10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சீயக்காடு இந்துமயானத்தில் மக்கள் இளைப்பாறும் மண்டபம்

IMG_0162நீர்வேலி சீயக்காடு  இந்து  மயானத்தில்  மக்கள்  இளைப்பாறும் மண்டபமானது  ஆறு  இலட்சம்  ரூபா  செலவில்  கட்டப்பட்டு வருகிறது.  நீர்வேலி  வடக்கில்  வசித்து அமரத்துவம்  அடைந்த ஆயுள்வேத வைத்தியர்  செல்லப்பா  அவர்களின்  பிள்ளைகள்  தமது குடும்பத்தவர்கள்  ஞாபகார்த்தமாக  இளைப்பாறும்  மண்டபத்தினை தமது சொந்தச்செலவில்  கட்டிவருகின்றனர்.  இதற்கு முன்னர் காணப்பட்ட  மண்டபம்  இயற்கையினால் பழுதடைந்து அழிந்து இருந்தது. மரண ஊர்வலத்தில் வரும் மக்கள் இளைப்பாறுவதற்கு மரநிழல் கூடகிடைக்காது பெரும் கஸ்ரத்தினை அனுபவித்து வந்தனர்.  தற்போது மக்களின் தேவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. வைத்தியர்  செல்லப்பா அவர்களுடைய குடும்பத்தவர்களின் இந்த உன்னதமான செயலுக்காக அவர்களை நீர்வேலி இணையம் பாராட்டுகிறது.

IMG_0160

IMG_0162

0 Comments

Leave A Reply