10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஜூலை மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும்…….

எ‌ண் – 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் புது வழியில் சில முயற்சிகள் செய்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

ஆன்மீக பயணங்கள் நல்ல விதத்தில் அமையும். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். என்றாலும் தொண்டை வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு, சகோதர வகையில் மனத்தாங்கல் வரக்கூடும். மனைவியின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். ஆனால் மாதத்தின் மையப் பகுதியிலிருந்து அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் ஓயும். திட்டமிடாத செலவுகளையும் சமாளிக்க வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. ஆனால் தடாலடியாக பெரிய முதலீடுகளை போடாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். உயரதிகாரி பாராட்டும்படியாக சில விஷயங்களை இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். எதார்த்தமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 10, 21
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

எ‌ண் – 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிர்பார்த்த காரியங்களை தடையின்றி முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த மூட்டு வலி, முழங்கால் வலியெல்லாம் நீங்கும். பணவரவு உண்டு.

பழைய சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வெடிக்கும். இளைய சகோதரரால் ஆதாயம் உண்டு.

புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. தள்ளிப் போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். பால்ய சினேகிதர்களின் சந்திப்பு நிகழும். ஆனால் முன்கோபம், வீண் அலைச்சல் வரும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். தொலை நோக்குச் சிந்தனையால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 2, 6, 11, 16, 25
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

எ‌ண் – 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தாரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு விலகும்.

சொந்தம்-பந்தங்களின் சுயரூபம் தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை செய்வீர்கள். என்றாலும் சிம சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள்.

மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். பிரபலங்களால் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும்.

கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளின் சந்திப்பு கிட்டும். பங்குதாரர்களின் பிடிவாதத்திற்கு செவி சாய்க்காதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். பழைய பிரச்சனைக்கு தீர்வு காணும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 3, 12, 10, 21, 27
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், இளம் சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

எ‌ண் – 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாததத்தில் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் நல்ல மனசை புரிந்து கொள்வார்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முடியாமல் போன சில காரியங்களை முடித்துக் காட்டும் மனப்பக்குவம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். அண்டை வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உத்யோகத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாகப் பேசுவதால் மேலதிகாரி உங்களின் துணிச்சலைப் பாராட்டுவார். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 4, 8, 17, 24, 26
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

எ‌ண் – 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இதமான பேச்சு, மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.

அரசாங்க அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியுண்டு. மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்றாலும் மன உளைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண் காணிப்பது நல்லது. மகளின் கல்யாணத்திற்காக கொஞ்சம் அலைய வேண்டி வரும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து புகழ், கௌரவம் கூடும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். ஒருபடி முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 5, 1, 14, 15, 26
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

எ‌ண் – 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமைக் கிட்டும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மாதத்தின் மையப் பகுதியில் வீண் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் புதுத் தெம்பை தரும். வெளியூர் பயணங்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் அறிவரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் நம்பிக்கைக்குறியவரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் வீண் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். போராடி இலக்கை எட்டும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 6, 8, 15, 17
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

எ‌ண் – 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள்.

பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். என்றாலும் மருத்துவச் செலவு, மனைவிக்கு கர்பப்பை வலி வந்துப் போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் கிட்டும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 7, 11, 15, 24, 25
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

எ‌ண் – 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்தது நிறைவேறும். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் மணப்பெண் அமைவாள். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிதாக ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு உடல் நிலை பாதிப்பு வந்துப் போகும்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி, நாட்டினாரால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 8, 17, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 1, 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

எ‌ண் – 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

தோற்றப் பொலிவுக் கூடும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். என்றாலும் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சகோதரங்கள் கோபப்படுவார்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கலைத்துறையினரே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 9, 3, 12, 24
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

 

0 Comments

Leave A Reply