10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

சுடர் கல்வி நிறுவனத்தின் பரிசளிப்பு விழா

நீர்வேலி சுடர் கல்வி நிறுவனத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவுப் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 29.10.2016 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நிறுவன வளாகத்தில் இடம்பெறவுள்ளது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியரும் நிறுவன இயக்குநருமாகிய நா.சசிகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் சிறப்பு விருந்தினர்களாக நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை அதிபர் சி.தர்மரட்ணம், லெபறா அமைப்பின் இணைப்பாளர் பே. றொனி  ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் ஆசியுரைகளை நீர்வேலி காளி அம்பாள் தேவஸ்தானப் பிரதம குரு சிவஸ்ரீ ப.சண்முகராஜக் குருக்கள்,  நீர்வேலி  பரலோகமாதா கோவில் பங்குத் தந்தை  அருட்பணி ம.பத்திநாதன் ஆகியோர் நிகழ்த்துவர்.

 

0 Comments