10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சமயச் சின்னங்கள் (1.வாழ்வியல்-1.3சமயச் சின்னங்கள்)

விபூதியும் உருத்திராக்கமும் முக்கியமான சைவ சமயச் சின்னங்களாகும். இவை எமது அஞ்ஞானத்தைபோக்கி தீமைகளினின்றும் எம்மைப் பாதுகாத்து இறைவனையும் அவனது பெருங்கருணையையும்  நினைவூட்டும்சாதனங்கள். பிரதானமாக நீராடியவுடனும் பூசை வழிபாடு கள் செய்யும் நேரங்களிலும் இவற்றை நாடோறும் பக்திசிரத்தையுடன் தரித்தல் வேண்டும்.பூதியும் உருத்திராக்கமும் முக்கியமான சைவ சமயச் சின்னங்களாகும். இவை எமது அஞ்ஞானத்தைப்போக்கி தீமைகளினின்றும் எம்மைப் பாதுகாத்து இறைவனையும் அவனது பெருங்கருணையையும்  நினைவூட்டும்சாதனங்கள். பிரதானமாக நீராடியவுடனும் பூசை வழிபாடு கள் செய்யும் நேரங்களிலும் இவற்றை நாடோறும் பக்திசிரத்தையுடன் தரித்தல் வேண்டும்.

(அ) திரு நீறு (விபூதி)சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுஞ் சமயம் சைவம் எனப்படும். சைவசமய ஒழுக்கங்களில் இன்றியமையாதது சிவசின்னங்களில் ஒன்றாய திருநீறு அணிதலாகும். திருநீற்றுக்கு விபூதி பசிதம்

பசுமம்  இரட்சை ~hரம் என்ற பெயர்களும் உண்டு.
தன்னைத் தரித்தவர்களுக்கு மேலான செல்வத்தைக் கொடுத்த
லினால் விபூதி எனவும்  ஒளியைக் கொடுப்பதினால் பசிதம் எனவும்ää பாவங்
களை எரித்து நீறாக்குவதனால் பசுமம் எனவும் தன்னைத் தரித்த ஆன்
மாக்கள் எல்லாவற்றையும் இரட்சிப்பதனால் – காப்பதனால் இரட்சை எனவும்
உயிர்களது மலத்தை நீக்குதலால் ~hரம் எனவும் பெயர் பெறுகின்றது.
குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால்
உண்டாகும் நீறே தூய திருநீறாகும். திருநீறு வெண்மை நிறமானது.
வெள்ளை நிறத் திருநீறு அணியத்தக்கதாகும். ஏனைய நிறத் திருநீறு அணி
யத்தகாதது. வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளம். வெள்ளைநிறத்
திருநீற்றை அணிவதனால் எமது அகமும் புறமுந் தூய்மை அடைகின்றன.
இங்கே நீறாக எடுத்துக்கொள்ளும் சாணம் ஆன்மாவையும்
சாணத்தில் உள்ள அழுக்குகள் ஆன்மாவோடு உள்ள மலங்களையும்
நெருப்பு திருவருளையும் எரிதல் திருவருள் பதிதலையும் எரிந்தபின் வந்த
வெண்ணீறு மலங்கள் நீங்கத் தூய்மையடையும் ஆன்மாவையும் குறிக்கும்
என்பர் பெரியோர்.
திருநீறு இருவகையாகத் தரிக்கப்படும். ஒன்று உத்தூளனம்; பரவிப்
பூசுதலையே இப்பெயர் கொண்டழைப்பர். இரண்டாவது வகை திரிபுண்டரம்
எனப்படும். திருநீற்றை நீரிற் குழைத்து மூன்று குறியாகத் தரிப்பதனையே
திரிபுண்டரம் என்பர். சமயதீட்சை பெற்றோர் மாத்திரமே இவ்வாறு தரிக்கத்
தகுதியுடையவர்கள். இவ்வாறு தரிக்கும்போது கீழ்வரும் விதிகள் கவனிக்

கப்பட வேண்டியனவாகும். குறிகள் வளையாதும் இடையறாதும் ஒன்றை
யொன்று தீண்டாதும்ää அகலாதும் ஒவ்வோர் அங்குல இடை வெளியிருத்தல்
போன்றவையே அந்நியதி விதிகளாகும். திரிபுண்டரமாக அணிதற்குரிய
உறுப்புக்கள் உச்சிநெற்றி மார்புகொப்பூழ்முழந்தாள்கள் இரண்டு
புயங்கள் இரண்டுமுழங்கைகள் இரண்டு மணிகட்டுக்கள் இரண்டு
விலாப்புறங்கள்முதுகுகழுத்து எனும் பதினாறுமாம்.
திருநீறு அணியும் பொழுது உத்தம திக்குகளான வடக்கு முகமாக
வேனும்கிழக்கு முகமாகவேனும் இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்.
அதனைத் தரிக்கும்போது சிவபெருமானைத் தியானித்துப் பரமாணுவள
வாயினும் நிலத்திலே சிந்தாவண்ணம் அண்ணாந்து ‘சிவ சிவ” என்று
சொல்லிக் கொண்டுவலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்
டும். தரையிலே சிந்தப்பெற்றால் சிந்திய நீற்றை எடுத்துவிட்டு அவ்விடத்
தைச் சுத்தி செய்தல் வேண்டும்.
திருநீறு தரிக்கப்பெற வேண்டிய காலங்களாவன : சந்தியாகாலம்
மூன்றும் (காலைஉச்சிமாலை) சூரியோதயம் சூரிய அஸ்தமனம்
நித்திரைக்கு முன்னும் பின்னும் பல்துலக்கிய உடனும்நீராடிய உடனும்
பூசைக்கு முன்னும் பின்னும்ää உணவுக்கு முன்னும் பின்னும்தம் கடமை
களைச் செய்யச் செல்லும் போதும்சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும்
கட்டாயமாகத் திருநீறு அணிதல் வேண்டும்.
அக்கினியில் எரித்தெடுத்த தூய வெண்ணீற்றைப் புதிய பாத்திரத்
திலேயிட்டு நறுமலர்கள் தூவிப் பாத்திரத்தின் வாயைத் தூய துணியி
னாலே கட்டிப் பாதுகாத்தல் வேண்டும். அணிவதற்கு வேண்டிய திருநீற்றை
மட்டும் பட்டுப்பையிலேனும்சம்புடத்திலேனும் வைத்திருக்கலாம். திரு
நீற்றைச் சிவமாகவும் திருநீறு வைத்திருக்கும் பையைச் சிவாலயமாகவும்
மதிக்க வேண்டும்.
குருசிவனடியார் முதலியோர் திருநீறு தந்தால்அமைதியாக
அடக்கத்துடன் அவர்களை வணங்கி இரு கைகளையும் நீட்டி வாங்கி
அணிதல் வேண்டும்.
திருநீற்றுக்கு மேலே சந்தனமேனும் குங்குமமேனும் அணிதலா
காது. திருநீற்றுக்குக் கீழே புருவ நடுவில் அவற்றைத் தரிக்கலாம். திருநீறு
அணியாதவர் முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும். ‘நீறில்லா நெற்றி பாழ்”
என்பதும் இதனை ஒட்டியதே என்பதைத் தெரிந்து கொள்ளவும்.
திருநீற்றின் மகிமை ஆளுடைய பிள்ளையார் அருளிய திருநீற்றுப்
பதிகத்தில் விரிவாகவும் மற்றையோர் பாடல்களில் பரவலாகவுங் கூறப்
பட்டுள்ளது.

ஞானாக்கினியினாலே சுடப்பட்ட பசுமல நீக்கத்தால் விளங்குஞ்
சிவத்துவப் பேற்றின் அறிகுறியே திருநீறாகும். திருநீறணிவதனால் முத்தி
யும்சிவஞானமுங் கைகூடுமென அருள் நூல்கள் கூறுகின்றன. ‘முத்தி
தருவது நீறு”‘போதந்தருவது நீறு”சுந்தரமாவது நீறு”தேசம் புகழ்வது
நீறு” என்னுஞ் சம்பந்தர் திருவாக்குகளால் இதனை யாம் உணரலாம்.
ஒருவன் திருநீறு அணியும் பொழுது அத்திருநீறு படிகின்ற இடமெல்லாம்
சிவலிங்கமாகின்றதெனச் சைவ நூல்கள் கூறுகின்றன.

திருநீற்றின் பெரும்பயன்
பாவம் ஒழிந்தால் அடுத்த நிலை பரகதியேயாகும். மண்ணுலக
வாழ்வு முடிந்து விட்டால் அதன் பின்னர் விண்ணுலக வாழ்விற்குச் செல்ல
வேண்டும் என்பது ஆண்டவன் நியதி. இதனைப் பட்டினத்தடிகள் ‘வினைப்
போகமே ஒரு தேசம் கண்டாய். வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும்
நில்லாது கண்டாய்” எனப்பாடி உணர்த்துகின்றார்.
சிவபெருமானும்ää வானுலகத்தேவர்களும் திருநீறு அணிந்திருக்
கின்றார்கள் என்னும் உண்மையினைää இறைவனைக் கண்டவர்கள் தங்கள்
அருள் வாக்குகளிலே கூறியிரக்கிறார்கள். சம்பந்தர்ää ‘வானவர் மேலது நீறு”
என்றும்ää ‘மேலுறைத்தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு” என்றும்
பாடி தேவர்கள் திருநீறு அணிந்திருத்தலைக் கூறினார். ‘தோடுடைய
செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி
பூசியென்உள்ளம் கவர்கள்வன்” என்று பாடி சிவபெருமான் திருநீறு அணிந்
திருத்தலைக் கூறினார். ‘காடுடைய சுடலைப் பொடி பூசி” என்பது சாணியி
னால் உண்டாக்கப்பட்ட எருக்கட்டிகள்ää சுடுகாட்டில் அடுக்கப்பெற்று அவை
எரிந்த சாம்பலேயாகும்.
திருநாவுக்கரசர் ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு” என்று
பாடி சிவபெருமான் திருநீறு அணிந்திருந்ததை உணர்த்தினார். மாணிக்க
வாசகப் பெருமான் ‘வெண்ணீற்றான்” என்று சிவனைக்குறிப்பிடுகிறார். சிவ
னும்ää தேவர்களும் தங்கள் உடம்பில் எப்போதும் வெண்ணீறு பூசியவர்க
ளாய் விளங்குகிறார்கள். இறைவனை வணங்கி அன்பர்களும் அவ்வாறே
திருநீறு அணிந்து கொள்வது முறையாகும்.
‘கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே” – திருமூலர்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

                                                                            – (சம்பந்தர் தேவாரம்)

(ஆ) உருத்திராக்கம்
உருத்திராக்க மகிமை: உருத்திராக்கம் என்பது உருத்
திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்தசுரர்க
ளாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றித் தேவர்
கள் சிவபிரானிடம் முறையிட்ட போது சிவபிரானது
மூன்று கண்களினின்றும் சிந்தியமணியே உருத்திராக்
கம் என்பர். எனவேää ஆன்மாக்களிடம் இறைவன்
கொண்டுள்ள பெருங்கருணையைச் சதா நினைவூட்
டும் சாதனமாக உருத்திராக்கம் விளங்குகிறது. இதனை அணிதல் அவரது
திருவருட் பேற்றுக்கு அறிகுறி. பத்தினிப் பெண்களுக்குத் திருமாங்கலியம்
எங்ஙனம் புனிதமான ஆபரணமாக விளங்குகிறதோää அங்ஙனமே சிவனடி
யார்களுக்கு உருத்திராக்கம் போற்றி அணிய வேண்டிய புனிதச் சின்ன
மாகத் திகழ்கிறது. உண்மையடியார்களைச் சைவநெறியினின்றும் பிறழாமற்
காக்கும் இரட்சையாகவும் இது விளங்குகின்றது.
உருத்திராக்க வகைகள்: ஒரு முகம் தொடக்கம் பதினாறுமுகம் வரை
கொண்ட மணிகள் உண்டு. ஒவ்வொரு வகை மணிக்கும் ஒவ்வொரு அதி
தேவதை கூறப்படுகிறது. பொன்னிறம்ää கருநிறம்ää கபில நிறம் ஆகிய நிறங்
களில் உருத்திராக்க மணிகள் உள்ளன. ஒரே இன மணிகளாலான மாலை
களே அணியத்தக்கன.
உருத்திராக்க தாரணம்: சந்தியாவந்தனம்ää சிவபூசைää செபம்ää தேவார
திருவாசக பாராயணம்புராணபடனம்ää சிவாலய தரிசனம் போன்ற சாத
னைகளைச் செய்யும் காலங்களில் உருத்திராக்கம் தரித்தல் அவசியம்.
உறங்கும் போதும் மலசலங்கழிக்கும் போதும்ää ஆசௌச காலத்திலும்
தரிக்கலாகாது. ஆசாரமற்றோரும் தரிக்கலாகாது. சிவதீட்சை பெற்றவர்கள்
இதை அணிய வேண்டும். சிகைசிரம் காது மார்புதோள்கள் கைகள்
ஆகியவை உருத்திராக்கம் தரித்தற்குரிய இடங்கள். எத்தனை முகங்
கொண்ட மணிகளை எவ்வௌ; இடங்களில் அணியலாம் என்றும்ஒவ்வோர்
இடத்திலும் தரிக்கும் மாலை எந்த அளவினதாய் இருக்க வேண்டும் என்றும்
விதிகள் உண்டு. செபம் செய்ய உபயோகிக்கும் மாலை 108 அல்லது 54
மணிகளைக் கொண்டதாயிருக்கும் செபமாலை மணத்தை இறைவனிடம்
செலுத்தும் சிறந்த சாதனமாகும்.
நன்றி – ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு
எழுதப்பெற்ற சைவசமயம் (விவேகானந்த சபை வெளியீடு).
பாவங்களைக் கண்டிப்பதனால் உருத்திராக்க மாலை கண்டிகை
எனப் பெயர் பெற்றது. ‘உருத்திராக்க ஜாபாலம்” என்ற உபநிடதமும்
ஏனைய உயர்ந்த சாத்திரங்களும் உருத்திராக்கத்தின் உயர்வை உரைக்
கின்றன.

 

நீராடும் போது உருத்திராக்கத்தின் மீது பட்ட நீர் நம் உடம்பில்
படுவதால் மிகுந்த நன்மை உண்டாகும். உருத்திராக்கம் தலைää கழுத்துää
மார்பு  கை முதலிய அங்கங்களில் தரித்துக்கொள்ள வேண்டும். உருத்தி
ராக்கமணி தரியாமல் பூசை செய்வோர் பூசையின் பயனைப் பெறாது ஒழிவர்.
பூண்பதற்குக் கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்
காண்பதற்குக் கூசுமரன் கைத்து – சைவசமயநெறி
– திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
குங்குமம்: இலக்குமி திலகம் அணிந்த சிறப்பைச் ‘செய்யாள் புனைந்த
திலகம்” என்று பரிபாடல் பாடியுள்ளது. கூந்தலின் வகிட்டிலும்  நெற்றி யின்
மையத்திலும் குங்குமத் திலகமிடுவது மிகப் பழைய பண்பாடு ஆகும். அவை
இலக்குமி இருக்கும் இடங்களாகக் கருதப்படுகின்றது. ஒரு சுமங்கலியின்
மஞ்சள் அழகு முகம் மங்கலப் பொலிவுடன் திகழுவதற்குக் காரணம் அவள்
அணிந்த குங்கும திலகம் ஆகும்.
பராசக்தியின் அடையாளம் செந்நிறம். சக்தியின் செயல் ஆற்ற
லைக் குறிக்கும் இறைவனின் திருவருளாகிய பராசக்தியின் துணை
கொண்டு ஒவ்வொரு செயல்களையும் புரிகின்றோம் என்பதனையும் மங்
கலம் செல்வம் நன்மை முதலியவைகளையும் குங்குமம் குறிக்கின்றது. ஓர்
சாரார் கற்பின் மகிமைச் சின்னம் குங்குமம் என்றும் ஓர் சாரார் மாங்க லியச்
சின்னம் என்றும் கூறுவர். முதலில் சந்தனத்தால் திலகமிட்டதும் சிவனின்
நெற்றிக் கண்ணை நினைவூட்டும். பின் சந்தனத் திலகத்தின் மேல் சிறிய
குங்குமத்திலகம் இடுகிறோம். இது சிவத்தில் சக்தி அடக்கம் என்பதனை
வெளிப்படுத்தும். குங்குமத்தை மோதிர விரலால் தொட்டு புருவ மத்தியில்
வைக்க வேண்டும்.
சந்தனம்: நெற்றியின் நடுப்பகுதி இறைவன் உறையும் இடங்களில்
ஒன்றாகும். இறைவனைத் தியானிக்கும்போது அங்கு இயங்கும் முக்கிய
நரம்புகள் சூடாகின்றன. இச்சூட்டைத் தணிக்க நெற்றி நரம்போட்டத்தின்
மீது குளிர்ந்த சந்தனத்தைப் புனைகின்றனர். இது நறுமணங்கலந்த சந்தன
மரத்தில் இருந்து செய்யப்படுகின்றது. இறைவனின் நெற்றிக் கண்ணை
நினைவூட்டுவதற்கு அடியார்கள் சந்தனத்தை அணிகின்றார்கள்.

 

0 Comments

Leave A Reply