10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா[:]

[:ta]

சமூக சேவகி வேதவல்லி கந்தையா அவர்களின் சிலை திறப்பு விழா இன்று (10) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நீர்வேலி கந்தசுவாமி கோவில் வடக்கு வீதி, வேதவல்லி கந்தையா ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் இடம்பெற்றது..

இந்நிகழ்வு திருமதி. ருக்மணி ஆனந்தவேல் (தலைவி நீர்வேலி தெற்கு ஸ்ரீ முருகன் மாதர் சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கம்) தலைமையில் ஆரம்பமாகியது..

இச் சிலையினை முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் அவர்கள் திறந்து வைத்ததுடன், அமரர் வேதவல்லி கந்தையா அவர்களின் மகனான கந்தையா சுகுமாரன் அவர்களும் அவரது பாரியார் மீனலோசினி சுகுமாரன் அவர்களும் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இந்நிகழ்வில் வரவேற்பு நடனம் விருந்தினர்களின் உரைகள் , நடன கலைநிகழ்வுகளும், இடம்பெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

இச்சிலையினை கலைஞானி திரு.து.குமரநாதன் (BFA) அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

 

[:]

0 Comments

Leave A Reply