10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]சீ.சீ.த.க பாடசாலை அதிபர் மாற்றம் பெற்று செல்கின்றார்.[:]

[:ta]

நீர்வேலி வடக்கு சீ.சீ.த.க பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவீந்திரநாதன் அவர்கள் 06.05.2019 திங்கட்கிழமை முதல் நல்லூர்  ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச்  சென்றுள்ளார். இவர் சீ.சீ.த.க பாடசாலையில் நான்கு வருடத்திற்கு மேலாக மிகச்சிறந்த சேவையினை ஆற்றி மாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். பாடசாலையை இவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து தற்காலம் வரை மிக உயரிய சேவையினை பாடசாலைக்கு ஆற்றிச் சென்றுள்ளார். மிக்குறைந்த மாணவர்களை வைத்துக்கொண்டு பாடசாலையில் பாரிய வேலைத்திட்டங்களையும் கல்வி அபிவிருத்திகளையும் செய்து உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றுள்ளார். பாடசாலைக்கு மிகச்சவாலாக இருந்த விளையாட்டு மைதானத்திற்கும் சுமார் 5இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவினை தனது சொந்த முயற்சியினால் நீர்வேலிக்கு உள்ளேயும் வெளியேயும் சேர்த்து  மைதானப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார். அவ் மைதானத்தினை வடமாகாண முன்னாள் ஆளுநர் அவர்களைக் கொண்டு திறப்புவிழாவினை செய்திருந்தார். அத்துடன் பாடசாலைக்கு பாண்ட வாத்தியங்கள் அதற்கான ஆடைகள் வகுப்பறைக்கட்டிடங்கள் மலசலகூடங்கள் பாடசாலையின் பிரதான மண்டபம் கணனிகள் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் தேடி பாடசாலைக்கு வளம் சேர்த்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது நட்பின் பால் பல வர்ததகர்கள் இந்திய துணைத்தூதுவர் என அனைவரையும் பாடசாலைக்கு வரவழைத்து கௌரவித்து அவர்களிட்ம் பாடசாலைக்குறைகளை சொல்லி உதவி பெற்று பாடசாலையின் பல தேவைகளை நிறைவேற்றியுள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என அனைவருடனும் நல்லுறவினைப்பேணி பாடசாலையினை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற அதிபர் திரு.தி.ரவீந்திரநாதன் அவர்களை பாடலைச்சமூகம் சார்பாக பாராட்டுவதுடன் எமது நீர்வேலி சார்பாக உளங்கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது அரசகேசரிவிநாயகன் உங்கள் சேவைகளுக்காக  உங்களுக்கு நல்வாழ்வளிப்பார். வாழ்க வளமுடன்.

 [:]

0 Comments

Leave A Reply