சி.சி .தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லத் தடகள திறனாய்வு
2013 ஆம் ஆண்டுக்கான சி.சி .தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்லத் தடகள திறனாய்வு 22.02.2013 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முன்றலில் பாடசாலை முதல்வர் திரு.இ.பசுபதீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் பிரதமவிருந்தினராக திரு.தி.மயூரகிரிசர்மா(பழைய மாணவர் முகாமைத்துவ உதவியாளர் மாவட்ட நீதிமன்றம் பருத்தித்துறை) அவர்களும் பிரதம விருந்தினராக திரு.ச.அருந்தவரத்தினம் (ஓய்வு பெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் யாழ் வலயம்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்த விளையாட்டு நிகழ்விற்கு பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments