10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

சைவ ஒழுக்கங்கள் (1.வாழ்வியல்-1.2சைவ ஒழுக்கங்கள்)

bbbbதிருநீறு அணிதல் 

சைவ ஒழுக்கங்களுள் இன்றியமையாதது திருநீறுஅணிதல். அதை அணியும் போது சிவபிரானை நினைத்தலும் திருவைந்தெழுத்தை உச்சரித்தலும் அவசியமானவை.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே”   (தேவாரம்)

திருவைந்தெழுத்து

திருவைத்தெழுத்தை ஆறுதலாயும் அமைதியாகவும் அன்போடுஒவ்வொரு நாளும் ஓதுதல்.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே” (தேவாரம்)

தேவாரம் அல்லது திருவாசகம் ஒவ்வொருநாளும் ஓதுதல் திருவாசகப் புத்தகம் ஒன்று வீட்டில் வைத்துக் கொள்ளுதல்.

தியானம்

சிவபெருமான் உமாதேவியார் விநாயகர் வைரவர் வீரபத்திரர்சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளுள் ஒன்றிலே விசேடபற்றுவைத்து நாள்தோறும் தியானித்துத் தோத்திரம் சொல்லி வணங்குதல்சிவத் தியானத்துக்கு நடராச வடிவம் பொருத்தமானது.

“தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமாம்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோத முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.” (உண்மை விளக்கம்)

அதிலுள்ள ஒவ்வொன்றும் அரிய உண்மைகளை விளக்கி. நம்மைநல் வழியிற் செலுத்தத்தக்கது. ஒரு திருக்கரத்திலேயுள்ள துடியானதுபடைத் தலாகிய தொழிலைக் குறிக்கின்றது. கடவுள் நம்மைப் படைத்ததுநாம் மெய்ப் பொருளாகிய அவரை அடைந்து பேரானந்தத்தைப் பெறுதற்காக என்பதை அது காட்டத்தக்கது. ஆதலால் அதைக் காணும் போது

‘உற்றாரை யான்வேண்டே னூர்வேண்டேன்
பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவு
மினியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன்
குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக
வேண்டுவனே.” (திருவாசகம்)

என்று எண்ணலாம்.

அவருடைய வேறொரு திருக்கரம் அபயகரம் எனப்படும். அது ‘நாம் உன்னைக் காப்போம்; ஒன்றுக்கும் பயப்படாதே” எனும் குறிப்புடையது

‘மண்பா தலம்புக்கு மால்கடல்
மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்
வீழினு மஞ்சல்நெஞ்சே
திண்பா னமக்கொன்று கண்டோம்
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலிணையே.” (தேவாரம்)

எனும் மனவுறுதியை ஆக்கத்தக்கது. திருவடிகளுள் ஒன்று முயலகனை
மிதித்து ஆணவத்தை நசித்தலைக் குறிக்கும். அதை நாம் காணும் போது
அவருடைய திருவடித் துணையைக் கொண்டு ஆணவத்தாலுண்டாகும்
ஆசைகளை அடக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகும். மற்றத்
திருவடி அவர் நம்மைத் தம்மோடு சேர்த்துத் தம்மைப்போல் ஆக்குவார்
என்பதைக் குறிக்கும். இது

“புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையு
மினியோ ரிடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்றாள் வணங்கிநாம்
நிகழு மடியார் முன்சென்று
நெஞ்ச முருகி நிற்போமே.” (திருவாசகம்)

எனும் மனப்பான்மையை ஆக்கத்தக்கது.

 

திருநாட்கள்

சிவனடியார்களது திருநாட்களைக் கொண்டாடி அவர்களுடைய
திருச்சரித்திரங்களைச் சொல்லி அல்லது கேட்டு அவர்களை வழிபடல்.

தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே யென்னாத இயற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.” (தேவாரம்)

 

கோயில் வழிபாடு

நாள்தோறும் அல்லது வாரந்தோறும் கோயிலுக்குப் போதல்.

சைவ சமய முறைப்படி நடத்தல்

சைவ சமய முறைப்படி எப்போதும் நடக்கமாட்டாதவர்கள் வாரத்
திற்கொரு முறையேனும் பட்சத்திற்கு ஒரு முறையேனும் மாசத்திற் கொரு
முறையேனும் முறைப்படி தவறாது நடத்தல். இப்படி நடத்தல் விரத
நாட்களிற் பொருந்தும். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் சைவர்
யாவரும் அனுட்டிக்கத்தக்கது.

சிவனடியார்

நாம் ஒருவரைக் காணும்போது அவர் சிவபிரானது திருவடிகளைச்
சேருதற்கு யாத்திரை செய்பவர் என்ற எண்ணமே நமது மனத்திலே முதல்
உண்டாதல். அவர் நம்மிடம் வந்த தொழிற்றொடர்பு இரண்டாவதாக எண்
ணத்தக்கது.

திருக்கோயி லில்லாத திருவிலூருந்
திருவெண் ணீறணியாத திருவிலூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பலதளி களில்லாவூரும்
விருப்போடு வெண்சங்க மூதாவூரும்
விதானமும் வெண்கொடியு மில்லாவூரும்
அருப்போடு மலர்பறித்திட்டு ண்ணாவூரும்
அவையெல்லா மூரல்ல அடவிகாடே.”
– அப்பர் –

பாடற்கினிய வாக்களிக்கும் பாலுஞ்சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கினிய அடியவர்தம் கூட்டமளிக்கும் குணமளிக்கும்
ஆடற்கினிய நெஞ்சே!நீ அஞ்சேல்என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கரிய திருவளிக்கும் சிவாயநம என்றிடுநீறே.
-இராமலிங்க அடிகளார்.

 

0 Comments

Leave A Reply