புகழ் அந்தஸ்து ஏற்பட்டாலும் அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற போட்டிகள் தவிர்த்தல் நலம். எதிரிகள் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். பண விஷயங்களில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விரயங்கள் நஷ்டங்கள் ஏற்படும். உங்களுக்கென்று இருக்கும் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையை ஓட்டுதல் வேண்டும்.
 
கலை
 
ஒப்பனை, உடை, அலங்காரம், நடிப்பு, டப்பிங் வாய்ஸ், கிராபிக்ஸ் போன்ற கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாகும். இசை, நடனம், நாடியம், ஒவியம், சிற்பக்கலையில் இருப்பவர்களுக்கு இது ஏற்றமான காலமாகும். பரிசுகளும், பாராட்டுகளும் தாமகவே ஒரு சிலருக்கு தேடி வரும். மறைமுகமான எதிர்ப்பு போட்டி பொறாமைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். திறமையாளர்கள் மேலே வரவேண்டிய தருணம் உங்கள திறமையானவர்கள் அதிகரித்து கொள்ளுங்கள்.
 
மாணவர்கள்
 
விளையாட்டுகளில் அதிகக் கவனம் செல்லும். தேவையற்ற விஷயங்களில் மனதை ஈடுபடுத்துதல் கூடாது. சந்தேகம் அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை விட்டு ஒழித்தல் வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராட வேண்டியது வரும். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.
 
பெண்கள்
 
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும், சாதகமாகவும் அமையும். இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன திருமணம், குழந்தை பேறு போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அதுவாக வந்து சேரும். கணவன் மனைவி உறவு சற்று மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்து வரும். 2வது திருமணத்தில் இருந்த தடை நீங்கி ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டாகும். விவகாரத்துக்கள் இழுபறியாக இருந்து வரும். பொருளாதாரம் ஏற்றமுடன் இருந்து வரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகையால் மகிழ்ச்சி அமையும். பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. அவசரப்பட்டு வேலையை விட்டு விடுதல் கூடாது. புதிய வேலை கிடைக்க தாமதமாகும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளால் உற்சாகமும் நன்மையும் அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இடம், மனை, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும். பகுதி நேரமாக உயர்கல்வி பயிலவோ அல்லது வேலை பார்க்கவோ வாய்ப்புகள் அமையும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. உடம்பில் ஏற்பட்ட நோயின் தன்மை குறைவது போல் தோன்றினாலும் நோயின் தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கும். உடம்பில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நலம். அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் கால்வலி, அடிவயிற்று பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டி வரும்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். காதல் கனிந்து திருமணத்தில் முடியும். தேவையற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர்கள். மேலும் பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடுதல் கூடாது. விருந்து கேளிக்கைகள் உல்லாச சல்லாபங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டு பந்தயங்களில் வெற்றி கிட்டுவது நிச்சயம் என்று கூற முடியாது. எழுத்துத் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியில் தடையேற்படும். கலைத்துறையில் எதிர்பாராத பணவரவு, பொருள்வரவு ஏற்படும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். நேரத்தை வீணாக்காமல் செயல்படுதல் வேண்டும். நண்பர்களால் எதிர்பாராத பணவரவும் பொருள்வரவும் ஏற்படும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். கடன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கொடுத்த பணம் பொருள் வருவதில் தடை ஏற்படும்.
 
பூராடம்
 
இதுவரை முடியாமல் இழுத்தடித்த விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும். எதிலும் முடிவு எடுக்க முடியாமல் இருந்த விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் ஏதாவது ஒன்றை படித்த்க் கொண்டும் எழுதிக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருப்பீர்கள். அடிக்கடி பிரயாணங்கள் அமையும் அவை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்து வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையும் அமையும் நிலவும். உங்களை அறியாமல் இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள் சீராகும். சுய தொழில்கள் சிறு தொழில்கள் உற்பத்தி சார்ந்த துறைகள் ஓரளவு லாபகரமாக இருக்கும். படிப்பதற்கான வழிவகைகள் தாரளமாக அமையும். அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒரளவு கிட்டும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும்.
 
உத்தராடம்
 
இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். விருந்து கேளிக்கைகளில் அடிக்கடி ஈடுபட வேண்டியது வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் சற்று அதிகரித்து காணப்படும். மற்றவர்களை தவிர்க்காமல் அவர்களோடு ஒத்துழைத்து வாழ பழகிக் கொள்ளல் வேண்டும். சுயத்தொழில்கள் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. கொடுத்த பணம் பொருள் எதுவும் எளிதில் வந்து சேராது. பார்க்கும் வேலையில் அதிக எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் உங்களுக்கு தேவை இல்லாத பிரச்சனைகள் தோன்றி மறையும்.
 
கேட்டை
 
வேலையில் அதிக கவனம் தேவை. தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன் மதிப்பும் அதிகரிக்கும். தாய் மாமன்களின் அன்பும் அவர்களால் சகாயமும் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். வேலை இல்லாமல் சுற்றி திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும்.
 
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
மகம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கேது பகவான் உங்கள் ராசிக்கு 7, 6, 5, ராசிகளில் சஞ்சரிப்பது ஒரு பக்கம் சாதகம் என்றாலும் மற்றொரு பக்கம் சுமாரான பலன்கள் உண்டாகும். வழக்குகள் இருப்பின் இழுபறியாகவே இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்படும். பார்க்கும் வேலையில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரியாகி விடும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். கலைத்துறையில் எதிர்பாராத பணவரவும், பொருள் வரவும் கிட்டும். அடிக்கடி ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தெரிசனம் கிட்டும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடும். கொடுத்த பணம், பொருள் திரும்ப வருவதில் தடையேற்படும். வேலையில் மாற்றம் அமையும். வேலையின் காரணமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.
 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
புதுப்புது விஷயங்களைக் கற்பதில் ஆர்வமாக இருப்பீர்கள், புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபடுவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அடிக்கடி குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படும். அது நன்மையாகவே முடியும். இதுவரை மனதில் குடி கொண்டிருந்த இனம் தெரியாத பயம் குழப்பம் நீங்கி தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பு அமையும். கடன் வாங்கியவர்கள் கடனை திரும்பத் தவணை முறையில் கொடுப்பார்கள். கையை விட்டு போன பொருட்கள் திரும்ப வர ஆரம்பிக்கும். பத்திரங்கள், நகைகள் திரும்ப கைக்கு வந்து சேரும். வேலையில் முன்னேற்றமும் எதிர்பாராத ஊதிய உயர்வும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், அதனால் எதிர்பாராத தனவரவும், பொருள் வரவும் கிட்டும். சுபகாரியங்கள் நடக்க கூடிய வாய்ப்பும் மற்றும் அதிர்ஷ்ட காற்று சற்று பலமாகவும் வீசும்.
 
உத்தரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
எந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த உங்களுக்கு உங்களுடைய திறமை, முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணர ஆரம்பிப்பர். உங்கள்து திறமையை முழுமையாக புரிந்து அதற்கேற்ப உங்களை பயன்படுத்தும் காலம் இதுவாகும். கணவன் மனைவி உறவு ஒரே சீராக இருந்து வரும். குடும்பத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வலம் வருவீர்கள். உங்களை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மனசஞ்சலம் தடுமாற்றம் இல்லாமல் ஒரே சீராக எடுத்த காரியத்தை முடிக்க முயல்வீர்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். புத்ர பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை தீராத நோயின் தன்மை குறைந்து மகிழ்ச்சி அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கடன்கள் அடையும் வீட்டு உபயோகப் பொருட்கள் தானாகவே வந்து அமையும். விசா, பாஸ்போர்ட் வந்து சேரும். தொழில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீட்டை தவிர்க்கவும்.
 
 
சனியின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தை பார்ப்பதால் திருமணம் சற்று தாமதமானாலும் எல்லாமே நன்மையாக முடியும். 7ம் இடத்தை பார்க்கும் காலங்களில் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்ய வேண்டுமானால் ஜனன ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அதன்பின் செயல்படுதல் வேண்டும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். காதல் திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் அதிகரிக்கும். வேலையாட்களால் மன திருப்தியும் ஒத்துழைப்பும் கிட்டும். வெளிநாட்டு தொடர்பால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஏற்றுமதி இறக்குமதி சீராக இருந்து வரும். வெளிநாடு செல்வதில் தேவையற்ற தடைகள் ஏற்படும்.
 
சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி உங்கள் ராசிக்கு 7ம் பார்வையாக 11ம் இடத்தை பார்ப்பதால் உங்களுடைய ஆசைகள் அபிலாஷைகள் பூர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகி உங்கள் எண்ணம் பூர்த்தியாகும் மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு சுபகாரியங்கள, சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். எடுக்கும் புது முயற்சிகள் நல்லபடியாக அமையும். அடிக்கடி பயணங்கள் அமையும். அவை மகிழ்ச்சிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். குடும்பத்தில் புதுவரவுகள் அதிகரிக்கும். அதனால் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வண்டி வாகனம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும், நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும் விரும்பியதில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் திருப்தியாக எல்லாம் நடந்தேறும்.
 
சனிபகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
சனிபகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பதால் இதுவரை நிலுவையில் இருந்து வந்த வராத பணம், நகை, பொருட்கள் எல்லாம் தவணை முறையில் வந்து சேரும். பேச்சில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற பேச்சுக்களைக் குறைத்தல் வேண்டும். பணம், பொருள் சாதகமாக இருந்து வரும். கூட்டு குடும்பத்தில் சிற்சில சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் புது வரவால் சிற்சில குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும். நேரத்திற்கு உணவு உண்ணுதல். வேலையின் நிமித்தமாக வரவேண்டிய பி.எப், இன்சூரன்ஸ், கிராஜிவிட்டி போன்றவைகள் சற்று தாமதமாக வந்து சேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு, பொருள் வரவு கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் அமையும். முகம், கண், பல், போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கூடியவரை விரதம் இருப்பதை தவிர்த்தல் நலம். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி ராசி
உத்தரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2
 
(டோ, ப, பா, பி, பூ, வி, ள, ட, பே, போ என்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்
 
வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதபகவான் வீட்டில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
 
அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம்.
 
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.
 
சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.
 
உங்களது லக்னத்தின் 2ம் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். அதனால் இதுவரை இருந்த வந்த பொருளாதார தேக்க நிலை மாறி பணவரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். இதுவரை கையை விட்டுப்போன பொருட்கள் நகைகள் பத்திரங்கள் திரும்ப வீடு வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
 
புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. குறிப்பாக உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் குறிப்பாக சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும்.
 
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிகக் கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.
 
கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வலுவான போராட்டத்திற்கு பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்களது ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஒரு சிலருக்கு வேலையில் திருப்தி இல்லாமல் பார்க்கும் வேலையை விட்டுவிட வாய்ப்பு அமையும் எனவே அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலை நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். உங்களுடைய பொறுப்பு உணர்ச்சிக்கு சற்று சோதனை ஆன காலமாகும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு ஒரு சில இழுபறிக்கு பின் ஈடேறும். அரசு வேலை கிடைக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் இதில் எதிர்பார்த்த திருப்தி இராது.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (JOB)
 
உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் நல்ல லாபம் ஏற்படும் சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக இருக்கும். சுய தொழில்கள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு எஃகு, சிமெண்ட், நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் துறை சற்று லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ரக்ட், கன்சல்டன்சி, கட்டுமானம் சற்று லாபம் குறைந்து காணப்படும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, வண்டி வாகனங்கள் உற்பத்தி நல்ல லாபகரமாக அமையும். பெட்ரோல், டீசல், நிலக்கரி இயற்கை எரிவாயு லாபகரமாகவும், ரேஸ், லாட்டரி, சூதாட்டம் ஆரம்பத்தில் லாபம் குறைந்தும் பின்னால் லாபகரமாகவும் இருக்கும். பங்குச் சந்தை ஆரம்பத்தில் லாபம் அதிகரிக்கும் பின்னால் லாபம் குறைந்தும் காணப்படும். ஆடை, ஆபரணங்கள், பிளாஸ்டிக் தொழில்கள் லாபகரமாகவும் அமையும். மருத்துவம், விஞ்ஞானம், நிர்வாகம் நல்ல சாதகமாக அமையும். உணவு, ஓட்டல், சுற்றுலாத் துறைகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பள்ளி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். விதை, உரத் தொழில் சற்று லாபம் அதிகரிக்கும். உப்பு நீர், கப்பல், மீன் பிடித் தொழில்கள் நல்ல லாபகரமாக அமையும். முகவர்கள், வியாபாரப் பிரதிநிதிகள் மிக அதிக பலன் அடைவார்கள். மருந்து பொறியியல், மருத்துவ பொருட்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பத்திரிக்கை, எழுத்து படைப்பு, உற்பத்தி, தகவல் தொடர்பு சீரும் சிறப்புமாக அமையும்.
 
விவசாயம்
 
புதிய நிலபுலன்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். பயிர் வளம் ஓரளவு நல்ல செழித்து வளரும். லாபம் சற்று அதிகரித்து காணப்படும். கரும்பு, நெல், கோதுமை, சோளம், பருப்பு வகைகள் சற்று லாபம் அதிகரிக்கும். பழங்கள் காய்கறிகள் நல்ல வருமானம் தருபவையாக இருக்கும். வாழை, தென்னை, கடலை மற்றும் பருபயிர்கள் விளைச்சல்கள் அதிகரித்து காணப்படும்.
 
அரசியல்
 
அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருந்து வரும், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதுமானதாகும். எதிரிகள் அதிகரித்த வண்ணம் இருப்பர். தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க தேவையான தகுதிகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். சட்டச் சிக்கல்களில் மாட்டமலும், எதையும் தாக்குபிடிக்கும் சக்தி, உடனுக்குடன் உடன் முடிவெடுக்கும் திறமை நீங்கள் வளர்த்து கொள்ளல் வேண்டும். சொத்துகள் நிறைய சேரும் தருணம்.
 
கலை
 
உங்களது முழு திறமையை வெளிபடுத்தினால் மட்டுமே உங்களால் பிரகாசிக்க முடியும். உங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். ஜோதிடம் இசை, நடனம், நாட்டியம், ஒவியம், சிற்பத்துறையில் இருப்பவர்களுக்கு சற்று சுமாரான காலமாகும். ஒரு சிலருக்கு பரிசும் பதவிகளும் தாமதமாக வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு லாபகரமாக இருக்காது. சினிமாத்துறை சற்று சுமாராக இருந்து வரும்.
 
மாணவர்கள்
 
நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியது வரும். மந்தமும், சலிப்பும் படிப்பு விஷயத்தில் தோன்றாமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குதல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். விளையாட்டுகளில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த கூடாது. கல்விக் கடன் கிடைப்பதில் இழுபறியாக இருந்து வரும். கூடிய வரை தேவையற்ற நட்பு வட்டாரத்தை தவிர்க்கவும்.
 
பெண்கள்
 
வேலை தேடுபவர்களுக்கு முதலில் கிடைத்த வேலையில் அமரவும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை மற்றும் அமைதியற்ற நிலை ஏற்பட்டாலும் வெறுப்பு இல்லாமல் வேலையைப் பார்த்தல் வேண்டும். வேலையில் அடிக்கடி லீவு போட வேண்டி வரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடக் கூடாது. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும், படிப்பு நன்கு அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவு சற்று சந்தோஷமாக இருக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். குழந்தை பாக்யத்தில் நிறைய தடைகள் ஏற்பட்டு. விலகும். குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. உறவினர்களால் நன்மையும், சக ஊழியர்களால் எதிர்பாராத நன்மையும் ஏற்படும். கணவனின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடம்பில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிவயிறு, பாதம் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் வராமல் நிறைய ஓய்வு எடுத்து கொள்ளல்; வேண்டும். நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும் உயர்வும் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றியும், அதனால் வெலையும் பரிசும், பணமும் ஆரம்பத்தில் அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கொடுத்த பனம் பொருள் வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் பிரச்சனைகள் வந்து பேகும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் நட்பும், ஒத்துழைப்பும் நன்கு கிட்டும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். விவசாயம் சாதகமாக இருக்கும். பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையில் எதிர்பார்த்த பண வரவும், பொருள் வரவும் அமையும். அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
 
பூராடம்
 
சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார வளம் சற்று அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். இதுவரை விலகிச் சென்ற உறவுகள் தாமாகவே வந்து சேர வாய்ப்பு அமையும். கொடுத்த பணம் பொருள் வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். சொத்துக்கள் தாமாகவே வந்து சேரும். நல்ல வசதியான வாழ்க்கை உருவாவதற்கு உரிய சூழ்நிலை அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பங்குச் சந்தையில் சற்று லாபம் அதிகரிக்கும். சுயதொழில்கள் சற்று லாபகரமாகவும் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று தடுமாற்றத்துடன் இருந்து வரும். தள்ளிப் போனத் திருமணம் நடைபெறும் காலம். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஒரு சிலருக்கு அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா போன்றவை எளிதில் கிடைக்கும்.
 
உத்தராடம்
 
அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய அளவில் தொழிலில் முதலீடு செய்ய கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறைத் தேவை. இதுவரை தள்ளி போன வெளிநாட்டு பயணம் இனிதே நடந்தேறும். யாருக்கும் தேவை இல்லாமல் ஜாமீன் போன்ற விஷயங்களில் கையெழுத்து போடுவது கூடாது. குழந்தைகள் உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தேவை இல்லாத சண்டை சச்சரவுகளை தவிர்த்தல் நலம். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இராது. சுய தொழில் சற்று சுமாராக இருந்து வரும். அரசியலில் எதிர்பார்த்த உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உழைப்புகேற்ற ஊதியம் இராது.
 
கேட்டை
 
எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிட்டும். கையில் பணப்புழக்கம் சரளமாகப் புரளும் நேரம். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும்.
 
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
உத்தர நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பது ஓரளவு சுமாரான பலன் தரும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள் இவற்றில் முதலிடு செய்ய வேண்டி வரும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கரைத் தேவை. வேலையில் தேவையற்ற மன உலைச்சல்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும். குழந்தைக்காக தெய்வ அனுகூலத்தை கூட்டவும் கொடுத்த பணம், பொருள் வருவதில் சற்று தாமதம் ஏற்படும். விவாகரத்து எளிதில் கிடைக்கும் தருணம். பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். நீண்ட தூரப் பிரயாணம் ஏற்படும் வெளிநாட்டு வாய்ப்பு வந்து அமையும். தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
 
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
உங்களது எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறும் காலம் இதுவரை நடவாமல் தள்ளி போன சுபகாரியங்கள் நடக்கும் காலம். தாயாரால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வீடு, வண்டி, வாகனங்கள் நிலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பான காலமாகும். வேலையில் முன்னேற்றம் காணும் காலம். வெளியூர், வெளிநாடு செல்லவும் மற்றும் உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். அந்நிய மனிதர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசியல் மற்றும் சுயதொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். எப்பொழுதும் உற்சாகதுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்குவீர்கள்.
 
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
உங்களுடைய பெயருக்கும் புகழுக்கும் உயர்வுக்கும் கடுமையாக உழைக்கும் காலம். சகோதர சகோதரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அதே சமயம் மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். தேவையற்ற முயற்சிகளில் இறங்கக் கூடாது. தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. போக்குவரத்து வண்டி, வாகனங்களில் எச்சரிக்கை தேவை. பத்திரங்கள் நகைகள் இவைகளைப் பத்திரமாக கையாள வேண்டும். தேவையற்ற ஜாமீன் கையெழுத்து கூடாது. நேரம் என்ற ஒன்றை சரியாக கனித்து செயல்பட வேண்டும். பெண் வேலையாட்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவுகின்ற காலம். மனதில் உறுதியாகவும் தைரியமாகவும் எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிநாடுப் பயணங்களில் அதிக முன் எச்சரிக்கை தேவை.
 
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சன் பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் உயர்ந்த் காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு, வண்டி, வாகனங்கள், மனை வாங்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலையாட்கள், கூலியாட்கள் அமைவர். கடன்கள் அதிகரிக்கும், உடல் ஆரோக்யம் சற்று பாதிக்கப்படும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குழந்தைகளால் எதிர்பாராத தன வரவு அமையும். சுய தொழிலில் முதலீடு செய்யும் முன் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து பின் செய்ய வேண்டும். தாய்மாமன்களால் நன்மை ஏற்படும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். ஓட்டல், சுற்றுலா, உணவு, உடை துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவர்.
 
சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவானின் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10ம் இடத்தை பார்வை செய்வது சிறப்பானது. 10ம் இடம் என்பது உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், கீர்த்தி அதிகரிக்கும் இடமாகும். தொழிலில் முதலீடு செய்யவும் உங்களை தொழில் முனைவோர் ஆக்கவும் செய்வார் வழி வகுக்கும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக பரிசும் பதவியும் கிட்டும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும். விருப்பங்கள் தடை ஏற்பட்டு பூர்த்தியாகும். அரசாங்க வேலையில் ஒரு சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் பிரிந்து செல்வர். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் வந்து சேரும். தொழில் நல்ல லாபம் கிட்டும். தந்தையாரால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். பெரிய மனிதர்கள் நட்பு கிடைக்கும்.
 
சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் சோம்பலை தள்ளி சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். எந்த செயலையும் தள்ளிப் போடாமல் அன்றே முடிக்க வேண்டும். எதிலும் அவசரமில்லாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். சனி பார்வை உங்கள் ராசி மீது படும்போது சோம்பல், சுறுசுறுப்பில்லாமை, தள்ளிப் போடுதல் போன்ற செயல்கள் நடைபெறும். அவரின் பிடியிலிருந்து விடுபட்டாலே பாதி வெற்றிய அடைய முடியும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் இறுதியில் சாதகமாக அமையும். எது செய்வதாயினும் ஜன ஜாதகத்தை வைத்து ஒரு முறை ஆய்வு செய்த பின் முயற்சியில் இறங்குதல் வேண்டும்.
துலாம் ராசி பலன்கள்
சித்திரை 3, 4,ம் பாதங்கள், சுவாதி, விசாகம்
 
(ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, நி, து, தே) போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் ஐப்பசி மாதத்தில் பிறன்ந்தவர்களுக்கு இப்பலன் பொருந்தும்)
 
வான மண்டலத்தில் 7வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான சுக்ரன் – நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகவும் உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பும், சந்தர்ப்பத்தையும் வழங்கவல்லவராக இருக்கிறார். கலை என்ற வார்த்தைக்கு சுக்ரன் என்று அர்த்தம் உள்ள சுக்ரன் வீட்டில் பிறந்த நீங்கள் நல்ல வசீகர தோற்றமும் நல்ல வார்த்தைகளைப் பேசுபவராகவும் விளங்குவீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்ள பலர் விரும்புவர். யாருக்கும் தீங்கு நினைக்காத உங்களுக்கு எல்லா வய்ப்புகளும் தேடி வருவதையே விரும்புவீர்கள். கடமை உணர்வோடு செயல்படுவதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் நீங்கள்.
 
இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் செல்லென்னா துயர், வேதனைகளையும், விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும். இக்காலங்களில் உங்கள் மனதில் இனம்புரியா உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். இதுவரை நடவாமல் தள்ளிபோன சுபகாரியங்கள் நடைபெறும் காலமிது. எடுக்கும் முயற்சியில் வெற்றியும், புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் கூடும். தனவரவு பொருள் வரவுடன் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். அதிக நேரத்தில் அலைச்சல்களும் ஏற்பட கூடிய காலம். பிரயாணங்களில் நன்மை உண்டு. உடன் பிறந்தவர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும்.
 
புது உறவுகளால் நன்மை ஏற்பட கூடிய நேரம். அதிகப்படியான உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. வேலையில் இடமாற்றம் ஊர் மாற்றம் மற்றும் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி அதன் மூலம் வருமானம் வரக்கூடிய காலம். உங்களைப் பற்றிய வதந்திகள் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் கவனம் தேவை. கல்வியில் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கி விற்க நேரிடும்.
 
காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். இனி சுபகாரியங்கள் நடக்கும் காலம். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, கிளப், விருந்து, உல்லாசம் நல்ல லாபகரமாகவும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
 
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம், சுறுசுறுப்பு மற்றும் வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும், உங்களது ராசிக்கு இன் 4ம் மற்றும் 5ம் இடத்திற்கு சனிபகவான் அதிபதியாக இருப்பதால் தாங்கள் பார்க்கும் வேலையில் மிக கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும். வரும் பணத்தை முறையாக சேமித்தல் நலம். எதையும் நன்கு ஆராய்ந்து பின் கடன் கொடுக்கவோ, வாங்கவோ ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டிய சமயம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத பயம், குழப்பம் தோன்றும் காலம் எனவே சிந்தித்து செயலாற்றவும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் நன்மை ஏற்படும். வேலையாட்களால் தேவையற்ற மனச் சஞ்சலம் ஏற்படும். தாய் மாமன்கள் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இராது. ஆன்மீக பயணங்கள் தொடரும் நண்பர்கள் பிரிந்து இணையும் காலம். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்க நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சிறு தொழில்கள், சாலையோர வியாபாரம், கமிஷன் ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, புரோக்கர், தகவல் தொடர்பு போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற அனைத்து துறைகளும் லாபகரமாக இயங்கும். புதிய தொழில்கள் மற்றும் கூட்டாளிகளுடன் தொழில் தொடங்க வாய்ப்பும் ஏற்படும். மற்றும் உடல் உழைப்பு சார்ந்த துறைகள், இரும்பு, எஃகு, சிமெண்ட், ரசாயனம், கனிம வளங்கள் நல்ல லாபகரமாக இயங்கும். சாலையோர விற்பனையாளர்கள், விளம்பரப் பிரதிநிதிகள் நல்ல லாபம் அடையும் காலம். மற்றும் தகவல் தொடர்பு, பத்திரிக்கை, உல்லாச கேளிக்கைகள், வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். உற்பத்தி சார்ந்த துறைகள் வளர்ச்சி குன்றியும். அதில் விற்பனை துறைகள் ஏற்றமுடன் இயங்கும், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், கல்விதுறை, நிதி, நீதி, அழகு சாதன துறை லாபகரமாகவும் பங்கு சந்தை வளர்ச்சி குறைந்தும் பத்திரிக்கை, எழுத்து சாதகமாக இருக்கும். கப்பல், மீன், நீர், உப்பு சார்ந்த துறைகள் சற்று லாபகரமாக அமையும்.
 
விவசாயம்
 
விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்க சற்று போராட வேண்டியது இருக்கும். இருப்பினும் வருமானம் தாரளமாக இருந்து வரும். கடலை, வாழை, தென்னை, எள், பயறு வகைகள் நல்ல லாபகரமாகவும், கோதுமை, பருப்பு மற்றும் காய்கறிகள் பழங்கள் இவற்றில் லாபம் சற்று குறைந்தும் காணப்படும். புதிய நிலங்கள் வாங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும்.
 
அரசியல்
 
அரசியல் வாழ்வு சாதகமாக இருந்து வரும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். பட்டம், பதவி, பொறுப்புகள் தாமாக வந்து சேரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் காணப்படும். சொத்துக்கள் வந்து சேரும். அரசால் ஆதாயம் ஏற்படும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும்.
 
கலை
 
இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் இனி இனிதே நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதனால் பெரிய அளவில் லாபமும் வருமானமும் கூடும். ஜோதிடம், இசை, நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பக்கலை லாபகரமாக இருந்து வரும். தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து உழைப்பை அதிகமாக சிந்தி பணத்தை சம்பாதிக்கும் நேரம் இது. உழைப்பை தாரக மந்திரமாக வைத்திருக்கவும். சினிமா, நாடகம், போன்ற துறைகளில் நல்ல வருமானம் வந்து சேரும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.
 
மாணவர்கள்
 
படிப்பில் அதிகக் கவனம் தேவை. 3ம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக சக்தியை குறைப்பார். சோம்பலை அதிகபடுத்துவார்.படிப்பில் நாட்டத்தை குறைப்பார். எனவே தொடர்ச்சியாக டியூசன் சென்று வருதல் நலம். தேவையற்ற விஷயங்களில் மனைதைச் செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பரிசும் பாராட்டும் வரும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.
 
பெண்கள்
 
இதுவரை தடையான நல்ல விஷயங்கள் இனிதே நடந்தேறும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் ஈடுபட புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அமையும். உடன் பணிபுரிவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் கிட்டும். அடிக்கடி பயணங்கள் அமையும். அதனால் நன்மைகளும் அதே சமயம் அலைச்சல்களும் கூடும். உடலும் உள்ளமும் சமயங்களில் சோர்ந்து விடும். உடலில் அடிக்கடி சளித் தொல்லைகள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடவோ, சிந்திக்கவோ கூடாது. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை சாதகமாக அமையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். காதல் விஷயங்கள் மகிச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருந்து வரும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அடிக்கடி அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.
 
உடல் ஆரோக்யம்
 
நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். சர்க்கரை வியாதி, உப்பு சத்து இருப்பின் அதனைக் கட்டுக்குள் வைத்துப் பழகவும். உடலில் சளித் தொல்லைகள், தேமல், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளல் அவசியம்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பார்க்கும் வேலையில் அதிக கவனம் தேவை. தேவை இல்லாமல் வேலை மாற்றம் மற்றும் கம்பெனி மாற்றம் கூடாது. அலைச்சல்கள் அதிகரிக்கும் நேரம். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதம் ஆனாலும் நல்லபடியாக அமையும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். காலி மனை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். இல்லையேல் குழந்தைகளுக்காக நிறையச் செலவிடுதல் வேண்டும். வெளி வட்டார பழக்கங்கள் கூடும். புது நண்பர்கள் அல்லது உறவுகள் அமையும். தாயாரின் உடல் நலத்திலும் உங்களுடைய உடல் நலத்திலும் அதிகக் கவனம் தேவை. பாஸ்போர்ட், விசா கிடைக்காதவர்களுக்கு விரைவில் வந்து சேரும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும்.
 
பூராடம்
 
இதுவரை வராமல் இருந்த பணம், பொருள் எல்லாம் வந்து சேரும். முன்னோர்கள் சொத்து அல்லது கணவன் மனைவி மூலம் பொருள் வரவு அல்லது எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டுப் பின் செல்ல வாய்ப்பு அமையும். காதல் விஷயங்களில் நிறைய தடை ஏற்பட்டு விலகும். எடுக்கும் புது முயற்சிகளில் அதிக கவனம் தேவை. யாருக்கும் பணமோ பொருளோ தேவையில்லாமல் கொடுத்தல் கூடாது. உங்களது உழைப்பு மற்றவர்களுக்கு ஆதாயம் ஆகும். வேலையில் நிதானம் தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உழைப்புகேற்ற ஊதியம் கிடையாது. எதிர்பார்த்த லாபம் முடங்கி கொள்ளும். அல்லது மாட்டிக் கொள்ளும். வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அரசு மற்றும் அரசு ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது.
 
உத்தராடம்
 
இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் அமையும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி சுற்றுலா செல்ல வாய்ப்புகள் வந்து போகும். விசா, பாஸ்போர்ட் விரைவில் வந்து சேரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பார்க்கும் வேலையை அவசரபட்டு விட்டுவிடகூடாது. உழைப்புகேற்ற ஊதியம் சரியாக அமையாது. சுய தொழில்கள், சிறு தொழில்கள் செய்ய சாதகமான சூழ்நிலை வந்து சேரும். விளையாட்டுகளில் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும்.
 
கேட்டை
 
உயர்கல்வி பயில சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு அமையும். விரயச் செலவுகள் அடிக்கடி வந்து போகும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். புது முயற்சிகளில் அதிக கவனமுடன் இருக்கவும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் அலைச்சல்களும் அசதியும்தான் அதிகரிக்கும்.
 
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
புதிய தொழில் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரித்துக் காணப்படும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பு வந்து சேரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். பயணங்களில் எதிர்பாராத தடையேற்பட்டுப் பின் பயணம் தொடரும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். நிலம், சொத்துப் பிரச்சனைகள் இழுபறியாகவே இருந்து வரும். அரசாங்கம் மற்றும் அரசாங்க காரியங்கள் எளிதாக நடந்தேறும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலைக்கு ஏற்ற ஊதியம் கைக்கு வருவதில் தடைகள் இருந்து வரும்.
 
துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
எடுக்கும் முயற்சிகள் சாதகமாக வந்து சேரும். அரசால் பெரிய மனிதர்களால் எதிர்பாராத நற்காரியம் நடந்தேறும். அந்நிய பாஷை பேசும் மனிதர்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். மூத்த சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். வெளிநாடுகள் செல்வதில் நிறையத் தடைகள் ஏற்படும் உயர்கல்வி பயில சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் அமையும். உற்பத்தி சார்ந்த துறைகள், சிறு தொழில்கள் லாபகரமாக இருக்கும். வேலையில் முன்னேற்றமும் எதிர்பார்த்த ஊதியம் வந்து சேரும். நண்பர்களிடம் இதுவரை இருந்து வந்த பிணக்குகள் நீங்கி நட்பு பாராட்ட வாய்ப்பு அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். குழந்தை பாக்யம் இலலதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். நெருங்கிய உறவினர்களின் அன்பும் ஆதரவும் வந்து சேரும்.
 
துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிபகவான் இதுவரை வேலையில் இருந்த தடைகளை நிவர்த்தி செய்து வேலையில் அமர்த்தி அழகு பார்ப்பார். எதிர்பார்த்த ஊதியத்துடன் வேலை கிடைக்கச் செய்வார். தேவையான பணப்புழக்கம் இருக்கும். வழக்குகளில் எதிர்பாரத வெற்றியை அளிப்பார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கச் செய்வார். திருமணத்தில் நிறைய தடைகளை உண்டு பன்ணி பின் சுபகாரியத்தை நடத்துவார். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்தை அளிப்பார். தொழில் லாபத்தை குறைத்து அளிப்பார். புதுத் தொழிலில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கச் செய்வார். வெளிநாடு செல்வதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்து வெளிநாடிற்கு அனுப்பி அழகு பார்ப்பார். அதனால் வருமானத்தையும் அதிகரிக்க செய்வார்.
 
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தை பார்வை செய்வதால் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அதே சமயம் விருந்து கேளிக்கைகள் சுற்றுலா இவற்றில் ஆர்வமும் ஆசையும் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கச் செய்வார். கட்டிய வீடு வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரச் செய்வார். பணம், பொருள் இவற்றை மொத்தமாக முடக்கி வைப்பார். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ளச் செய்வார். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார். பணம் கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற மனஸ்தாபத்தை உருவாக்குவார். வழக்குகள் சாதகமாக இராது. அரசு வேலை கிடைப்பதில் தாமதப்படுத்துவார். குடும்பத்தில் புது வரவு வரச் செய்வார். வீடு, கடை இவைகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வைப்பார்.
 
சனியின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தை பார்வை செய்வதால் உயர்கல்வி பயிலுவதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்வார். வெளியூர் வெளிநாடு அல்லது நீண்ட தூர பயணம் குறிப்பாக நீண்ட தூர ஸ்தல யாத்திரை செய்ய வைப்பார். குடும்பத்தில் பேரன், பேத்திகள் போன்ற புது வரவுகளை வர வைப்பார். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடக்கும் அமைப்பை கொடுப்பார். அரசாங்க வேலையை விடச் செய்வார். தந்தையாரால் எதிர்பாராத அன்பும் ஆதரவும் கிடைக்கச் செய்வார். அடிக்கடி ஆன்மீகம் மற்றும் தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொள்ள செய்வார். சுப காரியங்களில் அடிக்கடி கலந்து கொள்ளச் செய்வார். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறைகளில் இறங்க செய்வார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை செய்ய வைப்பார்.
 
சனியின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தை பார்ப்பது புதிய விஷயங்களில் முதலீடு செய்ய வழி வகுக்கும். வெளிநாடு செல்வதில் உள்ள தடை விலகும். தேவையற்ற சோம்பல் உருவாக்குவார். அன்றைய வேலைகளை தள்ளி போடாமல் முடிப்பது நலம். நல்ல உறக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. பெரிய விஷயங்களில் தலையிடுதல் கூடாது. தேவையற்ற கடனோ, தேவையற்ற துறைகளில் முதலீடோ கூடாது. அடிக்கடி உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். வைத்திய செலவுகள் அதிகரிக்கும். அடிவயிறு நரம்பு சம்பந்தமான மற்றும் கிறுகிறுப்பு போன்ற உடல் உபாதைகளை உருவாக்குவார். தாய் தந்தை உடலில் கவனம் தேவை. சுபச் செலவுகளை விரும்பி ஏற்று செயல்படுத்துதல் அவசியமாகும்.
விருச்சிகம் ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம் கேட்டை)
 
(தோ, ந, நா, நி, நீ, நு, நூ, நே, நோ, ய, யா, யு) போன்ற எழுத்துக்களில் பெயரை முதலாகக் கொண்டவர்களுக்கும் கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
 
வான மண்டலத்தில் 8வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதனான செவ்வாய் பகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுவார். இவரை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உடல்பலமும், உள்ள பலமும் கொண்டவராக திகழ்வீர்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இயங்குகிறது என்பதில் நம்பிக்கையுடனும் மற்றவர்களிடம் இருந்து தனித்தும், சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவராகவும், எதையும் தலைமை ஏற்று நடத்தும் திறம் கொண்டவர்களாகவும், மற்றவர்களை வசியப்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாகத் திகழ்வீர்கள்.
 
இத்தகைய வல்லமை உடைய உங்களது ராசியில் இதுவரை ஜென்மச் சனியாக சனிபகவான் சஞ்சரித்து வந்தார். இதுகானும் தேவையற்ற செலவினங்களையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறி – சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 
எந்த வேலையும் முடிக்காமல் தள்ளி போட்ட நிலை மாறும் இதுவரை உங்கள் ராசு ஜென்மராசியாக இருந்தவர் மாறி 2ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், ஓரளவு காப்பாற்றப்படும். இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும்.
 
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனி – குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். சனிபகவான் 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
 
உங்களை பற்றிய வீண் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கும். உங்களை பற்றிய விமர்சனங்களையும் தூக்கு எறிந்து எண்ணிய செயலில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வெற்றி நிச்சயம். இதுவரை வராமல் நிலுவையில் இருந்து வந்த பணம், பொருள், நகை, பத்திரங்கள் தாமகவே வந்து சேரும். விடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அடிக்கடி அமையும். காலிமனை, கட்டிய வீடு, வண்டி வாகனங்களால் மற்றும் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் தாமகவே வீடு வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.
 
பேச்சில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்கள் பேசுவதோ எழுதவோ கூடாது. மற்றவர்கள் விஷயங்களில் அநாவசியமாக தலையிடுதல் கூடாது. கூடியவரை அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து வருதல் வேண்டும். பணவரவு பொருள் வரவு தாரளமாக இருந்து வரும். தேவையற்ற செலவினங்களும் வரும். கூடிய வரை சுபச் செலவுகள் செய்துவர நன்மை ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுத்த பணம் வருவதில் சற்று தடை ஏற்பட்டாலும் கண்டிப்பாக தவணை முறையில் வந்து சேரும்.
 
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரும் புது வரவால் நன்மையும் தீமையும் கலந்தே காணப்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்களுடைய ராசிக்கு 3, 6ம் அதிபதியாக குரு சாதகமான இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிர்பார்த்த வேலை அமைய வாய்ப்பு அமையும். அதே சமயம் 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை உலவி வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். வேலையில் முன்னேற்றமும் உயர்வும் ஏற்படும். அடிக்கடி வேலை மாற சந்தர்ப்பங்கள் வந்து சேரும். வேலையில் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நன்மை ஏற்படும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சுய தொழில்கள், சிறு தொழில்கள் உற்பத்தி சார்ந்த துறைகள், கனரகத் தொழில்கள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். முதலீடு சாதகமாக இருந்து வரும். கொள்முதலில் ஓரளவு கவனமாக இருத்தல் வேண்டும். தேவைக்கேற்ப கொள்முதல் அவசியம், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் தகவல் தொடர்பு துறைகள் லாபகரமாக அமையும். இரும்பு, எஃகு, சிமெண்ட், நிலக்கரி, எண்ணெய் வித்துக்கள், ரசாயனம், கனிம வளங்கள், நல்ல லாபகரமாக அமையும். ஆடை, ஆபரணம், தோல், ஈயம், தகரம், சற்று சுமாராக இருந்து வரும். ஓட்டல், சுற்றுலா, உணவு லாபகரமாக இருந்து வரும். தகவல் தொடர்பு போக்குவரத்து வண்டி வாகனங்கள், பத்திரிக்கை சாதகமாக இருந்து வரும். சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாகவும் கூட்டுத் தொழில் சுமாரகவும் இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதி சீராக இருந்து வரும். விஞ்ஞானம், ரசாயனம், பொறியியல், கட்டுமானத் துறைகள் சற்று லாபம் குறைந்தும் ரியல் எஸ்டேட், கமிஷன் ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி சாதகமாக இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். கப்பல் நீர், மீன் பிடித் தொழில் சுமாராக இருந்து வரும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் உயர்ந்தும், பிளாஸ்டிக், மரம், உரம் இவைகள் லாபம் குறைந்தும் காணப்படும். சினிமா, ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகள் சிறந்து விளங்கும்.
 
விவசாயம்
 
பயிர்சாகுபடி பரப்பு ஒரு சிலருக்கு அதிகரித்துக் காணப்படும். பூ வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் ஓரள்வு லாபகரமாக அமையும். காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகமாக இருப்பினும் விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் சற்று சிரமமாக அமையும். வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு வந்து சேரும். வாழை கரும்பு, நெல், கோதுமை, தேயிலை, ஏலம், கிராம்பு போன்ற பணப்பயிர்கள் ஓரளவு சாதகமாக இருக்கும். பருவத்தை அனுசரித்து சாகுபடி செய்வது நலம்.
 
அரசியல்
 
உங்களைப் பற்றிய அவப் பெயர்கள் வந்து போகும். அரசியலில் புது எழுச்சிப் பெறுவீர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய காலம் இதுவாகும். மறைமுக எதிரிகள் இருப்பினும் அவர்களை எளிதில் வெற்றி கொள்ளும் அறிவும் சாமர்த்தியமும் பலமும் தானகவே வந்து சேரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தல் நலம். அரசியலில் உயர்பதவி அந்தஸ்து கூடி வரும். மக்களின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் இயற்கையாகவே வந்து சேரும். உங்களது மதிப்பை நீங்கள் உயர்த்தி கொள்ள வேண்டிய தருணம்.
 
கலை
 
உங்களுடைய இருட்டான வாழ்க்கை மறைந்து ஓரளவு ஓளிமயமான வாழ்க்கை உருவாகும். உங்களது அறிவு திறமை வெளிப்பட வேண்டிய தருணம். புது ஒப்பந்தங்கள் தாரளமாக அமையும். அதனால் பொருள்வரவும் பணவரவும் அமையும். ஒப்பனை, அலங்காரம், சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஓவியம் சிற்பம், ஜோதிடம் சிறந்து விளங்கும். கலைஞர்களுக்கு ஓரளவு ஏற்றமான காலமாகும். மக்களின் வரவேற்பு, பாராட்டு, ஆதரவு, பரிசு, பட்டங்கள் தாமகவே ஒரு சிலருக்கு வந்து போகும்.
 
மாணவர்கள்
 
மறதி என்பதை மறைந்து உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், பரிசும் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும்.
 
பெண்கள்
 
நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுகானும் மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். எடுக்கும் புது முயற்சிகள் சாதகமாக இருந்து வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் புது வரவு அமையும். அதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை அமையும். வேலையில் உயர்வும், பொறுப்பும் அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணம், வீடு வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வெளிநாடு செல்வதில் நிறையத் தடைகள் ஏற்படும். விருந்து கேளிக்கை, சுற்றுலா இவைகளில் மனம் மகிழ்ச்சி அடையும். சமூகத்தில் சற்று மதிப்பும் மரியாதையும் கூடும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடம்பில் தேமல், சொறி, சிரங்கு இவைகள் வராமல் அல்லது பரவாமம் பார்த்துக் கொள்ளல் அவசியம். நேரத்திற்கு அவசியமாக உணவருந்துதல் வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் அதை கட்டுக்குள் வைத்து பழகவும். தலை, முகம் அடி வயிறு போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை, கால், பாதம் இவற்றில் நோய் வராமல் மற்றும் பரவாமல் பார்த்துக் கொள்ளவும்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது உங்களது முயற்சிகளில் போராட்டம் இருப்பினும் இறுதியில் வெற்றி கிட்டும். உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவியபடி இருக்கும். அவை நல்ல செய்திகளாக இராது. வீடு வாங்க சொத்து வாங்க சந்தர்ப்பம் அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பு கிட்டும். விவசாயம் நல்லவிதமாக அமையும். சுயதொழில், சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று லாபாரமாக இருக்கும். பங்கு சந்தை சாதகமாக அமையும். கலைத் துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். பெயர், புகழ் கிட்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தடை ஏற்படும். பாஸ்போர்ட் விசா, எளிதில் வந்து சேரும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இழுபறி நிலை இருக்கும். பழைய கடன்களை அடைக்கவும், புதிய கடன் வாங்கவும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை ஓரே சீராக இருக்கும். பணப்புழக்கப் தாரளமாக இருந்து வரும். நெருங்கிய உறவினர்களைப் பிரிய நேரிடும்.
 
பூராடம்
 
சுப நிகழ்ச்சியான இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன திருமணம், குழந்தை பாக்யம் அமைய வாய்ப்பு அமையும். சுய தொழில் கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். இளைய சகோதர சகோதரிகளுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் அவசியம். யாரையும் தூக்கி எறிந்து பேசாமல் இதமாக பேசிப் பழகுதல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி துறைகள் சற்று சுமாராக இருந்து வரும். லாபம் சற்று குறைந்து காணப்படும். வழக்குகள் சற்று இழுபறியாக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் வேலையை விட்டு விடுதல் கூடாது.
 
 
உத்தராடம்
 
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலமாக சாதகமான பலன்கள் நடந்தேற வாய்ப்புகள் உண்டு. கௌரவம் அந்தஸ்து புகழ் ஏற்படும். முதலாளி என்ற அந்தஸ்து உள்ளவர்களின் புகழ் கூடும். வெளிநாடு செல்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். உற்பத்தி சார்ந்த துறைகள், கனரகத் தொழில்கள் விவசாயம் சாதகமாக இருந்து வரும். அடிக்கடி விருந்து கேளிக்கை சுற்றுலா இவற்றில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை இருப்பினும் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் சற்று அதிகரிக்கும். முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும். அரசியல் வாழ்வு மிகவும் ஏற்றமுடன் இருந்து வரும். நண்பர்கள் பிரியும் நேரம் அவர்களால் மனவேதனைகளும் ஏற்படும்.
 
கேட்டை
 
எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிட்டும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். பென்ஷன், பி.எப். கிராஜிவட்டி, போனஸ் போன்ற வராத பணங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபகரமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வேலையாட்கள் வந்து சேர்வார். மனை, வீடு, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடக்க சந்தர்ப்பம் அமையும்.
 
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
விசாகம் 4ம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் ஓரளவு சுப காரியங்களில் ஈடுபடச் செய்வார். காதல், திருமணம், குழந்தை போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் உண்டு பண்னுவார். குழந்தைகளுக்கு சுபகாரியம் நடக்க வைப்பார். யாருக்கும் தேவை இல்லாமல் பணம் கடன் கொடுத்தல் கூடாது. பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது. மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருந்து வரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். விருந்து கேளிக்கை சுற்றுலா போன்ற விஷயங்களில் ஈடுபாடும் மகிழ்ச்சியும் ஏற்படும். அடிக்கடி ஆலா தரிசன்ம், தெய்வ தரிசனம் அமையும். பெரிய மனிதர்கள் அன்பும் நட்பும் ஆதரவும் கிட்டும். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். சுய தொழிலில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீட்டை தவிர்த்தல் உத்தமம்.
 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
அனுஷம் நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் பணவரவும் பொருள் வரவும் சீராக இருந்து வரும். இடமாற்றம் மனை மாற்றம் ஒரு சிலருகு ஊர் மாற்றமும் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்தாலும் சாதகமாக வந்து சேரும். புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் நல்ல லாபம் ஏற்படும். சிறு தொழில், சுய தொழில், சாலையோர வியாபாரம் சாதகமாக இருந்து வரும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருந்து வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் நிறையத் தடைகள் ஏற்படும். பழைய பொருளை விற்று புதுப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம ஏற்படும். தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். வேலை கிடைத்தாலும் திருப்தியற்ற சூழ்நிலையும் மந்தமான போக்கும் அமையும்.
 
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும
 
எப்பொழுது பரபரப்புடனும் வேகத்துடனும் செயல்பட வைப்பார். எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கொடுக்க வைப்பார். கணவன் அல்லது மனைவி மூலம் பொருள் வரத்தை கொடுப்பார். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இதுவரை வராமல் இருந்த வந்த பணம், பொருள், நகைகள், பத்திரங்கள், தவணை முறையில் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களுக்கு வேலை திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய உறவுகள் அமையும். எதிர்பாராத நண்பர்கள் சந்திப்பும் அதனால் நன்மையும். விபத்து அறுவை சிகிச்சை போன்ற விஷயங்கள் நடந்தேற வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்யத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.
 
 
சனியின் 3ம் பார்வை பலன்கள்
 
சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியின் 4ம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும். தாயருக்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்படும். அடிக்கடி உடல் நல குறைபாடு ஏற்படும். விருந்து, கேளிக்கை, சுற்றுலாக்களில் மனம் விரும்பாது. குழந்தைகள் உங்களை வீட்டுப் பிரிய நேரிடும். அல்லது குழந்தைகளுக்க்காக நிறையச் செலவு செய்ய வேண்டி வரும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலையும் அமையும். சுய தொழில்களில் லாபம் குறைவாக இருக்கும். அதே சமயம் சாலையோர, வியாபாரம், சிறுந்தொழில், குறுந்தொழில், கைவினைப் பொருட்கள் நல்ல லாபகரமாக அமையும். அடிக்கடி உடல் சோர்வு, மன உலைச்சல்கள் ஏற்படும்.
 
சனியின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வருதல் வேண்டும். அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. தேவையற்ற கடனை தவிர்த்தல் நலம் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உயர் கல்வி பயிலுவதில் தடைகள் வந்து போகும். வெளிநாடு செல்வதில் தடைகள் ஏற்படும். பார்க்கும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும். தேவையற்ற குழப்பங்களும் மன வேதனையும் ஏற்படும்.
 
சனியின் 10ம் பார்வை பலன்கள்
 
ஒரு பக்கம் 7ம் பார்வையாக 8ம் இடத்தைப் பார்க்கும் சனியானவர் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும்.. நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். காதல் விஷயங்கள் கை கூடும். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாக இருந்து வரும். சுய தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் ஓரளவு லாபம் வந்து சேரும்.
 
தனுசு ராசி பலன்கள்
(மூலம், பூராடம், உத்தராடம் 4ம் பாதம்)
 
(யே, யோ,பா,பீ, பு, பூ, த, ப, ட, பே) போன்ற எழுத்துகளை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)
 
வான மண்டலத்தில் 9வது ராசியாக வலம் வரும் தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் – நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். இவருடைய ராசியில் ஜனனமான நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள் இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ அனுகூலத்தையும் பெற்றவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள். செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். உழைப்புக்கு உறைவிடமாகிய நீங்கள் எப்பொழுதும் ஓடி ஓடி உழைப்பவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவீர்கள்.
 
இத்தகைய உயர் குணமுடைய உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்யச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
 
எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் வலுவாக இருந்தாலும் இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பாராத வெற்றி அடைவீர்கள் என்பது நிச்சயம். பேச்சில் அதிக எச்சரிக்கை தேவை. பணவரவு தாராளமாக இருந்து வரும். அதற்கேற்ப செலவினங்களும் அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும்.
 
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று தடை ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். ஆரம்பத்தில் சொத்துகள் வாங்கினாலும் அதைப் பின்னால் கொடுக்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு அமையும்.
 
உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட வெற்றி நிச்சயம் உண்டாகும். விருந்து, கேளிக்கை இவைகளில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும்.
 
சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும்.
 
உடல் உழைப்பை அதிகப்படுத்தவும், வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலையில் ஊதிய உயர்வில் உத்யோக உயர்வில் வலுவான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெற சிரமப்பட்டாலும் வேலை என்ற ஒன்று தொடர்ந்து நடந்து வரும். அதன் மூலம் வருமானமும் வந்து சேரும். புதிய தொழில்கள் அல்லது கூட்டுது தொழில் செய்ய சந்தர்ப்பம் அமையும். சிறு தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும்.
 
வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாக இருந்து வரும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிட்டும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மை அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல் வேண்டும்.
 
வேலை அல்லது தொழில் (JOB)
 
உங்கள் ராசியிலே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்த வேலையில் முதலில் சேருதல் வேண்டும். ஒரு சிலருக்கு அரசு வேலையும் பெயர் போன கம்பெனியில் வேலை செய்யவும் வாய்ப்புகல் வந்து சேரும். சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலையின் நிமித்தமாக அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. அன்றைய வேலையை அன்றே முடித்தால் மட்டுமே நன்மைபயப்பதாக அமையும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
உங்கள் ராசியிலியே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் சுயதொழில்கள் அல்லது கூட்டுத் தொழில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிறிய தொழில்கள் சற்று லாபகரமாக அமையும். அலைந்து திரிந்து, தொழில் புரிபவர்கள், கனரக தொழில் புரிபவர்கள் சாலையோர வியாபாரிகள் நன்மை அடைவர். சிறு தொழில்கள் குடிசைத் தொழில்கள் பலவறாக அதிகரித்து லாபத்தின் அளவு குறைந்து காணப்படும். மருத்துவம், விஞ்ஞானம் பொறியியல் துறைகள் நல்ல லாபகரமாக இருந்து வரும். போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட், பத்திரிக்கை, தொலைத் தொடர்பு தொலைக்காட்சி சாதகமாக இருந்து வரும். ஓட்டல், உணவு, சுற்றுலாத் துறைகள் லாபகரமாகவும் ஆடை, ஆபரணம், இரும்பு, எஃகு, சிமிண்ட், ஈயம், தகரம், எண்ணெய் வித்துக்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். கமிஷன் ஏஜென்ஸிஸ், கன்சல்டன்சி, புரோக்கர்ஸ், போட்டி மிகுந்து காணப்படும். கப்பல், நீர், மீன்பிடித் தொழில், மெக்கானிக், லாபம் குறைந்தும் சற்று சுமாரகவும் இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள், பிளாஸ்டிக், உப்பு ஏற்றுமதி, இறக்குமதி லாபம் குறைந்தும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். திரையரங்கம், திரைப்பட விநியோகம் அழகு சாதனங்கள், பெண்கள் விரும்பும் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தும் சற்று லாபம் அதிகரித்தும் அமையும்.
 
விவசாயம்
 
பருவத்தே பயிர் செய்தல் வேண்டும். இருப்பினும் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும். காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரித்தும் லாபம் கூடியும் காணப்படும். பூக்கள் உற்பத்தி சற்று சுமாராக இருந்து வரும். எதிர்பார்த்த மான்யம் வருவதில் சற்று தடையேற்பட்டுப் பின் வந்து சேரும். நெல், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் லாபகரமாகவும், பயறு வகைகள், வாழை, வெற்றிலை சுமாராகவும், ஏலம், மிளகு, கிராம்பு, முந்திரி உற்பத்தி அதிகரித்தும் லாபம் கூடியும் அமையும்.
 
அரசியல்
 
கட்சி பணியும், அரசியல் பணியும், கடுமையாக நெருக்கடிகளை உருவாக்கும். அரசாங்க விஷயத்தில் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். தொண்டர்களின் அன்பும் மக்களின் ஆதரவையும் பெற பாடுபட வேண்டியது இருக்கும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் வந்து போகும். அரசியல் எதிரிகள் விஷத்தில் அதிகக் கவனம் தேவை. உங்களை முடக்கி வைக்க நடக்கும் முயற்சிகளை முறியடித்து வெற்றி பெற உங்கள் முழு பலத்தையும் உபயோகித்தல் வேண்டும்.
 
கலை
 
எதிலும் அலட்சியம் காட்டாமல் கடுமையாக உழைத்தல் வேண்டும். நேரம் தவறாமல் பணியாற்றுதல் வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதல் வேண்டும். நடனம், நடிப்பு, பாட்டு, ஒப்பனை, நிர்வாகம், டைரக்க்ஷன் போன்ற துறைகள் லாபகரமாகவும், சின்னத்திரை, சினிமா, ஓளிப்பதிவு சாதகமாகவும் இருக்கும். விருதுகள், பட்டங்கள், பரிசுகள், பாராட்டுகளும் ஒரு சிலருக்கு வந்தமையும். இசை, ஓவியம், ஜோதிடம், நாடகம் லாபகரமாக அமையும்.
 
மாணவர்கள்
 
ஞாபகசக்தியை நங்கு அதிகரித்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க பழகுதல் வேண்டும். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். சாதுர்யம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும்.
 
பெண்கள்
 
உங்களுக்கான முக்கிய்த்துவம் குறைவது போல் ஆரம்பத்தில் தோன்றினாலும் குடும்பத்தில் உங்கள் பங்கு காலப் போக்கில் அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்தல் நலம். எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். அடிக்கடி ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அமையும், காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க நிறைய போராட வேண்டியது வரும். கிடைக்கும் வேலையில் திருப்திபடல் வேண்டும். சக ஊழியர்களின் அனபும் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் தோன்றும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியம் இனிதே நடந்தேறும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. சர்க்கரை, உப்பு சத்துக்கள் இருப்பின் அவற்றை கட்டுக்குள் வைத்து கொள்ளவும். சளித் தொல்லை, இருமல், காய்ச்சல் போன்றவைகள் வராமல் உடல்நலம் பேணுதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். அடிவயிறு கால், பாதம், போன்ற உடல் உறுப்புகளில் கவனம் தேவை.
 
சனி பகவான் வகரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனி பகவன் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கலங்களில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3ம் மற்றும் 2ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். எடுக்கும் காரியங்கள் ஓரளவு சாதகமான பலனை அளிக்கும். அடிக்கடி அலைச்சல்கள் அல்லது பயணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். அந்நிய மனிதர்களின் நட்பும் உதவியும் அவர்களால் நன்மையும் ஏற்படும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் உலவிய வண்ணம் இருக்கும். நேரத்தை வீணாக்காமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறப் பாடுபடுதல் வேண்டும். சிறு தொழில்கள், சாலையோரம் தெருவோர வியாபாரம் லாபகரமாக அமையும். பங்குசந்தை சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு அன்பாகவும் நேசமாகவும் இருந்து வரும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
 
பூராடம்
 
அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் இதுவரை இருந்து வந்த மன வருத்தங்கள் விலகும். இதுவரை நெருக்கடி கொடுத்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சந்தர்ப்பம் வாய்க்கும். ஸ்திர சொத்துக்கள் கால்நடைகள் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிதாக அடிக்கடி ஆடை அணிகலன்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். கால்நடை வளர்ப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நண்பர்கள் வசம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நட்பு பலப்படும்.
 
உத்தராடம்
 
உயர்கல்வி பயிலுவதில் இருந்து வந்த தடை நீங்கி நல்ல உயர் கல்வி அமையும். உறவினர்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேர வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடை நீங்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் சீராக இருந்து வரும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் ஓய்வும் அல்லது வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருந்து வரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்படும். சுற்றுலா விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஓற்றுமையுடன் செயல்பட ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவுகள் மகிழ்ச்சியாக அமையும். வீடு, இடம், வாங்க வாய்ப்புகள் அமையும். உடலில் இதுகானும் இருந்து வந்த நோயின் தன்மை குறைந்து உடல் ஆரோக்யம் கூடும்.
 
கேட்டை
 
உடன் பணிபுரிவர்களிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கவும். தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்குகள் சாதகமாக இராது. சுய தொழில், சிறு தொழில்கள் வருமானம் தரும். ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கூட்டிக் கொடுக்கும். வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகமும் இருந்து வரும். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வீடு வாடகைக்கு அல்லது ஒத்திக்கு விட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும்.
 
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 3ம் பார்வையாக தன்னுடைய வீட்டையே பார்வை செய்வது விசேஷமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையாகவே அமையும். அடிக்கடி பிரயாணங்கள் அமையும் அதனால் நன்மைகள் ஏற்படும். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அவர்களால் நன்மையும் அதே சமயம் அவர்களை விட்டு பிரிய நேரிடும். சிறு தொழில் , சுய தொழில் கைவினைத் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். அலைச்சல்கள் அதிகரித்துக் காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். சொத்துக்கள் நகைகள் விற்க வேண்டி வரும் தேவையற்ற மனக் குழப்பங்கள் மன பீதிகள் இருந்து வரும். புதிய மனிதர்கள் சந்திப்பால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும். நிம்மதியான தூக்கம் இராது. ஏதாவது ஒன்றிற்காக சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.
 
சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தை அதாவது புதன் வீட்டை பார்வை செய்வதால் திருமணம் நடைபெறாமல் தள்ளி போன சுபகாரியங்கள் நல்லபடியாக நடந்தேற வாய்ப்புகள் அமையும். புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். குடியிருக்கும் வீடு, அலுவலகம் பணிபுரியும் இடம், தொழில், ஸ்தாபனம் இவற்றில் மாற்றங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. கடன்களால் பெரிய தொல்லை இராது. நண்பர்களாலும் உறவினர்களாலும் நன்மை ஏற்படும். பாஸ்போர்ட் விசா வருவதில் தடை இராது. அதே சமயம் பயணம் செய்வதில் தடையேற்பட்டு பின் பயணம் தொடரும்.
 
சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
இதுவரை பட்டம், பதவி, இழந்தவர்களுக்கு மீண்டும் புது பதவி கிடைக்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் முனைவோர்களாகவும் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையுடனும் செயல்பட ஒரு சிலரை வைக்கும். வீடு வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பும் அதற்கான காலமும் உருவாகும். தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் அமையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருந்து வரும். மூத்த சகோதர சகோதரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் தோன்றி மறையும். உடலில் இருந்து வந்த நோயின் தன்மை குறைய ஆரம்பிக்கும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு விருது, பட்டம், சன்மானம் இவைகள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பும் உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். கௌரவம், அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
மகர ராசி
உத்தராடம் 2, 3, 4,ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2,ம் பாதங்கள்)
 
(போ, ஜ, ஜி, ஜூ, ஜே, க, கா, கீ) ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் தை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்.
 
வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின் அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.
 
எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும் விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் நிதானமும், நடு நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.
 
12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலிட்டு ஸ்தானமும் கூட, உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள் ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம் அமையும். குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.
 
எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில் தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும்.
 
எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.
 
வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள் வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள் உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.
 
உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள் வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி அவைகள் நல்லவிதமாக வந்து சேரும்.
 
சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம் வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது நிரந்தர பழக்க வழக்கங்களை மேற் கொள்ளக் கூடாது. முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம் அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுதல் வேண்டும்.
 
வேலை அல்லது, உத்யோகம் (JOB)
 
உங்களது ராசிக்கு 12ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் வேலை கிடைப்பதில் சற்று போராட்டம் தான். முதலில் கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு பின்பு விரும்பிய வேலைக்கு முயற்சி செய்யவும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை வந்தாலும் அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. உத்யோக உயர்வில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதுவும் சற்று போராடியே பெற வேண்டிய சூழ்நிலை அமையும். உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அன்றைய வேலையை அன்றே முடித்தால் நன்மை ஏற்படும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சிறு தொழில்கள் சாதகமாக இருந்து வரும். சாலையோர வியாபாரம் லாபகரமாக இருந்து வரும். சுயத் தொழில்கள் கைவினைப் பொருட்கள் உற்பத்தி இவற்றில் சற்று லாபம் குறைந்து காணப்படும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், தகவல் தொடர்பு, போக்குவரத்து சற்று சுமாராக இருந்து வரும். இரும்பு, எஃகு, சிமிண்ட், உரம், பூச்சி மருந்துகள், நிலக்கரி போன்ற துறைகள் லாபகரமாகவும், கனிமவளங்கள்:, பெட்ரோலியம், எரிவாயு, எண்ணெய் உற்பத்தி துறைகள் சற்று லாபம் குறைந்தும் காணப்படும். உணவு, ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் துறைகள் லாபகரமாகவும் ரேஸ், லாட்டரி, கிளப், சுற்றுலாத் துறைகள் நல்ல லாபகரமாகவும் பங்குச் சந்தை ஏற்றமாகவும் இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஓரளவு லாபகரமாக அமையும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உற்பத்தியை சற்று குறைத்தல் நலம். கப்பல், படகு, நீர், மீன் பிடித் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். திரையரங்கம், திரைப்பட விநியோகம், சினிமாத் துறை சாதகமாக இருந்து வரும். கமிஷன், ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் சற்று சாதகமாக அமையும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சாதகமாக இருக்கும். விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் சுமாராகவும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் கூட்டுத் தொழிலில் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்படும். பத்திரிக்கை, எழுத்து, படைப்பு தொழில்கள் சாதகமாக இருந்து வரும்.
 
விவசாயம்
 
புதிதாக விளை நிலங்களை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த உற்பத்தி அமையும். அதற்கேற்ற வருமானம் சற்று குறைந்து காணப்படும். மான்யங்கள் வருவதில் சற்று கால தாமதம் ஏற்படும். காய்கறிகள், பழ வகைகளில் லாபமும் கரும்பு, வாழை, நெல், கோதுமை இவற்றில் லாபம் கூடியும் பயறு வகைகள் எண்ணெய் வித்துக்களில் சற்று லாபம் குறைந்தும் காணப்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும்.
 
அரசியல்
 
அரசியலில் எதிர்பார்த்த பதவி உயர்வுகளில் சற்று தடை ஏற்பட்டாலும் பின்னால் நற்பலன்கள் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவு குறைந்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படும். எதிரிகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். விட்டதை பிடிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். பண வரவுகள் சற்று குறைவாக இருந்து வரும். உங்களுடைய தனித் தன்மையை, தலைமை பண்பை ஆளும் தன்மையை நன்கு வளர்த்து கொள்ளல் அவசியம்.
 
கலை
 
உங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தினால் மட்டுமே சிறப்பாக சமூகத்தில் வலம் வர முடியும். போட்டி, பொறாமை இவற்றை முறியடித்து வெற்றி பெறுதல் வேண்டும். ஜோதிடம், சினிமா, பாட்டு, நாடகம், இசை, நாட்டியம், நடனம், சிற்பம் இவற்றால் ஓரளவு நன்மை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். அவற்றால் ஓரளவு லாபம் ஏற்படும். எப்பொழுதும் சுறு சுறுப்பாக இயங்குதல் வேண்டும்.
 
மாணவர்கள்
 
படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் நலம். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பரிசும் பட்டமும் ஒரு சிலருக்கு அமையும். கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கச் சற்று போராட வேண்டியது வரும்.
 
பெண்கள்
 
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க சற்று போராட வேண்டியது வரும். எதிர்பார்த்த வேலை அமைவதில் சற்று தடையேற்படும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும் திருமணம் போன்ற சுபாகாரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் அமையும். விவகாரத்து கேட்டவர்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை கொள்ளல் வேண்டும். அடிக்கடி புதிய, ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அமையும். குடும்பத்தில் புது வரவால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களைப் பேசுவதோ கூடாது. அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.
 
உடல் ஆரோக்யம்
 
தொடர்ந்து மருந்து மாத்திரைகள் தேவையில்லாமல் சாப்பிட வேண்டியது வரும். சர்க்கரை, உப்பு சத்து இருப்பின் அதை கட்டுக்குள்: வைக்கவும், கண் அடிவயிறு, கால் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் பார்த்து கொள்ளல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்திப் பலன்கள் (மூலம், பூராடம் உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு, பொருள் வரவு அதிகரித்துக் காணப்படும். அதே சமயம் தேவையற்ற விரயங்களும், கஷ்டங்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த வெற்றி அமையும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். அதை நல்லவிதமாக பயன்படுத்தவில்லை என்றால் விரயமாகும். வேலைக்கு முயற்சிக்க கடுமையாக போராட வேண்டி வரும். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டுமே நம்பினால் நல்ல பலன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை. கலைத்துறையில் நல்ல லாபம் அமையும். சிறு தொழில்கள், உற்பத்தி சார்ந்த துறைகள் சாதகமாகவும் ஏற்றுமதி இறக்குமதி சுமாராகவும் இருந்து வரும். விருந்து சுற்றுலா இவைகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும். அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருந்து வரும்.
 
பூராடம்
 
கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள், அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலை கிடைப்பதில் சற்று தாமதமாகும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிதல் கூடாது. குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் நன்மையும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் அமையும். பெரிய மனிதர்களின் நட்பும் உறவும் அமையும். அவர்களால் சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதைய்ம் உயர்ந்து காணப்படும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருந்து வரும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். நல்ல உணவு உடை, ஆபரணங்கள், உழைக்காமலேயே பணவரவும் இக்காலங்களில் அமைய வாய்ப்பு ஏற்படும்.
 
உத்தராடம்
 
தேவையயில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அரசு மற்றும் அரசு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. விபத்து ஆப்ரேஷன் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடந்தேறும். எனவே தெய்வ அனு கூலத்தை கூட்டுதல் வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய தொழில்கள் தொடங்குவதில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் மன நிம்மதியற்ற சூழ்நிலை அமையும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களுடன் உறவினர்களும் ஒரு நேரம் சகாயமாகவும், ஒரு நேரம் பாதகமாகவும் நடந்து கொள்வர். தொழிலில் புதிய முயற்சிகளைப் புகுத்துவதில் அதிகக் கவனம் தேவை.
 
கேட்டை
 
இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் அமையும்.
 
உத்தராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனவரவும், பொருள் வரவும் ஒரு சிலருக்கு அமையும். முன்னோர்கள் சொத்துக்கள், கணவன் அல்லது மனைவி மூலம் எதிர்பாராத வருவாய் ஒரு சிலருக்கு வந்து சேரும். அதே சமயம் அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. அரசின் சட்டதிட்டங்களை ஓரளவுக்கு மதித்து நடக்கப் பழக வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் போடுவதோ கூடாது. தேவையற்ற விரயச் செயல்கள், தண்டச் செலவுகள், வைத்யச் செலவுகள் வந்து சேரும். எனவே குல தெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு இக்காலங்களில் அவசியம் செய்தல் வேண்டும். அதிக அலைச்சல் குறைந்த வருவாய் உழைப்புகேற்ற ஊதியம் இல்லாமல் இவை எல்லாம் இக்காலங்களில் நடந்தேறும். வேலையாட்களால் தொழிலாளர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியது வரும். கனவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள்: சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.
 
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன காதல் திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், தோட்டம், நிலபுலன்கள், எஸ்டேட்கள் வாங்க அவரவர் பிறந்த ஜாதகபடி அமையும். மேலும் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெற ஏதுவான காலமாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர். தாயாரால் எதிர்பாராத உதவியும் நன்மைகளும் கிட்டும். வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் ஒரு திருப்தியற்ற தனமையே நிலவும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. புதிய வேலை கிடைக்க தாமதம் ஆகும். வேலையில் எச்சரிக்கை தேவை. கூட்டுத் தொழிலுக்கு கூட்டாளிகள் தாமாகவே வந்து சேருவர்.
 
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
கல்வி கற்பதில் இருந்த தடை நீங்கி உயர் கல்வி பயில்வதற்கான சந்தர்ப்பம் அமையும். எதிர் பார்த்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் நல்ல மதிப்பெண்கள் வர வாய்ப்பு அமையும். எதையும் தைரியமாகவும், துணிவுடனும் சந்திக்கும் ஆற்றல் இயற்கையாகவே வந்து சேரும். காலி மனை, வீடு, வண்டி, வாகனம் வாங்க சரியான தருணம் இது. தாயாரால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் நல்ல லாபம் அதிகரித்து காணப்படும். வேலையில் எப்பொழுதும் ஒரு திருப்தியற்ற தன்மை காணப்படும். வேறு வேலைக்கு அவசரப்படுதல் கூடாது. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடவும் கூடாது. சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நடந்தேறும். அவர்களால் உங்களுக்கு நன்மையும் கிட்டும். குழந்தை பாக்யத்தில் தடை ஏற்படும். விருந்து கேளிக்கைகளில் விருப்பம் இராது. பங்கு சந்தை சாதகமாக இராது. அரசியல் வாழ்வு சற்று சுமாரகவே இருந்து வரும்.
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
தனுசில் அமர்ந்த சனி 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பது மிகவும் சிறப்பானது. பேச்சில் சாமர்த்தியம் கூடும். அந்தஸ்து புகழ் கௌரவம் அதிகரிக்கும். பொருள் வரவு, பண வரவு தாரளமாக இருந்து வரும், கொடுத்த பணம், பொருள் வந்து சேரும். பேச்சால் எதையும் சாதித்து அதன் மூலம் பேசிப் பேசியே நற்பலன் அடைய வாய்ப்புகள் வந்து சேரும். கையில் பணம், பொருள், நகைகள், சரக்கு இருப்புகள் இருந்து கொண்டே இருக்கும். அதே சமயம் செலவினங்களும் அதிகரித்துக் காணப்படும். வேலை அல்லது உத்யோகம் மூலம் நல்ல வருமானம் அமையும். சகோதர சகோதரிகள் உங்களை விட்டுப்பிரிய நேரிடும். தாயாரின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். தாயார் அன்பும் ஆதரவும் கிட்டும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அடிக்கடி பயணங்களால் நன்மை ஏற்படும்.
 
சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடத்தை பார்வை செய்வது சிறப்பானது. எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். அதை ஒடுக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். போட்டி தேர்வு எழுதும் வாய்ப்பு அரசாங்க வேலை வாய்ப்பும் கிடைக்கும். மனைவிக்கு வைத்யச் செலவுகள் செய்ய வேண்டியது வரும். கணவன் மனைவி உறவு சற்று சுமாரகவே இருந்து வரும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராகவே இருந்து வரும். வேலைக்கு நிரந்தரமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு கிட்டும்.
 
சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
இதுவரை விட்டு விலகி இருந்த தகப்பனரால் எதிர்பாராத நன்மை ஏற்படும். அவரின் அன்பும் ஆதரவும் கிட்டும். உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்ல இருந்த தடைகள் நிவர்த்தியாகும். அடிக்கடி வேலை மாற வேண்டி வரும். பார்க்கும் வேலையை விட வேண்டி வரும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவர். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, கமிஷன் ஏஜென்ஸீஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் சிறந்து விளங்கும். உணவு, ஓட்டல், ஆடை, ஆபரணங்கள் நல்ல லாபகரமாக அமையும். பங்குச் சந்தையில் அதிக கவனம் தேவை. பெரிய மகான்கள் தரிசனம், சித்தர்கள் தரிசனமும் கிட்டும்.
கும்ப ராசி
(அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)
 
(கு, கெ, கோ, ஸ், ஸீ, ஸே, த) ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாகக் கொண்டவர்களும் தமிழ் – மாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)
 
ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும் சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே உறுதியும் அனைவரையும் வசிகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள். தலைமைப் பணபும், எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை ஆராயும் திறமை உடையவர்கள்.
 
தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத உயர்ந்த பண்பாளர் நீங்கள். உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள். உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.
 
இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும் காலமாகும்.
 
இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகல் எல்லாம் கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால் செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள் வந்து சேரும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.
 
மனை வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. நேரத்திற்கு உனவு அருந்துதல் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.
 
குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன் பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள் ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்
 
காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும். இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.
 
வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வேலையின் நிமித்தமாக பணியின் நிமித்தமாக தொழில் நிமித்தமாக வீடு, மாற வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு வந்து சேரும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வெளியூர், வெளிநாடு செல்வதில் சிறு சிறு தடைகள் ஏற்படும். மேலும் நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனப் பராப்தி அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மை அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
 
வேலை (JOB) அல்லது தொழில் (BUSINESS)
 
இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை அமையும். திருப்தியற்ற வேலை இல்லை என்றாலும் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விரும்பிய வேலைக்கு முயற்சிக்கவும். போட்டித் தேர்வுகளில் ஒரு சிலர் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வாய்ப்புகள் அமையும். சக ஊழியர்கள் விஷயங்களில் சற்று அடக்கி வாசித்தல் வேண்டும். உயரதிகாரிகள் சற்று சாதகமாக நடந்து கொள்வர். வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்வதில் சற்று தடையேற்பட்டு பின் விரும்பியவாறு நடந்தேறும். முதலாளி தொழிலாளி உறவு சற்று சுமாராகவே இருந்து வரும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சுய தொழில் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக அமையும். பங்குச் சந்தை ஏற்றமாக இராது. ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாரகவே இருந்து வரும். கூட்டுத் தொழில் செய்வதில் அதிக கவனம் தேவை. இரும்பு எஃகு, சிமெண்ட், உரம், மற்றும் இரசாயனத் துறைகள் நன்கு ஏற்றமாக இருந்து வரும். லாட்டரி, ரேஸ், கிளப், சுற்றுலா இவைகள் சற்று சுமாராக இருந்து வரும். உணவு, ஓட்டல், ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும். ஆனால் லாபம் சற்று குறைந்து காணப்படும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஏற்றமாக இருந்து வரும். பொறியியல், மருத்துவம், இரசாயனம் மற்றும் நீர் சம்பந்தமான துறைகள் லாபகரமாக அமையும். பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு போன்ற பூமியிலிருந்து கிடைக்கும். கனிம வளங்கள், தனிம வளங்கள் நல்ல லாபகரமாக இருந்து வரும். பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் சிறப்பாக அமையும். சாலையோர வியாபாரம் சற்று லாபகரமாக இருக்கும். நீர், கப்பல், மீன்பிடித் தொழில்கள் ஏற்றமாக இருந்து வரும். கமிஷன், ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ராக்ட் கன்சல்டன்சி இவைகள் லாபகரமாகவும் கட்டுமானம், ரியல் எஸ்டேட் சிறப்பாகவும் இருந்து வரும். பத்திரிக்கை படைப்பு, எழுத்து, தகவல் தொடர்பு, லாபகரமாகவும் அலைந்து திரிந்து தொழில் செய்பவர்கள் ஏற்றமுடன் விளங்குவர்.
 
விவசாயம்
 
பழங்கள், காய்கறிகள் உற்பத்தி அதிகரித்தும், லாபம் அதிகரித்தும் காணப்படும். எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், பூக்கள் ஓரளவு லாபகரமாக அமையும். மேலும் எதிர்பார்த்த மான்யம் கிடைப்பதில் இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். மா, வாழை, கரும்பு, நெல், கோதுமை லாபகரமாக அமையும். ஏலம், கிராம்பு, முந்திரி போன்ற பணப்பயிர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சற்று லாபகரமாக இருக்காது.
 
அரசியல்
 
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமாக இருந்து வரும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருந்தாலும் தலமை இடம் தேவையில்லாத பிணக்குகள் ஏற்படும். எதிரிகள் தொல்லை அதிகரித்தும் அவர்களால் முன்னேற்றத்தில் அதிக தடையும் ஏற்படும். தேவையற்ற சட்ட சிக்கல்களில் மாட்டாமல் கூடியவரை நிறைய விஷயங்களில் அடக்கியே வாசித்தல் வேண்டும். எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் சூழ்நிலைக்கு ஏற்பவும் சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் முடிவு எடுத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருந்து வரும்.
 
கலை
 
முழுமையாக உங்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இக்காலங்களில் நீங்கள் சிறப்பெய்த முடியும். தொழிலில் போட்டி பொறாமை அதிகம் காணப்படும். எனவே உங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை நீங்களே உருவாக்குதல் வேண்டும். சினிமா, இசை, நடனம், நாட்டியம், ஒவியம், சிற்பம், ஜோதிடம் இவை அனைத்தும் நன்றாக இருந்தாலும் பணப்புழக்கம் சற்று குறைந்து காணப்படும். பெயர், புகழ் பெறுவதிலும் கடுமையான போட்டி நிலவும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். வெளியூர், வெளிநாடு செல்லவும் ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
 
மாணவர்கள்
 
எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. தேவையற்ற உறவுகளைக் கட்டுப்படுத்தவும், உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும்.
 
பெண்கள்
 
உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வர். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசுதல் கூடாது. காதல் விஷயங்களில் மகிழ்ச்சி நிலவும். ஒரு சிலருக்கு காதல் கை கூடி திருமணத்தில் முடியும். பொருளாதாரம் தாரளமாக இருந்து வரும். பணப்புழக்கங்கள் சீராக இருந்து வரும். குடும்பத்தில் புது வரவு அமையும். அதனால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. திருமணம், குழந்தை பாக்யம் இவற்றில் இருந்த தடைகள் நீங்கி விடும். விவகாரத்து கேட்டவர்களுக்கு விவகாரத்து கிடைத்து விடும். ஒரு சிலருக்கு 2வது திருமனம் அமைய வாய்ப்புகள் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். சர்க்கரை, உப்பு சத்துக்கள் இருப்பின் அவைகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளல் வேண்டும். கண் அடிவயிறு மற்றும் பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் கவனித்தல் அவசியம்.
 
சனிபகவானின் வக்ரம் மற்றும் வகர நிவர்த்திப் பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் ராசிக்கு 12ம் மற்றும் 11ம் இட்த்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்யும். காலங்களில் அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். ஊர் மாற்றம், இட மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தேவையற்ற முதலீடுகளை தவிர்த்தல் நலம். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எதிலும் முதலீடு செய்தல் வேண்டும். அந்நிய மொழி பேசுபவர்களிடம் கவனமாக பேசி பழகுதல் வேண்டும். அவர்களால் நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். போட்டித் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனம் செலுத்துதல் வேன்டும். உங்களைப் பற்றிய தேவையற்ற ஒரூ வீண் வதந்திகளை பரப்பிய வண்ணம் இருப்பர். கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.
 
பூராடம்
 
சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். ஏதிர் பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வியால் நன்மை ஏற்படும். தாய் தந்தை இருவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையில் திருப்தியற்ற நிலை அமையும். பார்க்கும் வேலயை விட வேண்டியது வரும். வேலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். சுய தொழிலும் சாதகமாக இராது. லாபம் வருவது போல் தோன்றினாலும் லாபம் கைக்கு வராது. போட்டி பந்தயங்களைத் தவிர்த்தல் நலம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடையேற்படும்.
 
உத்தராடம்
 
உத்தராட நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பும் ஒரு சிலருக்கு படிப்பின் காரணமாக வெளிநாடு செல்லும் அமைப்பும் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். சுய தொழில்கள், கூட்டுத் தொழில்கள் சாதகமாக இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிக கவனம் தேவை. வேலையை அவசரபட்டு விட்டு விடுதல் கூடாது. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. வழக்குகள் இழுபறியாக இருந்து வரும். கொடுக்கல் வாங்கல் சாதகமாக அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகையால் எதிர்பாராத நன்மைகளும் மகிழ்ச்சியும் அமையும். வெளிநாட்டு பயணத்தில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.
 
கேட்டை
 
பார்க்கும் வேலையில் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ அலல்து வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. கவனமாகச் சிந்தித்து செயல்படுதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் கவனம் தேவை. உல்லாசப் பயணங்களில் அதிக கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடந்தேறும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
 
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பார்க்கும் செய்திகள் சாதகமாக அமையும். சிறு தொழில்கள் குறுந்தொழில்கள் சாலையோர வியாபாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு போக்குவரத்து சாதகமாக அமையும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். எதிர்பாராத நட்பு வட்டாரம் உருவாகும். அதனால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். மனதில் உற்சாகமும் பேச்சில் சாமர்த்தியமும் அதிகரிக்கும். இனம் தெரியாத தைரியம், வீர்யம், விவேகம் அதிகரிக்கும்.
 
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
சதய நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்குப் புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். தாத்தா அல்லது தந்தையின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தடையேற்பட்டாலும் முதலில் கிடைத்த வேலையில் அமர்வது சிறப்பானது ஆகும். வேலையில் மாற்றமும் ஒரு சிலருக்கு உத்யோகத்தில் உயர்வும் முன்னேற்றமும் சற்று தடைக்குப் பின் நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் நாட்டம் மற்றும் ஆர்வம் குறைந்து காணப்படும். முன்னோர்கள் மற்றும் கணவன் மற்றும் மனைவி மூலம் எதிர்பாரத தனவரவும் பொருள் வரவும் ஒரு சிலருக்கு வந்து சேரும். தேவையற்ற கடன் நிம்மதியை குழைக்கும், யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையேற்படும்.
 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
இதுவரை கொடுத்த பணம் வராமல் இருந்தவை இனி அவைகள் கைக்கு வந்து சேரும். பணம் மட்டுமல்ல பொருள் பத்திரங்கள் இவைகளும் வந்து சேரும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியமும் அதனால் நன்மைகளும் ஏற்படும். குடும்பத்தில் புதுவரவு அமையும். புது உறுப்பினர் வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடும்பத்தில் நிலவும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் கிட்டும். இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இரண்டாவது திருமணம் செய்தவர்களுக்கு இது உகந்த நேரமாகும். அடிக்கடி ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் ஆலய தரிசனம் தெய்வ தரிசனத்தில் நாட்டமும் அதிகரிக்கும்.
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஒரு பக்கம் தன்னம்பிக்கை அதிகரித்தும் அதே சமயம் அந்த தன்னம்பிக்கையை குழைக்கும் வண்ணம் தேவையற்ற விசயங்களும் நடந்தேறும். வலுவாக முயற்சி செய்தால் மட்டுமே எதிலுமே வெற்றி பெற முடியும். எதிலும் வெற்றி பெறக் கடுமையாகப் போராட வேண்டியது வரும். எப்பொழும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கப் பழகுதல் வேண்டும். உடம்பில் சோம்பல் அசத்தல் அதிகரிக்கும். உங்களது கௌரவம் புகழ் அந்தஸ்த்துக்குப் பாதிப்பில்லாமல் நடந்து கொள்ளல் வேண்டும். உங்களைப்பற்றி ஒரு வீண் வதந்தி உலவிய வண்ணம் இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எதற்கெடுத்தாலும் போராட வேண்டியது வரும். சுய தொழில் சிறுதொழில்கள் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பேசவோ எழுதவோ கூடாது.
 
சனி பகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் இடத்தைப் பார்வை செய்வதால் உங்களது அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். குழந்தை பாக்யம் ஓரளவு கிட்டும். வீட்டில் இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் சற்று தாமதமானாலும் அவை நல்ல படியாக நடந்தேறும். கொடுத்த பணம் பொருள் சாமன்யமாக கைக்கு வராது. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது. உழைப்புக்கேற்ற ஊதியம் கைக்கு வராது. இதுவரை வருத்தி வந்த நோயின் தன்மை ஒரு சிலருக்கு குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கடினமாக உழைத்தல் வேண்டும். இல்லையேல் வெற்றிக்கனி சாமன்யமாக கைக்கு வராது. விளையாட்டுகளில் ஈடுபாடு கூடும்.
 
சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8ம் இடத்தைப் பார்வை செய்வதால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கொடுத்த பணம் பொருள் கைக்கு வந்து சேராது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்றுவருதல் வேண்டும். தாயாருக்கு இருந்து வந்த நோயின் தனமை குறைய ஆரம்பிக்கும். அநியாயமாக வட்டி கட்ட வேண்டியது வரும். அரசாங்க விஷயங்களில் தேவையற்ற விரையம் ஏற்படும். ஆக்ஸ்டென்ட் ஆப்ரேஷன் செய்ய வேண்டிய காலம் ஆகும். தெய்வ வழிபாட்டைக் கூட்டுதல் வேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம், சகோதர, சகோதரிகளுக்கு வேலையில் இருந்த வந்த மந்தநிலை மாறி அவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.
மீன ராசி பலன்கள்
பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி
 
(த, தீ, து, தோ, ச, சா, சி, ஆகிய எழுத்துக்களைப் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
 
வான மண்டலத்தில் 12அது ராசியாக உள்ள உங்கள் மீன ராசிக்கு அதிபதி கிரகம் குருவாகும். தெய்வத்திற்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள் நீங்கள். எப்பொழுதும் எதையும் நிதானமாக யோசித்துச் செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பும் உடையவர்கள். எதிலும் ஈடுபாட்டுடன் முனைந்து செயல்படும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்யத்துவம் கொடுப்பவர்கள் ஆவிர்கள்.
 
இப்படிப்பட்ட குணம் உடைய உங்கள் மீன ராசிக்கு சனிபகவான் உங்கள் ராசிக்கு இதுவரை 9ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 10ம் இடமான தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு வந்து பலன் அளிக்க உள்ளார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 11, 12 மற்றும் வீட்டுற்கதிபதியாவார், அவர் உங்கள் ராசிக்கு இப்பொழுது 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். பொதுவாகவே சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செயவது சிறப்பில்லை என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவை பற்றிய கவலையை விட்டுவிட்டு இனி என்ன மாதிரியான பலன்களை உங்களுக்கு அளிக்க உள்ளார் என்பதைப் பார்ப்போம்.
 
உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும். எப்பவும் அவசரப்படாமல் எதிலும் சற்று நிதானித்துச் செயல்படுவீர்கள் என்றால் வெற்றி நிச்சயமாகும்.
 
தேவையில்லாமல் பணத்தை மிச்சப்படுத்தாமல் தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பத்தான் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். அதனால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
 
அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக இராது. புதிய விஷயங்களைக் கற்பதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். உறவுகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும், பழைய பொருளை விற்றுப் புதிய பொருட்கள் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டியது வரும். அல்லது வீடு மராமத்து மற்றும் தேவையற்ற விரையங்கள் ஏற்பட்டு விலகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்குப் போவதில் முட்டுக்கட்டை ஏற்படும் பின் நிறைவேறும். நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும்.
 
மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை இருந்து வரும். கடன் வாங்க வேண்டியது வரும். பழைய கடனை அடைக்கப் புதிதாக கடன் வாங்க வேண்டியது வரும்.
 
போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் அதனால் ஒரு சிலருக்கு நல்ல வேலை உத்யோகம் அமைய வாய்ப்பு ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சற்று சாதகமாக அமையும். விவகாரத்து கேட்பவர்களுக்கு விவகாரத்து கிடைக்கும். தாய் மாமன்களால் எதிர்பாராத நனமையேற்படும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் நன்மையேற்படும்.
 
இதுவரை திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும்.
 
வேலை அல்லது உத்யோகம் (JOB)
 
உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது சிறப்பில்லை என்று ஆதிநூல்கள் குறிப்பிட்டாலும் நடைமுறையில் அப்படி இல்லை. அவர் 10ம் இட்த்தில் சஞ்சாரம் செய்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்வார். வேலையில் முன்னேற்றமும் ஊதியமும் அமையும். பார்க்கும் வேலையை அவசரப் பட்டுவிட்டு விடாமல் மனப்பூர்வமாக கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துதல் வேண்டும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பும் அமையும். சக ஊழியர்களால் நன்மையேற்படும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும்.
 
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
 
சுயதொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும். கூட்டுத் தொழிலில் பார்ட்னர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில்கள் லாபகரமாக அமையும். அதே சமயம் கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர்ஸ், கான்ட்ரக்டர்ஸ் கன்சல்டன்சி சற்று தாமதமாகவே இருந்து வரும். போக்குவரத்து தகவல் தொடர்பு, பத்திரிக்கை, சற்று லாபம் குறைந்தும் சிறு தொழில்கள் குறுந் தொழில்களில் தேவையற்ற முதலீட்டைத் தவிர்த்தல் நலம். பங்குச் சந்தை சற்று சுமாராக இருந்து வரும். முதலாளி, தொழிலாளி உறவுகள் நன்கு அமையும். சினிமா, லாட்டரி, ரேஸ், கிளப், சூதாட்டம் லாபகரமாக அமையும். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், இரும்பு எஃகு, சிமெண்ட், நிலக்கரி தாது மற்றும் கனிமவளங்கள் உற்பத்தி அதிகரித்தும் லாபம் சற்று அதிகரித்தும் காணப்படும். பெட்ரோல், டீசல், எரிவாயு லாபம் கூடியும் கனரகத் தொழில்களில் உற்பத்தி அதிகரித்தும், ஒட்டல், உணவு, சுற்றுலாத் துறைகள் சற்று லாபம் குறைந்தும் காணப்படும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாகவும் முகவர்கள் அலைந்து திரிந்து தொழில் செயவர்களுக்கு லாபம் குறைந்தும் கப்பல், நீர், மீன்பிடித் தொழில்களில் லாபம் குறைந்தும் காணப்படும். பிளாஸ்டிக் மரம், உப்பு அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி கூடியும் லாபம் சற்று குறைந்தும் காணப்படும். சாலையோர வியாபாரம் லாபகரமாக அமையும்.
 
விவசாயம்
 
சாகுபடிகள் சற்று சுமாராக இருந்து வரும். சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். உற்பத்தி சற்று குறைந்தாலும் லாபம் அதிகரிக்கும். நெல், கோதுமை, வாழை இவைகள் லாபகரமாகவும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் லாபம் குறைந்தும் ஏலம், மிளகு முந்தரி போன்ற பனப்பயிர்கள் உற்பத்தி மற்றும் லாபம் அதிகரித்தும் காணப்படும். விவசாய மான்யக்கடன் சற்று எளிதாகக் கிடைக்கும்.
 
அரசியல்
 
நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவு எடுத்தல் வேண்டும். அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அதே சமயம் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அதிகரித்துக் காணப்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும். தலைமையிடத்தில் கவனமாகப் பேசிப் பழகுதல் வேண்டும். பொருளாதார நிலை சீராக இருக்கும். தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் மக்களுக்கான தொண்டு செய்வதை அதிகரித்தல் வேண்டும்.
 
கலை
 
கலைஞர்களுக்கான சற்று ஏற்றமான காலமாகும். நடிப்பு, ஒப்பனை, உடை அலங்காரம், டப்பிங் வாய்ஸ், அழகுக் கலை, இசை, ஓவியம் நடனம், நட்டியம், ஜோதிடம், சிற்பம், சினிமா, சின்னத்திரை சாதகமாக இருந்து வரும். புதிய ஒப்பந்தங்கள் ஒரு சிலருக்கு அமையும். வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு கிட்டும். பரிசும் பணமும் வந்து சேரும். பணப்புழக்கம் ஓரளவு தாரளமாகப் புழங்கும்.
 
மாணவர்கள்
 
படிப்பில் அதிகக் கவனம் தேவை. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதில் சற்று தடையேற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எசரிக்கை தேவை. விளையாட்டுகளில் ஆர்வமும் திறமையும் கூடும். கல்விக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கப் போராட வேண்டியது வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
 
பெண்கள்
 
வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலை இருந்தாலும் அவசரப்பட்டு வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலை தேடுபவர்களுக்கு வேலை எளிதில் அமையும். அரசு வேலை கிடைக்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற மனச்சஞ்சலங்கள் ஏற்படும். உயரதிகாரிகள் சாதகமாக அமைவர். அடிக்கடி ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும். விருந்து கேளிக்கைகள் சுற்றுலா மகிழ்ச்சிகரமாக அமையும். காதல் விஷயங்கள் சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இரண்டாவது திருமணத்திற்கு ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும். குடும்பத்தில் புதுவரவால் மகிழ்ச்சி அமையும். உடல் ஆரோக்யத்தில் நன்கு கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. கணவரின் உடல் நலத்தில் சற்று கவனம் செலுத்துதல் வேண்டும்.
 
உடல் ஆரோக்யம்
 
உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. உடலில் சளித் தொல்லைகள் ஏற்படாமல் கவனித்தல் நலம். நெஞ்சு, வயிறு, கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும்.
 
சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்திப் பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)
 
மூலம்
 
சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கேது பகவான் உங்கள் ராசிக்கு 11 மற்றும் 10ம் இடங்களில் கோச்சாரத்தில் சஞ்சாரம் செய்வார். இக்காலங்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்களது மதிப்பு மரியாதையும் கூடும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக இருந்து வரும். பெரிய முதலாளிகளாக அல்லது தொழில் முனைவோர்களாக ஒரு சிலர் உருவாவர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை எளிதாகக் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியமும் அந்தஸ்தும் அதிகரிக்கும். வருமானம் கூடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். எடுக்கும் காரியங்கள் சாதகமாக அமையும். நண்பர்களால் நன்மையேற்படும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும்.
 
பூராடம்
 
சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதோ தலையிடுவதோ கூடாது. பேச்சைத் தவிர்த்தல் நலம். எடுக்கும் முயற்சிகளில் வலுவான போராட்டங்களுக்கிடையே காரியம் நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். அன்றைய வேலையை அன்றே முடித்தல் நலம். உடன் பிறந்தவர்களால் தேவையற்ற மனக் குழப்பங்கள் வருத்தங்கள் வந்து போகும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். போக்குவரத்தில் அதிக எச்சரிக்கை தேவை. உயர்கல்வி பயிலத் தடையேற்பட்டுப் பின் தடை நிவர்த்தியாகும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. அடிக்கடி இடமாற்றம் அலைச்சல்கள் அதிகரிக்கும். இருக்கும் பொருட்கள்: கையை விட்டுப் போகும்.
 
உத்தராடம்
 
சனி பகவான் உத்தராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார சூழ்நிலையில் இருந்து வந்த மந்தநிலை மாறிப் பணப்புழக்கம் அதிகரித்துக் காணப்படும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். பங்குச் சந்தை ஏற்றமாக அமையும். அரசியல் சமுதாய வாழ்வு நன்கு அமையும். கொடுத்த பணம் பொருள் தாரளமாக கைக்கு வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும் அதனால் எதிர்பார்த்த ஊதியமும் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். காதல் விஷயங்கள் சந்தோஷகரமாக அமையும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிட்டும். விருந்து சுற்றுலா இவைகளில் உற்சாகமும் ஆர்வமும் கூடும்.
 
கேட்டை
 
கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். பார்க்கும் வேலையில் அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. காலி மனை, விடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அதே சமயம் உடல் ஆரோக்யம் சற்று சுமாராகவே இருந்து வரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். நேரத்திற்கு உணவு அருந்துதல் நலம் கூடியவரை விரதத்தைத் தவிர்த்தல் நலம்.
 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு கையில் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணம் பொருள் பத்திரங்கள் திரும்ப கைக்கு வந்து சேரும். உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு வந்தமையும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நடந்தேறும். வேலை வாய்ப்பு போன்ற முன்னேறங்கள் நடந்தேறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் எதிர்பாராத நன்மையேற்படும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வர். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். ஒரு சிலருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய காலமாகும். அடிக்கடி ஆன்மீக விஷயமாக ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் கிட்டும். விசா, பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு விசயங்கள் சாதகமாக அமையும். முதலாளிகளாக ஒரு சிலர் உருவெடுப்பார்.
 
உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்பாராத செய்திகள் எதிர்பார்த்த செய்திகள் இரண்டும் சாதகமாக அமையும். அரசாங்க விஷயங்களில் ஆரம்பத்தில் சற்று தடையேற்படுவது போல் தோன்றினாலும் இறுதியில் வெற்றி அமையும். உயர் கல்வி பயில வாய்ப்பும். அதன் காரணமாக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். மேலும் சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் கூடும். தேவையற்ற விரையங்களும் நஷ்டங்களும் வைத்யச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். தேவையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதுமானது ஆகும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
 
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
 
சுய தொழில்கள் செய்ய வாய்ப்பு அமையும். புதிய தொழில்கள் தொடங்கவும் பார்டனர்ஷிப்போடு தொழில் செய்யவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும். உயர் கல்வியில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் எச்சரிக்கை தேவை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். வழக்குகள் சாதகமாக இராது. எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. பங்குச்சந்தையில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கணவன் மனைவி உறவு சுமாராகவே இருந்து வரும். ஏற்றுமதி இறக்குமதி சுமாராகவே இருக்கும். நண்பர்களால் நன்மையும் அவர்களால் மகிழ்ச்சியும் கிட்டும்.
 
சனி பகவானின் 3ம் பார்வை பலன்கள்
 
சனி பகவானின் 3ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12ம் இடத்தைப் பார்வை செய்கிறார். சனியானவர் உங்கள் ராசிக்கு 11 மற்றும் 12ம் வீட்டிற்கும் அதிபத்யம் பெற்றவர். இவர் பார்ப்பதால் முதலீட்டை அதிகரித்தல் வேண்டும். எதிலாவது முதலீடு செய்தல் வேண்டும். இல்லையேல் தேவையற்ற விரையம் நஷ்டம் வைத்யச் செலவுகள் ஏறபடும். அடிக்கடி வெளியூர் பயணம் அமையும். வெளியூர் வெளிநாடு செல்வதில் இருந்த தடை நீங்கும், பாஸ்போர்ட், விசா வருவதில் இருந்த தடை நிவர்த்தியாகும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். சமூகத்தில் சற்று மதிப்பு குறைந்து காணப்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுதல் வேண்டும். காதல் விஷயங்கள் சற்று சுமாரகவே இருந்து வரும். அடிக்கடி உடல் அசதி சோர்வுகள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் நலம்.
 
சனிபகவானின் 7ம் பார்வை பலன்கள்
 
சனி உங்கள் ராசிக்கு 7ம் பார்வையாக 4ம் இடத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு கிட்டும். கல்வியில் இதுவரை இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகரிக்கும் கல்வியில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். காலி மனை, வீடு, வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும். சகோதரர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியங்கள் இனிதே அமையும்.
 
சனி பகவானின் 10ம் பார்வை பலன்கள்
 
சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தைப் பார்வை செய்வதால் சுய தொழில்கள் கூட்டுத் தொழில்களில் ஒரு சிலரை இறக்குவார். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு வெற்றியாகி அது திருமணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு நன்கு அமையும். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருந்து வரும். சாலையோர வியாபாரம் கமிஷன், ஏஜென்ஸிஸ், தகவல் தொடர்பு, போக்குவரத்து, ஓட்டல், உணவு, உடை சமபந்தமான தொழில்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டை அதிகரிக்கவும்.

0 Comments