10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]சுவிஸில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் மலர் வெளியீடு[:]

[:ta]

சுவிஸில் வசிக்கும்  நீர்வேலி கரந்தன் வீதியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன்-தர்மபாலா அவர்களின் துணைவியார் தர்மபாலா சிவாஜினி அவர்களால் எழுதிய சிறுவர் மலர் நூல் 12.02.2017  ஞாயிற்றுக்கிழமை  பி.ப 2.00 மணியளவில்  சுவிஸ் நாட்டில்  சூரிச் – லைம்பாகில் சிறப்பாக இடம்பெற்றது.இந்த விழாவில் தமிழ் வித்தியாலய அதிபர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நண்பர்கள், சுவிஸ் தமிழர் நட்புறவுச்சங்க தலைவர் ஆசிரியர்கள் அங்கத்தவர்கள் இளையோர் அமைப்பினர் ஆகியோர் பங்கு பற்றி சிறப்பித்துள்ளனர்.இந்நிகழ்வு பொன்னம்பலம் உதயகுமார் சிவந்தினி, திரு சுந்தரேஸ்வரன் தர்மபாலா, சுந்தரேஸ்வரன் ஜெயந்தன் சிவயோகினி ஆகியோரினால் விளக்கேற்றப்பட்டு அகவணக்கத்துடன் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் சுவிஸ் ஓல்டன் அம்மன் ஆலய பிரதமகுரு சுந்தரேஸ்வரசர்மா குருக்களால் ஆசியுரை வழங்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சுவிஸ் ஓல்டன் அம்மன் ஆலய நிர்வாகத் தலைவர் நடராசலிங்கத்தினால் சிறப்புரை இடம்பெற்றது.

சூரிச்மலர் தமிழ் கல்வி நிலையம், சூரிச் திருக்கோணேஸ்வர நடனாலயம், சுவிஸ் தமிழர் நட்புறவுச்சங்கம் இணைந்து கலைநிகழ்ச்சிகளை வழங்கி வைத்துள்ளது.அத்துடன், சிறுவர் மலர் நூல் வெளியீடு இடம்பெற்றதுடன். இந்நிகழ்வில் சுவிஸ் ஓல்டன் அம்மன் ஆலய பிரதமகுருசுந்தரேஸ்வரசர்மா குருக்கள், சூரிச் தமிழ்வித்தியாலய அதிபரும் இவ்விழாவின் பிரதம அதிதியாக வருகைதந்தவரான அன்ரன் றட்ணா,சூரிச் தமிழ் வித்தியாலய ஆசிரியர் காசிநாதர் மகேஸ்வரன், சூரிச் தமிழ் வித்தியாலய ஆசிரியர் பொன் பற்றிக், சுவிஸ் லுர்சேன் தமிழ்மன்ற ஆசிரியர் புஸ்பராஜா அசோக், ஊடகவியாளர் சண்தவராஜா, சுவிஸ் சேகர் தமிழ்ப்பதிப்பக உரிமையாளர் .சேகர், சுவிஸ் தமிழர் நட்புறவுச்சங்கத்தின் தலைவர் கனகநாயகம் சற்குணமோகன், சங்கப் பொருளாளர் கந்தசாமி கௌரிதாசன், சங்கச் செயலாளர் ஆசிரியர் தெய்வேந்திரம் பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை தனபாலசிங்கம், பொன்னம்பலம் உதயகுமார் ஆகியோரினால் நூல் தொடர்பான உரைகள் இடம்பெற்று நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் உரையாற்றும் போது சிறுவர் மலர் என்ற நூல் குழந்தைகளுக்கான மிகவும் சிறந்த நூல் எனவும் புலம்பெயர் நாட்டில் மழலையர் நிலை, சிறுவர் நிலை, ஆண்டு 1 இற்கான செயல் நூலாக இந்நூல் மிகவும் இலகுவான முறையில் ஆக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந் நூலினை ஆக்கிய நூலாசிரியர் தர்மபாலா சிவாஜினி மிகவும் மாறுபட்ட விதத்தில் இந்நாட்டுக்கேற்ற கல்வி முறைப்படி மிக எளிய முறையில் ஆரம்பநிலையை சரிவரக்கற்கும் வகையிலும் மாணவர்கள் விருப்புடன் கற்கும் வகையிலும் இந் நாட்டுச் சூழல் கொண்ட காட்சிகள் ,வர்ணப்படங்களுடன் விளக்கத்துடன் பல பயிற்சிகள் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தர்மபாலா சிவாஜினி புலம்பெயர் தமிழ் சிறார்களுக்காக சிறுவர் மலர் என்ற இந்த நூலினை படைத்து அர்ப்பணித்துள்ளார்.

இவரினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இரு நூல்களான ஆண்டு 4,5 இற்கான இலக்கணத்தொகுப்பு, புணரியல் தொகுதி மிகவும் வரவேற்கத்தக்கது எனவும் இவரின் மூன்றாவது வெளியீடான சிறுவர் நூல் என இவரின் ஆக்கங்கள் தொடர்ந்து புதிய முறையில் இன்னும் பல நூல்கள் ஆக்கி தமிழ்மொழிக்கு பணிபுரிய வேண்டும் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தர்மபாலா சிவாஜினியின் உரை இடம்பெற்றது. இவ்வுரையில் தான் கற்ற கல்வியை விட தமிழ்ச்சிறார்களுக்கு கற்பித்தலினால் பெறப்பட்ட அனுபவக் கல்வியிலேயே புலம்பெயர் நாட்டில் உள்ள மாணவர்களுக்கான இலகுதமிழ் நூல்கள் ஆக்குவதற்கு பெரும் துணையாக இருந்தது.

சிறுவர் மலர் என்ற இந்நூல் சிறப்பாக அமைய ஆசிரியர்கள் காசிநாதர் மகேஸ்வரன் ஞானாம்பிகை, ஆசிரியர் இராஜகுமார் சசிகலா ,சுவிஸ்சேகர் தமிழ் பதிப்பக உரிமையாளரும் ஆவார்கள் என தனது உரையில் குறிப்பிட்டுக் கூறினார்.

[:]

0 Comments

Leave A Reply