நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் இந்திய துணைத்துாதுவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்
நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையின் 135 ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 12.11.2014 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் திரு.ரவீந்திரநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதமவிருந்தினராக இந்திய துணைத்துாதுவர் திரு.S.தட்சணாமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு. கோ.வரதராஜமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.பொ.இராசலிங்கம் (பழைய மாணவர்- பவானி களஞ்சியம் நீர்வேலி) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேற்படி விழாவிற்கு பழைய மாணவர்களையும் நலன்விரும்பிகளையும் பெற்றோர்களையும் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments