10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து நம்ம வாயிலேயே..[:]

[:ta]

108 வியாதிகளுக்கும் ஒரே மருந்து….அதுவே,
உமீழ் நீர், உயிர் நீர் !
சர்க்கரை நோய்க்கான எளிய,  இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே இருக்கு !
உமிழ் நீராக இருக்கு !
சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் என்ன சம்பந்தம் ?
உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகிறது !
உமிழ் நீர் எனும் இயற்கை மருந்தை, நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,
அதிக அளவு எடுத்துக் கொண்டனர் !

வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர் !
அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு உண்டனர் !
அதனால், அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !
கூடுதலாக உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !
நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !
உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் வராது !
‘தூண்டல், துலங்கல்’ என்ற விதியின்படி,
உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !
நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, வேலை பார்த்தனர் !
தற்காலத்தில், நாம்  மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை
பார்க்கிறோம் ! அந்த அளவிற்கு  நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு ‘வேலை’தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !
உணவை ரசித்து, ருசித்து, மென்று, உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு,
லபக் லபக ;என்று ,விழுங்குகிறோம் ! நாம் விழுங்கும் உணவில், உமிழ் நீர் கலக்க வாய்ப்பு
இல்லாததால் நாம் உண்ணும்  உணவுக்கு தேவையான இன்சுலின்,கணையத்தில் சுரக்காது !
எனவே, உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில்
தங்கிவிடுகிறது ! நாளடைவில், சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !
எனவே, நாம் சாப்பிடும்போது,உணவைமெதுவாகமென்று,ரசித்து,ருசித்து,சாப்பிட வேண்டும் !அப்போது,
இயற்கையாக உமிழ்நீர் சுரக்கும் !கூடுதலாக, உணவு செரிமானமும்சிறப்பாக நடக்கும் !
ஜீரணக் கோளாறு என்ற பேச்சுக்கே இடம் இல்லை ! நோயற்ற வாழ்வு வாழலாம் !
குடிநீர்,குளிர் பானம், கூழ், சூப், தேநீர் அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள்போகிறபடி,
மெதுவாக ரசித்து, ருசித்து, அனுப்ப வேண்டும் !
நீரிழிவு நோய் எனும் தற்கால கொடிய நோயை,  ‘உமிழ்நீர்’ எனும் அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து, ஒழிப்போம் !
‘ நொறுங்கத் தின்றால், நூறு வயசு…’ என்று, நம் முன்னோர்கள் சொன்னார்கள் !
ஏநப ஃ ழேn – ஏநப எந்த வகை உணவானாலும், கூழ், தேநீர், சூப் போன்ற எந்த உணவானாலும்…
1. பசித்த பின் சாப்பிட வேண்டும் !
2. ரசித்து  சாப்பிட வேண்டும் !
3. உமிழ் நீர் சுரக்கிறபடி மென்று, ருசித்து,சாப்பிட வேண்டும் !
108 வியாதிகளுக்கும்இதுவேமருந்தென்றால்,மிகை அல்ல !

[:]

0 Comments

Leave A Reply