10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சீயக்காடு இந்து மயானத்தில் ஆலமரம் நாட்டப்பட்டுள்ளது.[:]

[:ta]

நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் மக்கள் வெயில் காலத்தில் நிற்பதற்காக வளர்ந்த ஆலமரம் ஒன்றினை நீர்வேலி கரந்தனைச் சேர்ந்த திரு.சின்னத்தம்பி மகாலிங்கம் அவர்கள் தனது சொந்தச் செலவில் (ஏறத்தாழ 20 000 ரூபா ) நாட்டியுள்ளார். முன்னைய காலத்தில் ஏராளமான மரங்கள் அங்கு நடப்பட்டன. ஆடு மாடுகள் திருடர்கள் தொல்லையால் அனைத்தும் அழிவடைந்தன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆலமரம் ஒன்றினை வீட்டில் வைத்தே றம் ஒன்றில் மிக பெரிதாக வளர்த்து உழவு இயந்திரத்தில் கொண்டு சென்று ஆழமான கிடங்கு எடுத்து செம்பாட்டு மண்  இட்டு (2 உழவு இயந்திரங்கள்) அதன்பின்னர் மரம்  நாட்டப்பட்டு சுற்றிவர கம்பிக்கட்டை அடித்து  முட்கம்பி  வேலியும் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மேற்படி திரு.சின்னத்தம்பி மகாலிங்கம் அவர்களின் உயர்செயலை பாராட்டுகின்றோம்.

(நீர்வேலி இணையம்)[:]

0 Comments

Leave A Reply