10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சீ.சீ.த.க பாடசாலைக்கு மைதானம் -கிடைக்குமா ?[:]

[:ta]

சீ.சீ.த.க பாடசாலை நிரந்தர மைதானம் இன்றி மிக மிக நீண்டகாலமாக இயங்கி வருகிறது. இதனால் பாடசாலை பல அசௌகரியங்களை சந்தித்துள்ளது. தற்போதுள்ள அதிபர் அவர்களினதும்  பழைய மாணவர்களினதும் முயற்சியினால்     காணி ஒன்றினை வாங்குவது என்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.    பாடசாலைக்கு அருகில் உள்ள அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான காணியினை மாற்றுக்காணி வழங்கலுடன் வழங்க நிர்வாக சபை முன்வந்துள்ளது. மேற்குறித்த மாற்றுக் காணியானது ஆலயத்திற்கு மிக அருகில் காணப்பட்வேண்டும் என்பது நிர்வாக சபையின் முடிவு. அக்காணியாது ஆறரை இலட்சம் ரூபாய் என கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மைதான கொள்வனவிற்காக வங்கியில் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு 75 000 ரூபா நிதி சேர்க்கப்பட்டு வைப்பிலிடப்பட்டுள்ளது. இரண்டு பழைய மாணவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா தருவதாக ஒப்புக் கொண்டிருந்தனர். அதில் கனடாவில் உள்ள திரு லிங்கம் என்பவர் கடந்த வாரம் ஒரு இலட்சம் ரூபாவினை செலுத்திவிட்டார். அவுஸ்ரேலியாவில் உள்ள பழையமாணவரும் விரைவில் ஒரு இல்டசத்தினை தருவதாக தெரிவித்துள்ளார். மீதிப்பணத்திற்கு இன்னும் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. எனவே சீ.சீ.த.க பாடசாலையின் பழைய மாணவர்களே அனைவரும் இணைந்தால்  மைதானம் சாத்தியமாகும். (vp)

 [:]

0 Comments