10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சீ.சீ.த.க பாடசாலைக்கு புதிய அதிபர் கடமையேற்பு

நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலைக்கு புதிய அதிபராக திரு.சி.ரதீஸ்குமார் (HNDA , PGDE, SLPS III )அவர்கள் 02.09.2019 திங்கட்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.இவர் நீர்வேலி வடக்கில் வதிபவரும் நீர்வேலி வடக்கு முத்துதம்பி(லொறி) அவர்களின் மருமகனும்  ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும் ஆவார். கோப்பாய் பிரதேசத்தில் 150 வருடங்களிற்கு மேற்பட்ட பாடசாலைகளில் முதன்மையானதாக நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலை காணப்படுகின்றது. அதன் பாரம்பரியங்களை மற்றும் முக்கியத்துவத்தினை எமது சமூகத்தில் நிலைநிறுத்த அனைவரும் புதிய அதிபருடன் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். எமது இணையம் சார்பாக புதிய அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆற்றுக உயர்ந்த பணி.

0 Comments

Leave A Reply