10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

செல்லக் கதிர்காமமுருகன் கோவிலுக்கு அழகிய சிற்பவேலைபாடுகள்கொண்ட அழகிய சித்திரத்தேர்

11022629_435971846579563_7991803337348143450_n

நீர்வேலி அருள்மிகு செல்லக் கதிர்காமமுருகன் கோவிலுக்கு அழகிய சிற்பவேலைபாடுகள்கொண்ட அழகிய சித்திரத்தேர் ஒன்று செய்யும் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருகின்றது .இன்னும் ஓர் கிழமைகளில் இந்த ரத வேலைகள் நிறைவுறம்.முருகப்பெருமான் அருளாசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணி ஆலய தேர்த்திருவிழா உபயகாரர் ”சிவதர்மவள்ளல் ”திருவாளர் கி.நித்தியானந்தன் அவர்களின் ஞாபகமாக அவரது மனைவி திருமதி ராகினி நித்தியானந்தன் அவர்களும் பிள்ளைகளும் [ஆலய தேர்த்திருவிழா உபயகாரர்] இந்த பெரும் திருப்பணி வேலைக்கு தமது நிதியுதவியுடன் இந்த அழகிய ரதத்தினை உருவாக்கியுள்ளனர் ரதம் செய்வது என்பது பெரும் திருப்பணியாகும் இத்திருப்பணியினை தனிய ஒருகுடும்பம் செய்வது என்பது பாராட்டுக்குரிய விடயமாகும் அந்தவகையில் ராகினி அம்மையார் அவர்களின் இந்த பணிகள் கண்டு நாம் எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம் .

செல்லக்கதிர்காமமுருகப்பெருமானுக்கு முதன்முதலில் ஓர் கட்டுத்தேரினை உருவாக்கி செய்வித்தவர் திருவாளர் கி .நித்தியானந்தன் அவர்கள் ஆவார் .மகோற்சவ காலத்தில் இந்த கட்டுத்தேரிலே ஆறுமுகப்பெருமான் ஆனந்தமாய் வீற்றிருந்து வீதி உலா வந்தருள்வார்.இவ்வாறு தேர்த்திருவிழாவை சிறப்பாக செய்து வந்த இவர்மனதில் எம்பெருமானுக்கு அழகிய சித்திரத்தேர் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இவ்வாறு இருக்கையில் திருவாளர் கி.நித்தியானந்தன் அவர்கள் தான் கொண்ட பணிகளை தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் நிறைவேற்றுவார்கள் என்ற மனநிறைவோடு 14.05.2009 அன்று இப்பூவுலகை விட்டு விடைபெற்று எம்பெருமான் திருவடியை சேர்ந்தார் .அவருடைய அந்த கனவு நிறைவேறி அவரின் ஞாபகமாக அழகிய சித்திரத்தேர் திகழ்கின்றது .

செல்லக்கதிர்காம சுவாமியின் அருளாசியுடன் இந்த ரதம் செய்யும் திருப்பணியினை வெளியூரில் தற்போது வாழ்ந்துவரும் ராகினி அம்மையார் அவர்கள் முன்னெடுத்து பிள்ளைகளும் தானும் சேர்ந்து தங்களது தனிப்பட்ட நிதி பங்களிப்புடன் இந்த சித்திரத்தேரினை செய்வித்துள்ளனர் .கலாபூசணம் செ.விஸ்வலிங்கம் ஸ்தபதி அவர்களின் சிற்பாலயத்தில் இந்த சித்திரத்தேர் வேலைகள் இடம்பெறுகின்றமையும் செ.விஸ்வலிங்கம் ஸ்தபதி அவர்களும் அவரது பணியாளர்களும் மிகவும் அழகான சிற்பவேலைகள் செய்து அழகிய தேராக உருவாக்கியுள்ளனர் .ராகினி அம்மையார் இந்த பெரும் திருப்பணியினை தனது தந்தையார் ”இறைபணிச்செல்வர்” திருவாளர் .சி .நடனசிவராசா [நடராஜா] அவர்கள் மூலம் நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .இந்த அழகிய சித்திரத்தேர் இவ் வருட[2015] மகோற்சவத்தின்போது வெள்ளோட்டம் காணுவதுடன் சண்முகப்பெருமான் ஆனந்தமாய் தேரேறி வந்தருள்வார்.

11173398_435972746579473_8930754454533557048_n

(Thankyou-Colombo Hindu)

.11175014_435972013246213_224873731630287379_n11156117_435972519912829_5514801736760384097_n11059642_435972423246172_9161317907300917942_n10689443_435973486579399_7825881894904110923_n10407203_435973193246095_765664331271806144_n20119_435973049912776_4594595559854835917_n11022629_435971846579563_7991803337348143450_n11140240_435971969912884_5088696589646053621_n11027124_435971893246225_1827732451123592653_n11022629_435971846579563_7991803337348143450_n

0 Comments

Leave A Reply