10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சிவபெருமான் 28 சைவ ஆகமங்களை அருளிச்செய்துள்ளார்

13728981_564379867098582_27ஆலயம் அமைத்தல், தெய்வப்பிரதிஷ்டை, கும்பாபிசேகம், நைமிந்திக – காமிய பூஜைகள் ஆகியன எவ்வாறு செய்யவேண்டும் என்பதனை ஆன்மாக்கள் அறிவதற்காகவே, சிவபெருமான் இருபத்தெட்டு சைவ ஆகமங்களை அருளிச்செய்துள்ளார். இவ்வாகமங்கள் சிவாச்சாரியார்களைக் கொண்டு அனைத்து சிவாலயங்களிலும் காலங்காலமாக ஆன்றோர்களால் அனுஷ்டிக்கப்பெற்று வருகின்றன. பழங்கால சரித்திரங்களிலும், சமயப்பற்றோடு நமது சமய சாத்திரங்களை அறிந்தவர்கள் மட்டுமே இந்த உண்மையை அறிவார்கள். மேலும், காமிகாகமம் – தந்திராவதார படலத்தில் 104 வது சுலோகம் முதல் 127 வது சுலோகம் வரை ஆலயங்களில் பிரதிஷ்டை – கும்பாபிசேகம் ஆகியன எந்த அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அந்த சுலோகங்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சிந்திப்போம்.


௧) கர்ஷனாதி ப்ரதிஷ்டாந்தம் மூலேனைவ ஸமாசரேத்
க்ருதம் சேத் உபயேதேன கர்த்தா பர்த்தா விநச்யதி
இதன் பொருள்: ஆலயம் அமைத்தல் ப்ரதிஷ்டை – கும்பாபிசேகம் செய்தல் ஆகியன மூல ஆகமங்களின் அடிப்படையிலேயே (ஆகம முறைப்படி!) செய்தல் வேண்டும். உபஆகமங்களின் அடிப்படையிலோ, பத்ததிகள் அடிப்படையிலோ கூட செய்யக்கூடாது. அப்படிச்செய்தால் அக்கும்பாபிசேகத்திற்குச் செலவு செய்கின்ற யஜமானர்களும், பக்தர்களும் அழிவர். (இவ்விடத்து வடமொழியில் கூறப்பட்டுள்ள உபஆகமங்கள் பத்ததிகளே கூட கூறப்படாத பொழுது தமிழ்முறைப்படி செய்தால் அதன் பலன் என்ன என்பதை உணர்தல் அவசியம்)


௨) கேவலம் யஜனம் ப்ரோக்தம் உபபேதைர் விசேஷத:
ப்ரதிஷ்டாத்யம் துமூலைஸ்சேத் அஷ்டாவிம்சதிபிர்வரம்
இதன் பொருள் : ஆலயங்களில் நடைபெறுகின்ற நித்யநைமித்திக காம்ய பூஜைகள் – ஹோமங்கள் ஆகியன மட்டுமே உபஆகமங்கள் பத்ததிகள் இவைகள் அடிப்படையாகக்கொண்டு (பத்ததி – வழிகாட்டு நூல்) செய்யலாம். ஆனால், ப்ரதிஷ்டை முதலானவற்றை மூலநூல்களாகிய இருபத்தியெட்டு சைவ ஆகமங்களின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும்.


௩) யேன தந்த்ரேன ஆரப்தம் கர்ணாதி அர்ச்சனாந்தகம்
தேன ஸவம்ப்ரகர்த்கவ்யம் நகுர்யாத் அந்ய – தந்த்ரத:
இதன் பொருள் : ஒரு திருக்கோயில் ப்ரதிஷ்டை முதல் நித்ய பூஜைகள் வரையிலான வழிபாடுகள் எந்த ஆகமத்தின் அடிப்படையில் துவக்கப்பட்டதோ அந்த ஆகமத்தின் அடிப்படையில்தான் தொடர்ந்துவரும் பிற்காலங்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுதல் வேண்டும். பிறகு மற்றைய ஆகமங்களினால் கூட செய்யக்கூடாது.


௪) சிவசித்தாந்த தந்த்ரேண ப்ராரப்தம் கர்ஷணாதிகம்
நகுர்யாத் அந்ய சாஸ்த்ரேண குர்யாத் சேத் தந்த்ரஸங்கர:
இதன் பொருள் : சைவ சித்தாந்தமாகிய ஆகமங்களின் அடிப்படையில்தான் ப்ரதிஷ்டை முதலானவைகள் துவக்கப்பட வேண்டும். மற்றைய சாத்திரங்களின் அடிப்படையில் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் “சாத்திரகலப்பு தோஷம்” என்ற தவறு ஏற்படுகிறது. சாத்திரகலப்பு தோஷம் ஏற்பட்டால் நாட்டை ஆள்பவர்களும் – குடிமக்களும் அழிவர்.
எனவே விளம்பரத்திற்காகவும் தமது சுய செல்வாக்கு உயர்வதற்காகவும் சில நபர்கள் செய்துவரும் சமய-சாத்திர விரோதச் செயல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் மேற்கூறிய தீய பலன்களினால் நாம் எல்லோரும் துன்பப்பட நேரிடும்

0 Comments

Leave A Reply