10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சிரிப்புடன் சிந்திக்கவைத்த பாலா மாஸ்டர்…………….

1479643_818210374861429_421218855_nஇவர் நீர்வேலி முதலியார் அத்தியார் அருணாசலம்,தங்கம் அத்தியார் தம்பதிகளின் புத்திரனாக ஐப்பசி 11,1920ம் ஆண்டு நீர்வேலியில் பிறந்தார்.தனது ஆரம்பக்கல்வியை நீர்வேலி சிவப்பிரகாச வித்தியாசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணம் சென்பற்றிஸ் கல்லூரியிலும்,கொழும்பு சென்தோமஸ் கல்லூரியிலும் கற்றார்.மேற்படிப்பை இந்தியாவில் கற்றுக்கொண்டிருந்தவேலையில் அவரது தாயார் இறந்ததன் காரணமாக நாடு திரும்பினார். பின்னர் தனது தந்தையாரின் பாடசாலையான அத்தியார் இந்து கல்லூரியில் ஆசிரியராகக்கடமையாற்றினார். த.ந.பஞ்சாச்சரம் மாஸ்டர் இவருடைய முதல் மாணாக்கன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இவர் மீது பஞ்சாச்சரம் மாஸ்டர் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கின்றார் என்பது பெருமைக்குரியது. இவர் தந்தையாரின் சமாதிக்கு தினமும் காலையில் பூ வைத்து வணங்க்கிய பின்னரே வீடு வந்து தேநீர் அருந்திவிட்டு டெய்லி நியூஸ் புதினப்பத்திரிகை வாசிப்பார். பின்பு காலை உணவு முடித்துக்கொண்டு பாடசாலைக்கு சென்று தனது கடமையில் ஈடுபடுவார். மேலும் மாணவர்களை நன்கு கவரக் கூடிய சுபாவ முடையவர். இன்முகத்துடன், மாணவர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் கூடிய விதத்தில் கதைகள் பல சொல்லிப்பாடங்க்களில் ஆர்வமூட்டிக்கற்பிப்பதில் வல்லவர். இவர் ஆங்கிலம், சரித்திரம், குடியியல், புவியியல்,சுழல் கற்பித்தார். காலபோக்கில் சரித்திரம், குடியியல், புவியியல் ஒன்று சேர்க்கப்பட்டு சமுககல்வி என்று மாற்றமடைந்தது. மேற்குறிப்பிட்ட பாடங்களில் மிகுந்த அறிவு உடையவர். ஒவ்வொரு கண்டங்களைப்பற்றியும், வசிப்பவர்கள் பற்றியும், அவர்களது உணவு, உடை, பழக்கவழக்கம், தொழில், காலநிலை , குடிசனவிபரம், சுற்றாடல், சுழல், பற்றிய விபரங்களை மாணவர்களின் மனதில் படியக்கூடிய முறையில் மிக சிறப்பாகக்கூறுவார். இவரிடம் கற்ற மாணவர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்து அன்று பாலா மாஸ்டர் சொன்ன கதைகளை இன்று உண்மையாக கண்டு வியப்படைந்து இப்படியெல்லாம் அந்த நாளிலே பாலா மாஸ்டர் எங்களுக்கு கூறியுள்ளார் என்று அவரது அறிவுத்திறமையை பாராட்டுகின்றார்கள். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் கற்பிக்ச் செல்லும் போது ” டிங் டொங் பெல்” என்று பாடிக்கொண்டு செல்வார். பாலா மாஸ்ரரின் பாட்டு சத்தம் கேட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் அவரது வருகையைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.முதலில் குட் மோர்னிங் என்று உரத்த குரல் கொடுப்பாரர். சகல மாணவர்களும் எழுந்து குட் மோர்னிங் சொல்லிவிட்டு இன் முகத்துடன் அமர்ந்து பாடம் கற்பார்கள். கிராமத்தில் நடை பெறும் கொண்டாட்டங்களுக்கு சென்றால் பாலா மாஸ்டர்ரை சுற்றி கிராமத்து மக்கள் கூடுவார்கள். ஏனென்றால் அவரிடமிருந்து நல்ல தகவல்களை அறிவதற்காகவும், அவரோடு உரையாடி மகிழ் வதற்காக்கவுமே எனலாம். நன்றி.

எழுத்தாக்கம்.

Bala Arunasalam (canada)

நன்றி

4 Comments

  1. He was a wonderful teacher and very respectable person in our society

  2. He was a wonderful man. His wife was our teacher when we was in grade 1. His children are also very wonderful children. we wish them good life. His father built for us big school many many old boys and girls live allover the world. We thanks for his family.

  3. “Old is Gold”

    Thank you for sharing the info.

  4. I still remember the double pleasance in his face and kind words from his mouth. This short gentleman never showed harshness in his words and deeds. In his class, we enjoyed a friendly atmosphere. He did not dominate the class, instead, he shared the class with us. It was really a joyful experience.

Leave A Reply